அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

“ஜி.டி.நாயுடுவைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது”

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மாதவன் சொன்னது!

ட்ரைகலர் பிலிம்ஸுடன் இணைந்து வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள புரட்சிகர தொழிலதிபர், அறிவியல் விஞ்ஞானி மற்றும் கொடையாளர் ஜி.டி. நாயுடுவின்  வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘ஜிடிஎன்’ ஆக.07- ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. நடிகர்கள் மாதவன், சத்யராஜ், ஜெயராம், ஜான் விஜய், கருணாகரன்,, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அதிதி பாலன், விஜய் யேசுதாஸ், வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஆக.04- ஆம் தேதி மதியம் சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இதில் பேசியவர்கள்……

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

நடிகர் முரளி, “இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் முக்கியமான படம் இது. இதில் மோகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்”

ஜி.டி. ராஜ்குமார், “இது சினிமாவாக விதை போட்டவர் அரவிந்த் தான். அவர்தான் எனக்கு கிருஷ்ணாவை அறிமுகப்படுத்தினார். கதையை பாட்காஸ்ட்டாக கிருஷ்ணா கொண்டு வந்தார். ஏற்கனவே சிலர் கதை சொல்லியிருந்தாலும் கிருஷ்ணாவின் பாட்காஸ்ட் கதையில் நிறைய ஆராய்ச்சி செய்து மெனக்கெட்டிருந்தார். அதனால்தான் என் அம்மா, அப்பா உடனே படமாக்க ஒத்துக்கொண்டார்கள். சில திருத்தங்களோடு படமாக்கியுள்ளோம். அடுத்த தலைமுறைக்கும் அவரின் பணிகள் சென்று சேர வேண்டும். இந்த சினிமாவில் அவரது வாழ்க்கை வரலாற்றில் எந்தளவுக்கு உண்மை என்று என்னைக் கேட்டால் 70% உண்மை என்பேன்”.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

“ஜிடிஎன்“நடிகை அதிதி பாலன்  “பத்மாவதி என்ற எனது கேரக்டர் வழியாகத் தான் ஜிடி நாயுடு பற்றிய கதை விரியும். அவர் எப்படிப்பட்ட கண்டுபிடிப்பாளர் என்பதை இந்தப் படத்தின் மூலம் நிறைய தெரிந்து கொண்டேன். படம் தாண்டி இன்னும் பல விஷயங்கள் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்”.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

நடிகை துஷாரா விஜயன், “நான் நடித்த கதாபாத்திரங்களிலேயே இது வேறுபட்ட கதாபாத்திரம். தயாரிப்பாளர்கள், இயக்குநர், மாதவன் சாருக்கு நன்றி. சத்யராஜ் சாருடன் அடுத்த படமும் சேர்ந்து நடிக்கிறேன்”. *ஒளிப்பதிவாளர் அரவிந்த்*, “ஜி.டி. நாயுடுவின்  வாழ்க்கை வரலாற்றுக் கதை ஆச்சரியமானது. அவரது கதையை படமாக ஒருவர் சொல்லும்போது நிச்சயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. இது பயோபிக் படம் என்பதை தாண்டி கமர்ஷியல் படம் என்று சொல்லும் அளவிற்கு சுவாரஸ்யமானது. கதையை கேட்டதும் இதில் நடிக்க பொருத்தமானவர் மாதவன் சார்தான் என்பதை முடிவு செய்தோம். திரைக்கதையை படமாக்கும்போது பல சவால்கள் இருந்தன”.

சத்யராஜ், “கோயம்புத்தூரிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் இத்தனை நாட்களாக ஜி.டி. நாயுடு மியூசியத்தை சென்று பார்க்கவில்லையே என்ற குற்றவுணர்வு இந்தப் படத்தில் நடிக்கும்போது எழுந்தது. ஒவ்வொரு காட்சியிலும் நடிக்கும்போது இப்படி எல்லாம் நடந்திருக்கிறதா என்று ஆச்சரியமாக இருந்தது. ஒரு கமர்ஷியல் படத்திற்கு தேவையான விஷயங்களை விடவும் ஒருபடி அதிகமான விஷயங்கள் இந்தப் படத்தில் இருக்கிறது.ஜி.டி. நாயுடுவை ஒரு தமிழராக, இந்தியராக சுருக்கிவிட முடியாது. இதை மாதவன் எடுத்து நடித்தவிதம் ஆச்சரியமானது. எனக்கு ராமய்யா பிள்ளை என்ற கதாபாத்திரம். இதுவரை பயோபிக்கிலேயே இந்த படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்ற நம்பிக்கை உண்டு. இந்த படம் மிகவும் சிறப்பாக வரக்காரணம் ஜி.டி. நாயுடுவின் குடும்பம் தந்த ஒத்துழைப்புதான். ஜி.டி. நாயுடுவை போலவே இந்த படமும் பல புதுமையான விஷயங்களைக் கொண்டு வந்துள்ளது. மாதவனின் சினிமா பயணத்தில் இது முக்கியமான மைல்கல் படம்”.

தயாரிப்பாளர் வர்கீஸ் மூலன் “ராக்கெட்ரி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜி.டி.என். படத்திலும் இணைந்திருக்கிறோம். அந்தப் படத்தை போலவே இந்த படமும் நிச்சயம் பெரும் வெற்றியடையும் என்ற நம்பிக்கை உள்ளது. உங்கள் அனைவரது ஆதரவும் தேவை”.

இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார்,  “ஜி.டி. நாயுடு பற்றிய புத்தகம் ஒன்றை படித்த பொழுது ஒவ்வொரு கதையும் நல்ல காட்சியாக இருந்தது. அவர் யார் என்று தெரியும். ஆனால், அவர் எவ்வளவு பெரிய நபர் என்று தெரிந்து கொள்ள ஒரு நேரம் எடுத்தது. ஒரு இயக்குநராக இந்த கதையை நிச்சயம் படமாக்க வேண்டும் எனத் தோன்றியது. சாமானிய மனிதனுக்கும் பயன்பட வேண்டும் என்பதுதான் அவருடைய கண்டுபிடிப்பின் தலையாய நோக்கமாக இருந்தது. அப்படியான மகானை பற்றி படம் எடுக்க பெரும் பலமாக இருந்த எனது தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நன்றி! நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் இந்த படம் மிகவும் பிடித்திருந்தது என்று மாதவன் சொன்னார். லைப்ரரிக்கு சென்று நிறைய விஷயங்கள் ஜி.டி. நாயுடு பற்றி தெரிந்து கொண்டார்”.

 ஹீரோ மாதவன்,   “இந்தப் படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் ஜி.டி. நாயுடுவை பற்றி எனக்கு பெரிதாக தெரியாது. அதுவே மிகப்பெரிய குற்ற உணர்ச்சியாக இருந்தது. இவ்வளவு பெரிய மேதையைப்  பற்றி ஏன் நிறைய பேருக்கு தெரியவில்லை. இன்றைக்கு நடக்கும் பல விஷயங்களை அன்றே அவர் செய்துவிட்டார். அவர் செய்த பல மாற்றங்கள் பற்றியும் பேசியிருக்கிறோம். இந்த படத்தின் மீதும் என் மீதும் எந்த அளவுக்கு எனக்கு நம்பிக்கை இருந்ததோ, அதைவிட அதிக அளவில் நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி”.

—  ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.