ஒரே நொடியில் ஜாதி மற்றும் தீண்டாமை ஒழிய ஒரே தீர்வு…!

0

ஒரே நொடியில் ஜாதி மற்றும்

தீண்டாமை ஒழிய ஒரே தீர்வு…!

https://businesstrichy.com/the-royal-mahal/

தீண்டாமை மற்றும் ஜாதீயக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற ஒரே தீர்வு இஸ்லாம் மார்க்கத்தை ஏற்பதுதான் என திராவிட தமிழர் கட்சி பிரமுகரான மூத்த வழக்கறிஞர் பெ.சின்னசாமி கூறியுள்ளார்.

வேர்கள் பதிப்பகம் சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற்ற வாழ்நாள் சாதனையாளர் ஹாஜி முஹம்மது ஜக்கரியாவின் வாழ்க்கை வராலாறான ‘சிக்கல்நாயக்கன் பேட்டையிலிருந்து புனித மக்கா மாநகரம் வரை’ என்ற நூல் வெளியீட்டு விழாவின்போது, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து போராடிவரும் தஞ்சாவூர் வழக்கறிஞர் சின்னசாமி வழங்கிய ஆய்வுரையை தாருல் இஸ்லாம் ஃபவுண்டேசஷன் டிரஸ்ட் என்ற அறக்கட்டளை ‘ஒரே நொடியில் தீண்டாமை ஒழிந்துவிடும்’ என்ற தலைப்பில் நூலாகக் கொண்டுவந்துள்ளது.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இந்நூலின் வெளியீட்டு விழா தஞ்சாவூரில் சரோஜினி நினைவு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.


இந்நூலை ‘வைகறை வெளிச்சம்’ மாத இதழ் ஆசிரியர் எம்.குலாம் முஹம்மது வெளியிட, மௌலவி எம்.ஏ.முஹம்மது அசதுல்லாஹ் ஜமாலி பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நூலாசிரியர் வழக்கறிஞர் சின்னசாமி, சனாதனத்தை, தீண்டாமை மற்றும் ஜாதிக் கொடுமைகளை ஒழிக்க ஒரே தீர்வு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதுதான் என்றார்.


“உலகிலேயே கட்டாய மதமாற்றம் எது என்றால் நாங்கள் அனைவரும் இந்துவாக மதமாற்றம் செய்யப்பட்டதுதான். எப்போது நாங்கள் இந்து மதத்தை ஏற்றுக் கொண்டோம்?

நான் பிறந்த உடனேயே என் தாயும் தகப்பனும் எந்த மதமோ நானும் அந்த மதம் என்றே கூறுகிறார்கள்.

ஒரு கிறஸ்தவ தாய், தந்தையருக்கு பிறந்திருந்தாலும், பைபிளை ஏற்றுக்கொண்டு ஞானஸ்தானம் பெற்றால்தான் ஒருவன் கிறிஸ்தவன் ஆகமுடியும்.

அதேபோல, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரு தாய், தந்தையர்க்கு மகனாக பிறந்திருந்தாலும், குர்ஆனை ஏற்றுக்கொண்டு கலிமா ஓதி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால்தான் ஒருவன் முஸ்லிம் ஆகமுடியும்.

ஆனால் இந்துவாக என்ன செய்ய வேண்டும்?

இந்து மதத்தில் இருக்கிறவரை தீண்டாமை மற்றும் ஜாதீயக் கொடுமைகளை ஒழிக்க முடியாது. தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து போராடிக் கொண்டேதான் இருக்க வேண்டும்.

வேங்கை வயல் சம்பவமே அதற்கு ஒரு சிறந்த உதாரணம். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கழிந்து அதை குடிக்கச் செய்திருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான இதுபோன்ற வன்முறைகளை இந்து மதம் அனுமதிக்கிறது.


இன்னொரு தொட்டி கட்டுவது இதற்கு தீர்வு அல்ல. அதில் வந்து அவர்கள் மலம் கழிக்க மாட்டார்களா?

மனிதனுக்கு சுய மரியாதைதான் முக்கியம். பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் அனைவரும் உடனடியாக மதம் மாறியிருக்க வேண்டும். இந்து மதத்தைவிட்டு வெளியேறி இருக்க வேண்டும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அதை தலைவர்கள் முன்மொழிந்திருக்க வேண்டும். நாம் மதம் மாறிவிட்டால் தலைமுறை தலைமுறையாக அனுபவித்துவரும் இதுபோன்ற கொடுமைகள் அனைத்தும் ஒரே நிமிடத்தில் ஒழிந்துவிடும்.

ஆனால் தங்களது அரசியல் சுய லாபத்திற்காக தலைவர்கள் இதை முன்னெடுப்பதில்லை.

புத்தமதம் இன்று இந்து மதத்திற்குள் இருக்கிறது. புத்த மதத்திற்கு அம்பேத்கர் சென்றார். என்ன ஆனது? கிறிஸ்தவ மதத்தில் ஜாதீய பாகுபாடு இருக்கிறது. சீக்கி மதத்திலும் ஜாதீய பாகுபாடு இருக்கிறது.

ஆனால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அந்த நிமிடத்திலிருந்து நீங்கள் முஸ்லிம். நீங்கள் பறையர் கிடையாது, பள்ளன் கிடையாது, தோட்டி கிடையாது, சக்கிலியன் கிடையாது.

இன்றைக்கு இந்த தீண்டாமை கொடுமையிலிருந்து விடுதலை பெற, ஜாதீய கொடுமைகளிலிருந்து விடுதலை பெற இருக்கிற ஒரே மாற்று தீர்வு இஸ்லாம்.

கத்தி எடுக்க வேண்டாம். ரத்தம் சிந்த வேண்டாம். துப்பாக்கி ஏந்த வேண்டாம். கலிமா மட்டும் சொன்னால் போதும். ஒரே நொடியில் தீண்டாமை ஒழிந்துவிடும். அதைத்தான் தந்தை பெரியார் ‘இஸ்லாமே அருமருந்து’ என்ற நூலில் கூறியிருக்கிறார்.

உங்களை சகோதரர்களாக ஏற்றுக் கொள்கிற, மனிதனாக மதிக்கிற ஒரு மதத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்கிறார் பெரியார்.

டாக்டர் அம்பேத்கரும் இதைத்தான் கூறுகிறார்,” என்றார் வழக்கறிஞர் பெ.சின்னசாமி.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ‘வைகறை வெளிச்சம்’ மாத இதழ் ஆசிரியர் எம். குலாம் முஹம்மது பேசுகையில், 30-40 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு தற்போது போராட வேண்டிய சூழ்நிலை இல்லை என்றார்.


“தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக தினமும் மூன்று கொடுமைகள் நடக்கின்றன. அவற்றிற்கு தீர்வு காண்பது நமது வேலையா? அல்லது தலைமுறை தலைமுறையாக அதை எதிர்த்து போராடிக் கொண்டிருப்பதே நமது வேலையா?

தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் அப்போது நடைபெற்ற ஒரு விஷயம் மறைக்கப்பட்டுவிட்டது.

வைக்கம் போராட்டத்தின்போது தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 52 பேர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

தீண்டாமை ஒழிய இஸ்லாத்துக்கு போங்க என பெரியார் கூறியுள்ளார். யாருக்கெல்லாம் சூடு, சொரணை இல்லையோ அவர்களெல்லாம் போங்க என சொல்ல மாட்டோம் என தந்தை பெரியார் கூறியுள்ளார்’ என்றார் குலாம் முஹம்மது.

முன்னதாக, தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.அப்துல் ரவூஃப் வரவேற்றார்.


ஆதித் தமிழர் விடுதலைக் கட்சி அமைப்பாளர் விடுதலை வீரன் நூல்கள் ஆய்வுரை வழங்கினார்.

ஆதித் தமிழர்  பேரவை மாவட்டச் செயலாளர் எல்.வி.ரங்கராஜ், முன்னாள் மாவட்டச் செயலாளர் இ.ரா.மாயன், கௌரவத் தலைவர் நாத்திகன், திமுக பிரமுகர் பழ. மாவீரன், வாழ்நாள் சாதனையாளர் ஹாஜி முஹம்மது ஜக்கரியா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.