அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

குழந்தைகளுக்கு வரும் அதீத காய்ச்சலை ஒட்டிய வலிப்பு – எப்படிக் கட்டுப்படுத்துவது ?

திருச்சியில் அடகு நகையை விற்க

வைரஸ் காய்ச்சல்கள் பருவகாலங்களில் பரவி வரும் சூழ்நிலையில் குழந்தைகளை ப்ளூ வைரஸ்கள் தாக்கும் போது அதீத ஜுரத்தை வரவழைக்கின்றன.

நான் தற்போது கேள்விப்படுவது குழந்தைகளுக்கு ப்ளூ வைரஸ் தொற்றால்  வரும் காய்ச்சல் 101 டிகிரி ஃபாரன்ஹீட் ( 38 டிகிரி செல்சியஸ்) தாண்டுகிறது.  102 ,103 எல்லாம் தொடுகிறது எனும் போது காய்ச்சலுடன் கூடிய வலிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, பெற்றோர்களும்  குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பில் இருக்கும் தாத்தா பாட்டிகள் பேபி சிட்டர்கள் இது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

உடலின் வெப்பநிலை 101டிகிரியைத் தாண்டும் போது மூளையின் வெப்பமும் அதிகரிக்கிறது. இதனால் மிகவும் சூடாகும் நமது செல்போன்கள் தானாக ரீஸ்டார்ட் ஆகும் இல்லையா அது போல,   மூளை சற்று நேரம் ஸ்விட்ச் ஆஃப் ஆகி உடனே தானாக ஸ்விட்ச் ஆன் ஆகுவதை வலிப்பாக நாம் காண்கிறோம்.

வலிப்பு தடுப்பு முறைகாய்ச்சலுடன் கூடிய வலிப்பு எப்படி ஏற்படும்?

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

குழந்தையின் உடல் திடீரென விரைப்பாக முறித்துக் கொள்ளும்.  பிறகு இரு கை இருகால் வலிப்பு வெட்ட ஆரம்பிக்கும்.  சிறிது நேரம் மூர்ச்சை நிலையில் இருக்கும். மூர்ச்சை நிலையில் சுய நினைவின்றி சிறுநீர் மற்றும் மலம் கழிக்கும் வாய்ப்பும் உண்டு. வாந்தி எடுக்கக்கூடும். வாயில் நுரை தள்ளக்கூடும். கண்கள் மேலெழும்பி நிலை குத்தி நிற்கும் – இவ்வாறாக வலிப்பு ஏற்படும்.

இத்தகைய காய்ச்சலில் ஏற்படும் வலிப்பு  சில நொடிகள் முதல் சில நிமிடங்கள் வரை நீடிக்கக்கூடும். பொதுவாக ஐந்து நிமிடங்களுக்குள் வலிப்பு தானாக குணமாகி குழந்தை பழைய நிலைக்குத் திரும்பி விடும். அதிகபட்சமாக 15 நிமிடங்கள் வரை இந்த வலிப்பு நிகழ்வு ஏற்படலாம்.

காய்ச்சல் தொடங்கிய 24 மணிநேரத்திற்குள் ஒரு முறை மட்டுமே இந்த வலிப்பு வரும். இதை “சாதாரண காய்ச்சலுடன் கூடிய வலிப்பு” SIMPLE FEBRILE SEIZURE என்று வகைப்படுத்துகிறோம். குழந்தை பிறந்து ஆறு மாதம் தொடங்கி அறுபது மாதங்கள் வரை அதாவது அரை வயது முதல் ஐந்து வயது வரை இந்த வலிப்பு காய்ச்சலுடன் ஏற்படலாம்.

எப்படிக் கட்டுப்படுத்துவது?

காய்ச்சலின் போது ஏற்படும் அதீத உடல் வெப்பத்தால் இந்த வலிப்பு தூண்டப்படுவதால், உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும். பாராசிட்டமால் மருந்தை குழந்தையின் எடைக்கு ஏற்ப வழங்க வேண்டும். காய்ச்சல் ஏற்படுவதை அறிந்த உடனே பாராசிட்டமால் வழங்கப்பட வேண்டும். சில நேரங்களில் வைரஸ் தொற்றுகளில் பாராசிட்டமாலுக்கு காய்ச்சல் குறையாத தன்மை இருக்கும்.

அப்போது உடல் முழுவதும் அறை வெப்பத்தில் இருக்கும்  நீரில் ( குழாயில் இருந்து வரும் நீர் 32.2 டிகிரி செல்சியஸ் – 35 டிகிரி செல்சியஸ்) ஒற்றி எடுத்த துணியைக் கொண்டு தொடர்ந்து உடல் முழுவதும் துடைத்து எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். உடல் வெப்பத்தைக் குறைப்பதில் மிகுந்த பலனைத் தரும் செயலாகும். வெப்பமான நீர் கொண்டு ஒத்தடம் கொடுக்கக் கூடாது.

ப்ளூ வைரஸ் தொற்றுகள் பரவும் காலத்தில் பாராசிட்டாமலுடன் இன்னும் சில இணை மருந்துகள்  காய்ச்சலை நன்றாகக் கட்டுப்படுத்த மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும். அவற்றை 101 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருக்கும் பட்சத்தில் மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் கொடுக்கலாம்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

வலிப்பு ஏற்படும் போது என்ன செய்வது?

முதலில் பெற்றோர்  பதட்டம் கொள்ளாமல் இந்த நிகழ்வை அணுக வேண்டும். காய்ச்சலின் போது ஏற்படும் சாதாரண வலிப்பு என்பது குழந்தையின் மூளைக்கோ அதன் சிந்தனை சக்திக்கோ அறிவுத்திறன் மற்றும் நியாபக சக்திக்கோ எந்த நாள்பட்ட பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. எனவே அச்சமின்றி இந்த நிகழ்வை அணுகும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

குழந்தையை ஒருபக்கமாக “மீட்பு நிலையில் “(RECOVERY POSITION)  படுக்க வைக்க வேண்டும். இறுக்கமான ஆடைகள் அணிந்திருப்பின் அதைக் களைய வேண்டும் / தளர்த்தி விட வேண்டும். வலிப்பு ஏற்படும் போது அதை தடுக்கவோ கையைக் கொண்டு அழுத்தம் தரவோ கூடாது. வலிப்பு ஆரம்பித்த நேரம் முதல் அது முடியும் நேரத்தை குறித்துக் கொள்ள வேண்டும். வலிப்பு ஏற்படும் குழந்தைக்கு அருகில் கடினமான அல்லது கூர்மையான பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வலிப்பு தடுப்பு முறைமிக முக்கியமாக வலிப்பு ஏற்படும் குழந்தைக்கு வாய் வழியாக நீரோ/ டானிக்கோ ஊற்றக்கூடாது. புரையேறி நுரையீரலுக்குள் செல்ல வாய்ப்பு உண்டு. அது ஆபத்தாகிவிடும்.

வலிப்பு ஏற்படும் குழந்தையை உடனே அள்ளிப்போட்டுக் கொண்டு அரக்க பறக்க மருத்துவரைத் தேடி ஓடுவதும் தவறான செய்கை.

அதீத ஜூரம் மட்டுமே காரணமாக அமையும் வலிப்பு – தானாக சில நிமிடங்களில் குணமாகும். குழந்தையும் சுயநினைவுக்கு மீண்டும் வரும். அப்போது பதறாமல் குழந்தையை அழைத்துக் கொண்டு மருத்துவரை சந்திக்க வரலாம்.

வலிப்பு ஏற்படும் போது கையை மடக்கி காலை மடக்கி தூக்கிப்போட்டுக் கொண்டு ஓடுவதை விட, குழந்தையை மீட்பு நிலையில் கிடத்தி வலிப்பு நின்றதும் மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது.

இதுவே வலிப்பு தொடர்ந்து ஐந்து நிமிடங்களுக்கு மேல் நிற்காமல் இருந்தாலோ, வலிப்பு நின்றும் குழந்தை தன் சுய நினைவுக்குத் திரும்பாமல் இருந்தாலோ, அவசர சிகிச்சைப் பிரிவிற்கு “மீட்பு நிலையில்” குழந்தையைக் கிடத்தி அழைத்துச் செல்வது நல்லது.

அவசர சிகிச்சை நிலையத்தில் / மருத்துவமனையில் வலிப்பை மட்டுப்படுத்தும் மருந்துகள் – ஆசன வாய் வழியாகவோ / நேரடியாக ரத்த நாளம் வழியாகவோ உடனடியாக செலுத்தப்படும். வலிப்பும் நிற்கும்.  இதுவே வலிப்பு நிகழ்வை அணுக வேண்டிய முறையாகும்.

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா,

பொது நல மருத்துவர்,

சிவகங்கை.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.