கல்லூரி மாணவியிடம் அத்துமீறல் ! கையும் களவுமாக சிக்கிய பேராசிரியா்!
செல்போனில் ஆபாச பேச்சு
திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் தமிழ் துறை உதவி பேராசிரியர் தி.நாகராஜ் 47/25 த.பெ தியாகராஜன், பாரதிநகர் விரிவாக்கம், முசிறி, திருச்சி என்பவர் அதே கல்லூரியில் பயின்று வரும் 17 வயது மாணவியிடம் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாச வார்த்தைகள் பேசி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி ஆபாசமாக பேசிய செல்போன் பதிவினை கல்லூரி முதல்வரிடம் தெரிவித்து மேற்படி சம்பவம் உண்மை என கல்லூரி நிர்வாக விசாரணையில் தெரிய வந்ததன் பேரில் 11.09.2025 மேற்படி உதவி பேராசிரியர் நாகராஜ் கல்லூரியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் நேற்று (12.09.2025) புகார் கொடுத்ததன் பேரில் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண் .33/2025 U/s 11(i), 11(iv), 11(vi), R/w 12 of POCSO Act 3(1) (w) (2) and 3(2) (va) of SC/ST (POA) Act 1989-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு (13.09.2025) அன்று சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளிடம் யாரேனும் ஆபாசமாக பேசினாலோ, வேறு ஏதும் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்தாலோ பாதிக்கப்பட்ட மாணவிகள் எந்தவித பயமுமின்றி திருச்சி மாவட்ட காவல் உதவி எண் 8939146100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு 24 மணிநேரமும் புகார் அளிக்கலாம் எனவும், இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.