அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘அங்கம்மாள்’

திருச்சியில் அடகு நகையை விற்க

டிசம்பா். 5  வெளியாகி இருக்கும் ‘அங்கம்மாள்’ ஆர்ட் பிலிமா? விருதுகளுக்கான படமா? வணிகப்படமா? இதை எந்த எல்லைக் கோட்டிலிருந்து பார்ப்பது? எதன் அடிப்படையில் விமர்சிப்பது என்பது நமக்கு புரியவில்லை. எந்த கோட்டில் இருந்து பார்த்தாலும் பல கோளாறுகள் இருக்கத்தான் செய்கின்றன. எனவே ‘அங்கம்மாள்’  பிரிவியூ ஷோ & பிரஸ் ஷோவுக்கு பிறகு  நேர்மறையான பாராட்டுகளைப் பெற்றதால் நமது எதிர்மறை கருத்துக்களை பதிவு செய்வது நாகரீகமாக இருக்காது. ஏன்னா நேர்மறை விமர்சனங்களால் 90-க்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாவதைப் பற்றி  தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர். அவர்களின் மகிழ்ச்சி நீடிக்கட்டும். அந்த மகிழ்ச்சியை மட்டும் நாம் பதிவு செய்வதால் மார்க் பதிவு செய்யவில்லை.

அங்கம்மாள்‘ஸ்டோன் பெஞ்ச்’  கார்த்திகேயன்,

இந்த வார JANUARY 15 - 21 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

“அங்கம்மாள் படத்தை ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் நம்பினோம். சொல்ல வந்த விஷயத்தை ‘அங்கம்மாள்’ மென்மையாகப் பேசினாலும் நீண்ட காலத்திற்கு இந்தக் கதை பற்றி பார்வையாளர்கள் பேசுவார்கள். கதையின் நேர்மையை புரிந்து கொண்டு பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்வதைப் பார்ப்பது மிகவும் நிறைவாக இருக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவும், குறிப்பாக கீதா கைலாசம் மற்றும் சரண் சக்தி இருவரும் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ’அங்கம்மாள்’ படத்தின் மீது நாங்கள் வைத்த நம்பிக்கை இப்போது அதிகரித்திருக்கும் திரையரங்குகள் எண்ணிக்கையிலும் பிரதிபலித்திருக்கிறது. நேர்மையான கதைகள் பார்வையாளர்களை சென்றடையும் என்பதற்கு ‘அங்கம்மாள்’ படம் சமீபத்திய உதாரணம். இந்த அற்புதமான படைப்பினை கொடுத்த இயக்குநர் விபினுக்கு நன்றி”.

அங்கம்மாள்தயாரிப்பாளர் ஃபிரோஸ் ரஹிம்,

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

“இந்தப் படம் தாய்மை, கண்ணியம் மற்றும் சாதாரண பெண்களின் அமைதியான வீரத்தை கொண்டாடுகிறது. இதுபோன்ற கதைகள் அரிதாகவே சொல்லப்படும். சிங்க்-சவுண்ட் பதிவு மற்றும் ஒளிப்பதிவு படக்குழுவினருக்கு சவாலான விஷயம் என்பதை மறுக்க முடியாது. அந்த சவாலை ஒட்டுமொத்த படக்குழுவினரும் ஆர்வத்துடன் எடுத்து செய்தனர். பிரீமியர் ஷோவில் கிடைத்த பாராட்டுகள் எங்களின் உழைப்பை பெருமைப்படுத்தியது. இந்தத் தருணத்தில், படப்பிடிப்பின் போது எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்த ஒட்டுமொத்த கிராமத்தினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் ‘அங்கம்மாள்’ இல்லை”.

ஒளிப்பதிவாளர் *அஞ்சாய் சாமுவேல்,

“உணர்வுகளும் கலையும் ஒருசேர பயணிக்கும்போது சினிமா அர்த்தமுள்ளதாகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு உருவானதுதான் ’அங்கம்மாள்’ படம். பெரும்பாலும் காட்சிகள் மூலம் கதை சொல்லப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஒவ்வொரு நடிகரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்துள்ளனர். பிரிமீயர் ஷோவில் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஒட்டுமொத்த குழுவினரின் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கிறேன். இந்தக் கதை மீது நாங்கள் என்ன நம்பிக்கை வைத்தோமோ பார்வையாளர்களும் அதே நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி”.

நஜாய் பிலிம்ஸ் & ஃபிரோ மூவி ஸ்டேஷனுடன் இணைந்து, ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ’அங்கம்மாள்’ திரைப்படத்தை வழங்குகிறது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அங்கம்மாள்நடிகர்-நடிகைகள்:

கீதா கைலாசம், சரண் சக்தி, நாடோடிகள்  பரணி, முல்லையரசி, தென்றல் ரகுநாதன் மற்றும் வினோத் ஆனந்த்.

படக்குழு

திரைக்கதை, இயக்கம்: விபின் ராதாகிருஷ்ணன்,

மூலக்கதை: எழுத்தாளர் பெருமாள் முருகன்,

தயாரிப்பாளர்கள்: கார்த்திகேயன் எஸ். , ஃபிரோஸ் ரஹிம் மற்றும் அஞ்சாய் சாமுவேல்,

இணைத்தயாரிப்பு: ஷம்சுதீன் காலித் மற்றும் அனு ஆபிரகாம்,

ஒளிப்பதிவு: அஞ்சாய் சாமுவேல், இசை: முகமது மக்பூல் மன்சூர்

—   ஜெ.டி.ஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.