நீதிமன்ற பெண் ஊழியர் தீக்குளிப்பு !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி மாவட்டம், துறையூர் குடில் ரோட்டில் வசித்து வந்தவர் அபிநயா (35). இவர் முசிறி நீதிமன்றத்தில் டைப்பிஸ்ட்டாக பணியாற்றி வந்தார். இவருக்கு ஏற்கனவே சூர்யா என்பவருடன் திருமணமாகி பெண் குழந்தை உள்ளது.

முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அபிநயா விவாகரத்து பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பெரம்பலூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (38) என்பவரை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

இந்நிலையில், நேற்று இரவு கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அபிநயா, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக தெரிகிறது.

அபிநயா
அபிநயா

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த சந்தோஷ்குமார், அபிநயாவை காப்பாற்ற முயன்றார். அப்போது அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதில் அபிநயாவின் உடலில் சுமார் 85 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது.

இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக இருவரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு அபிநயாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடலில் ஏற்பட்ட அதிகப்படியான தீக்காயம் காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது கணவர் சந்தோஷ்குமாருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குடும்பத் தகராறு காரணமாக நீதிமன்ற பெண் ஊழியர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் துறையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரச்சனைகளுக்கு தற்கொலை தீர்வல்ல..

மன அழுத்தமா? அழைக்க – 104

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.