கம்ப்யூட்டர் – தையல் எந்திரம் வழங்கிய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஸ்டாஃப் யூனியன் !
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஸ்டாஃப் யூனியன் தொடங்கப்பட்டு 78 வது ஆண்டு நிறுவன நாள் விழா திருச்சி மெயின் கிளையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் துணை பொது செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஆண்ட்ரூஸ் பால்ராஜ், உதவி பொது மேலாளர் ஓம் பிரகாஷ், சென்ட்ரல் கமிட்டி மெம்பர் தங்கமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவில் மூத்த உறுப்பினர்கள் சுப்பிரமணியன், அசோகன், சந்திரா கில்பர்ட், அற்புதராஜ் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். முன்னதாக நிர்வாக அலுவலகத்தில் இருந்து சங்க உறுப்பினர்கள் ஊர்வலமாக விழா மேடை வந்தடைந்தனர். நிகழ்ச்சியில் நிறுவன நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நலிவடைந்த ஏழைப் பெண்ணுக்கு தையல் எந்திரம் மற்றும் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த பள்ளிக்கு கம்ப்யூட்டர் மற்றும் நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.