விவசாயிகளை மிரட்டும் மணல் மாஃபியா ! பம்மி பதுங்கும் பொதுப்பணித்துறை !!

0

விவசாயிகளை மிரட்டும் மணல் மாஃபியா ! பம்மி பதுங்கும் பொதுப்பணித்துறை !!

பொதுவில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களில் படியும் மண்ணை விவசாயப் பயன்பாட்டுக்காக மண் எடுத்துக்கொள்ள அனுமதிக்கும் நடைமுறை இருந்துவருகிறது.

இதன்படி, தேனி மாவட்டத்தில் மஞ்சளாறு வடிகால் கோட்ட பொதுப்பணித்துறை கண்மாய்கள்; முல்லைப்பெரியாறு கண்மாய்கள்; வைகை பாசன உபகோட்ட கண்மாய்கள் என மாவட்டம் முழுவதும் 136 கண்மாய்களில் விவசாயிகளுக்குத் தேவையான மண் அள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது.

சீலையம்பட்டி
சீலையம்பட்டி

- Advertisement -

இந்த கண்மாய்களுள் ஒன்றான சீலையம்பட்டி கண்மாயில் மண் அள்ளும் விவசாயிகளிடம், “விவசாயப் பயன்பாட்டுக்குத்தான் மண் அள்ளுகிறீர்களா? செங்கல் காளவாசல்களுக்கு மண் எடுக்கிறீர்களா? உங்களுடைய வண்டி பாஸ்-ஐ காட்டுங்கள்..” என்று விவசாயிகளை மிரட்டியிருக்கிறார்கள் சம்பந்தமில்லாத நபர்கள் இருவர்.

4 bismi svs

”அரசு அனுமதி பெற்று நாங்கள் மண் அள்ளுகிறோம். எங்களிடம் கேள்வி கேட்கவும். மண் அள்ளும் இடத்தை ஆய்வு செய்யவும் நீங்கள் யார்? அரசின் எந்தத் துறையிலிருந்து வந்திருக்கிறீர்கள்?” என்று விவசாயிகள் கேள்வி கேட்டதுதான், தாமதம்.

“நாங்கள் கம்பெனி ஆட்கள் எங்களுக்கு மாவட்டம் முழுவதும் கண்மாய்களில் சோதனை இட எங்களுக்கு அனுமதி உள்ளது. மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு சோதனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது” என்று திமிராக பேசியதுடன், அருகிலிருந்த பொதுப்பணித்துறை அலுவலரை மிரட்டி அவரிடமிருந்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டையும் வாங்கி சோதனையிட்டிருக்கிறார்கள், அந்த இருவர்.

பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கண்மாய்களில் மண் அள்ளுவதை பொதுப்பணித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளோ அல்லது மாவட்ட நிர்வாகமோ கண்காணிப்பதற்கு பதிலாக, இதற்கு சற்றும் தொடர்பில்லாத கங்காணிகள் இருவர் கேள்வி கேட்க அதிகாரம் அளித்தது யார்?

பெரியார் மற்றும் வைகை பாசன உத்தமபாளையம் உட் கோட்டம் பொதுப்பணித்துறையின் உதவி செயற்பொறியாளர் கதிரேசனின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். “இதில் நாங்க என்ன சார் பன்ன முடியும்? வேண்டுமானால், போலீசில் புகார் கொடுக்கச் சொல்லுங்கள்!” என்ற பதிலோடு நழுவிக்கொண்டார்.

“தமிழ்நாடு முழுக்க, கல்லு, மண், எந்த எழவ எடுக்கிறதா இருந்தாலும் இவங்க அனுமதியில்லாம ஒருபய எடுத்துற முடியாது. மொத்த காண்ட்ராக்ட் இவங்க கிட்டதான். இதுக்கு முன்னாடி எஸ்.ஆர். குரூப்னு இருந்துச்சு. இப்ப எந்த குரூப்னு தெரியல. எந்த மாவட்டமானாலும் சரி. அவன் சொந்த பட்டா இடத்தில எடுக்கிறதா இருந்தாலும் சரி. இவங்க அனுமதியில்லாம எதுவும் பண்ண முடியாது. மணல் காண்ட்ராக்ட் யாருக்கு கொடுக்கனும்னு இவங்க கை காட்ற ஆளுங்களுக்குத்தான் அதிகாரிங்களே அனுமதி கொடுக்க முடியும். அம்புட்டு பவரு இவங்களுக்கு…” என்கிறார், பெயர் வெளியிட விரும்பாத அறுவது வயதை கடந்த அந்த விவசாயி.

– ஜெ.ஜெ.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.