அதிமுக கொடியினை பிடுங்கி எறிந்ததால், இபிஎஸ் ஓபிஎஸ் அணியினர் இடையே வாக்குவாதம் !
சேலத்தில் இபிஎஸ் ஓபிஎஸ் அணியினர் அதிமுக கொடி கட்டுவதில் வாக்குவாதம், இபிஎஸ் அணியினர் அதிமுக கொடியினை பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு ஏராளமான காவல்துறையினர் குவிப்பு
சேலத்தில் ஓ பன்னீர்செல்வம் அணியினரின் சார்பில் மாநகர மாவட்ட கழக செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று, திருமண மண்டபத்தின் முன்பு பதாகைகள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது .
மேலும் 100 அடி தூரத்திற்கு அதிமுக கொடிகளை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சாலை இருபுறமும் நட்டு வைத்திருந்தனர் .இந்த நிலையில் இதனை அறிந்த எடப்பாடி பழனிசாமி அணியினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் தலைமையில் ஐம்பதுக்கு மேற்பட்டோர் திருமண மண்டபத்தின் முன்பு குவிந்து கொடியினை பயன்படுத்தக்கூடாது என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
அத்துடன் நட்டு வைக்கப்பட்டிருந்த கொடியினையும் பிடுங்கி எறிந்து ஓ பன்னீர்செல்வம் தரப்பினருக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது . இதனை அறிந்த அந்தப் பகுதிக்கு வந்த காவல்துறையினர் அனைவரையும் சமாதானம் செய்தனர் .
அப்பொழுதும் எடப்பாடி பழனிசாமி அணியினர் கொடியினை பயன்படுத்த அவர்களுக்கு எந்த ஒரு அனுமதியும் இல்லை கட்சி எங்களுடையது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டு அப்பகுதியில் இருந்தவர்களை அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து அதிமுக கொடியை ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி சேலம் டவுன் காவல் நிலையத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசலம் தலைமையில் அதிமுகவினர் மனு அளித்தனர். அதிமுக கொடி தொடர்பாக ஏற்பட்ட மோதல் சம்பவத்தால் சேலத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது .
திருமண மண்டபத்தில் முன்பு 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வருகின்றனர் தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் அணியினர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனுக்களை வழங்கி உள்ளனர்.