பயணிகள் ரயில் மோதி பரிதாபமாக இறந்த பசு
பயணிகள் ரயில் மோதி
பரிதாபமாக இறந்த பசு
தஞ்சை மாவட்டம் பாபநாசம் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு தண்டவாளத்தின் குறுக்கே திடீரெனப் பாய்ந்த பசுவின் மீது பயணிகள் ரயில் மோதியதில் அப் பசு பரிதாபமாக இறந்தது.
விபத்துக்குள்ளான பயணிகள் ரயில் மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. பாபநாசம் ரயில் நிலையத்தில் வந்து கொண்டிருந்தபோது யாரும் எதிர்பாராவிதமாக பசு ஒன்று திடீரென தண்டவாளத்தின் குறுக்கே பாய்ந்தது.
இச் சம்பவத்தில் அப் பசு பலத்த அடிபட்டு, ரயில் இன்ஜினில் சிக்கி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக இறந்தது.
இவ்விபத்து காரணமாக ரயில் இன்ஜின் பழுதடைந்தது. பின்னர் கும்பகோணத்தில் இருந்து மாற்று இன்ஜின் வரவழைக்கப்பட்டு, பயணிகளை ஏற்றிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
இச் சம்பவம் காரணமாக தஞ்சாவூர்-கும்பகோணம் ரயில் பாதையில் திருச்செந்தூர் உழவன் எக்ஸ்பிரஸ் சுமாரம் 2 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.
இவ்விபத்து குறித்து கும்பகோணம் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.