அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கோவில்பட்டி அருகே கண்மாயில் கட்டிட தொழிலாளி வெட்டி கொலை – போலீசார் விசாரணை

0

திருச்சியில் அடகு நகையை விற்க

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள செண்பகப்பேரி கிராமம் துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செண்பகராஜ் என்பவருடைய மகன். இவர் கட்டிட தொழில் செய்து வந்துள்ளார். இன்று காலையில் வழக்கம்போல காலை கடன்களை முடிப்பதற்காக அந்த கிராமத்தில் உள்ள கண்மாய்  பகுதிக்கு சென்றுள்ளார். வெளியே சென்றவர் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த பாண்டிராஜ் குடும்பத்தினர் அவரைத் தேடிப் பார்த்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டபாண்டியராஜ்(25)
கொலை செய்யப்பட்ட பாண்டியராஜ்(25)

 

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

அப்போது கண்மாய் பகுதியில் வெட்டு காயங்களுடன் பாண்டியராஜ் சடலமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நாலாட்டின்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து பாண்டிராஜ் உடலை கைப்பற்றி  உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்தினை  கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோத காரணமாக இந்த கொலைச் சம்பவம் நடந்ததா? அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Admission Enquiry Form

காலைக்கடன்களை முடிக்கச்  சென்ற கட்டிட தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

—-   மணிபாரதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.