நியோமேக்ஸ் நிலநிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் போலீசில் புகார் செய்யுங்கள் – உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை !

4

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நியோமேக்ஸ் நிலநிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் நீதிமன்றத்தில் மனு போடுவதை விட போலீசில் புகார் செய்யுங்கள் – நீதிபதி அறிவுரை

நியோமேக்ஸ் நிலநிதி நிறுவன நிர்வாகிகளுக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தால் போதாது என்றும், அந்த நிறுவனத்தால் பணத்தை இழந்தவர்கள் உடனடியாக போலீசில் புகார் அளிக்க வேண்டும் எனவும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி அறிவுறுத்தினார்.

 

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

Neomas_

மதுரை நியோமேக்ஸ் நிதி நிறுவன நிர்வாகிகளுக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தால் போதாது என்றும், அந்த நிறுவனத்தால் பணத்தை இழந்தவர்கள் உடனடியாக போலீசில் புகார் அளிக்க வேண்டும் எனவும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி அறிவுறுத்தினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

நில நிதிநிறுவன மோசடி மதுரையை தலைமை இடமாகக் கொண்டு நியோமேக்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.

இந்த நிலநிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை வழங்குவதாகவும், பின்னர் இரட்டிப்புத்தொகையை முதிர்வுத்தொகையாகவும் நிலமும் வழங்குகிறோம் என வசிய ஆசை வார்த்தைகளை திருச்சி மொராய்சிட்டி குளுகுளு ஏசி அரங்குகளில் பேசி வந்தனர்.

நியோமேக்ஸ் அலுவலகத்தில் சிக்கிய ஆவணங்கள்
நியோமேக்ஸ் அலுவலகத்தில் சிக்கிய ஆவணங்கள்

இதை நம்பி தமிழகம் முழுவதும் இலட்சகணக்கணக்கானோர் இந்த நிலநிதி நிறுவனத்தில் கோடி..கோடியாய் முதலீடு செய்தனர்.

இந்த நிதி நிறுவனம், சுமார் ரூ.5 ஆயிரம் கோடி முதல் 1 இலட்சம் கோடி வரை மோசடி செய்திருக்க வாய்ப்பு உள்ளது என்று கருதினர்.

இதன் அடிப்படையில் வந்த புகார்களை  மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குகளாக பதிவு  செய்தனர்.

neomax
neomax

இதன் அடிப்படையில் நிலநிதி நிறுவன இயக்குனர்கள் சிலர் கைதானார்கள். மேலும்  பல நூறு பேர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

முன்ஜாமீன் மனு இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்ட மனு ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டில் தள்ளுபடியானது.

நியோமேக்ஸ் மற்றும் துணை நிறுவன நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், கமலகண்ணன், நாராயணசாமி, மணிவண்ணன், செல்லம்மாள், திருச்சி ஆப்பிள் மில்லட் வீரசக்தி உள்ளிட்ட சிலர் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி மீண்டும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் திமுக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கா நீதிமன்றத்தில் வாதாடிய  என்.ஆர்.இளங்கோ நியோமேக்ஸ் நிலநிதி நிறுவனத்திற்காக ஆஜர் ஆகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, பொதுமக்களிடம் வசூலித்த தொகையை மனுதாரர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ததாக அரசு வக்கீல் தெரிவித்து இருந்தார்.

மதுரை பொருளாதர குற்றப்பிரிவு போலிஸ்
மதுரை பொருளாதர குற்றப்பிரிவு போலிஸ்

இந்தநிலையில் இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று 04.08.2023  மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல் ரவி ஆஜராகி, நியோமேக்ஸ் நிறுவன நிர்வாகிகளுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று 50-க்கும் மேற்பட்டவர்கள் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர்.

அவர்களில் 15 பேர் தான் நியோமேகே்ஸ் நிறுவனத்தினரால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்று போலீசில் புகார் அளித்து உள்ளனர். மற்றவர்கள் இதுவரை எந்த புகாரும் அளிக்கவில்லை.

நியோமேக்ஸ்

அவ்வாறு இருக்கும்போது இந்த வழக்கில் எப்படி இடையீட்டு மனுதாரர்களாக அவர்களை அனுமதிக்க முடியும்? என வாதாடினார்.

அறிவுறுத்தல் இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, முன்ஜாமீன் அளிக்கக்கூடாது என இடையீட்டு மனுவை தாக்கல் செய்தால் மட்டும் போதாது.

நியோமேக்ஸ் நிறுவனத்தினரால் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்தவர்கள் புகார் அளிக்காமல் இருந்தால், உடனடியாக போலீசில் புகார் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி, அடுத்த கட்ட விசாரணையை வருகிற ஆகஸ்ட் 10 – ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

4 Comments
  1. Krishna says

    என்ன நடக்கிறது? 15 வருடங்கள் நன்றாக இயங்கி வந்த நிறுவனம்,திமுக அரசு g square போன்ற நில விற்பனை செய்கின்றன, இந்த சூழலில் இந்த நிறுவனம் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது.நிறுவனம் தரும் மாத வருமானம் பெற்று அந்த நம்பிக்கையில் திருமணம் செய்து,குழந்தையுடன் இருக்கும் நிலையில் இந்த பிரச்னைகளால் மாத வருமானம் இல்லாமல் குடும்ப செலவுகளை செய்வதற்கு பணம் இல்லாமல் வேதனை தருகிறது.எனவே அரசு என்னை போன்று பாதிக்க பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

  2. Mohamed maideen says

    அமுதசுரபி என்று ஒரு நிறுவனம் 58 கோடி பொது மக்கள் பணத்தை மோசடி பன்னிருக்காங்க அத பத்தி சொல்லுங்க

    1. J.Thaveethuraj says

      அவசியம் விசாரித்து எழுகிறோம்..

  3. Bala says

    உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் கம்பளைன் செய்யலாம். ஆனால் ஒரு சிலர் மற்றவர்களை பயமுறுத்தி , நீங்கள் வந்து கம்பளைன் செய்யுங்கள், நீங்கள் வந்து கம்பளைன் செய்யுங்கள் என பலரை வந்து அழைப்பது எதற்காக என புரியவில்லை.

Leave A Reply

Your email address will not be published.