35 லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்திய கல்லூரி மாணவி…

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

சென்னையில் இருந்து ரூ.35 லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்திய கல்லூரி மாணவியை மங்களூரு அருகே போலீசார் கைது செய்தனர்.கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு முல்கி ரெயில் நிலைய சாலை பகுதியில் போதைப் பொருள் கடத் தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் முல்கி போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ரகசிய தகவல்:

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த ஒரு இளம் பெண்ணை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், அவரது உடைமைகளை போலீசார் சோதனை செய்தனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ரூ.35 லட்சம் கஞ்சா:

அதில் அவரிடம் ரூ.35 லட் சம் மதிப்பிலான 1 கிலோ 42 கிராம் எடை கொண்ட உயர்ரக ‘ஹைட்ரோபோனிக் கஞ்சா’ இருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. இதையடுத்து கஞ்சா மற்றும் இளம் பெண்ணின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அந்த பெண்ணை கைது செய்தனர். விசாரணையில், அவர் சிவமொக்கா மாவட்டம் ஹூலிதேவரா பானா பகுதியை சேர்ந்த சுஹானா (வயது 21) என்பதும், குந் தாப்புராவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.சி.ஏ. இறுதியாண்டு படித்து வரும் மாணவி என்பதும் தெரியவந்தது.

சென்னையில் இருந்து கடத்தல்:

கைது செய்யப்பட்ட சுஹானா, இந்த போதைப்பொருளை சென்னையில் இருந்து வாங்கி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் ஒப்புக்கொண்டார். மங்களூரு நகரில் உள்ள வசதி படைத்தவர்களுக்கும், இளைஞர்களுக் கும் அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்க அவர் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மாணவி சுஹானா ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், கவூர் போலீஸ் நிலையத்தில் ஒரு போதைப்பொருள் வழக்கும், பெங்களூரு சர்வதேச விமான நிலைய சுங்கத்துறையினரால் ஒரு கடத்தல் வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசாருக்கு தெரியவந்தது.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.