நற்றமிழ் வளர்த்த மதுரையில்  – ஆய்வரங்கம் – தேசிய பயிலரங்கம் கல்லூரி நிகழ்வுகளின் கதம்பம் !

மதுரை அமெரிக்கன் கல்லூரி, மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, மதுரை இலக்கிய மன்றம், அருணாச்சலா கல்வி அறக்கட்டளை, செந்தமிழ் கல்லூரி, மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் ஒருங்கிணைத்து நடத்திய பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பு.

0

நற்றமிழ் வளர்த்த மதுரையில்  – ஆய்வரங்கம் – தேசிய பயிலரங்கம் கல்லூரி நிகழ்வுகளின் கதம்பம் !

கணிப்பீட்டு கருவிகள் மற்றும் மூலக்கூறு பொருந்தச் செய்தல் – தேசிய பயிலரங்கம் !

ரோஸ்மில்

துரை அமெரிக்கன் கல்லூரியின் சுயநிதி பிரிவு இயற்பியல் துறை மூலம் கணிப்பீட்டு கருவிகள் மற்றும் மூலக்கூறு பொருந்தச் செய்தல் என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. முதுகலை சுயநிதி பிரிவு இயற்பியல் துறை தலைவர் முனைவர் ஞானசேகர் வரவேற்பு உரையை வழங்கினார். அமெரிக்கன் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் தவமணி கிறிஸ்டோபர் தலைமையுரை ஆற்றினார். இந்நிகழ்வில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

♦♦♦

- Advertisement -

- Advertisement -

வரலாற்று துணுக்குகள் !

துரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை மன்ற கூட்டம் முதல்வர் முனைவர் வானதி  தலைமையில் நடைபெற்றது. வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் சத்தியபாமா வரவேற்புரை ஆற்றினார். பச்சையப்பன் கல்லூரியின் வரலாற்று துறைத்தலைவர் முனைவர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளிடையே வரலாற்று துணுக்குகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பேராசிரியை முனைவர் செந்தாமரை தொகுத்து வழங்கினார். பேராசிரியை முனைவர் விமலா நன்றி கூற இந்நிகழ்வில் அனைத்துப் பேராசிரியர்களும் மாணவிகளும் கலந்து கொண்டனர்.

♦♦♦

மகளிர் சுடரொளி விருது !

4 bismi svs

துரை இலக்கிய மன்றமும் அருணாச்சலா கல்வி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய உலக மகளிர் தின விழா செந்தமிழ் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி விக்டோரியா கௌரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மகளிர் தின விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து கொண்டிருக்கும் பெண்களுக்கு மகளிர் சுடரொளி விருது கொடுத்து கௌரவித்தார்கள்.

♦♦♦

கலைஞரின் திரைக்கதையில் பன்முகப் பார்வை !

துரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறையில் 6-வது ஆய்வரங்கத்தில், முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறையின் தலைவர்  இணைப் பேராசிரியர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர்   முனைவர் சந்திரா தலைமையில் நடைபெற்ற விழாவில், உதவிப் பேராசிரியர் முனைவர் வளர்மதி ”கலைஞரின் திரைக்கதையில் பன்முகப் பார்வை” என்ற தலைப்பிலும்; கௌரவ விரிவுரையாளர்  முனைவர்  சுந்தரபாண்டியன் ”கலைஞரின் சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம் காட்டும் நாடக நெறிகள்” என்ற தலைப்பிலும் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கினார். இந்நிகழ்வில்ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

♦♦♦

மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் !

துரை நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க் கல்லூரி மகளிர் மையம் மற்றும் மேனாள்  மாணவர் சங்கம் நடத்திய மகளிர்  விழா, வைரவிழா அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உதவிப்பேராசிரியர் முனைவர் மலர்விழி வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் (பொ.,) மற்றும் மகளிர் மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாந்திதேவி  தலைமையுரையாற்றினார். துறைத்தலைவர் முனைவர் பூங்கோதை  முன்னிலை வகித்தார். அரசினர்  மீனாட்சி மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வளர்மதி வாழ்த்துரை வழங்கினார். கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பேராசிரியர்கள், அலுவலர்கள் மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

♦♦♦

ஷாகுல், படங்கள்: ஆனந்த்.

 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.