செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு உண்மைதான்: சிபிஎம் மாநிலச் செயலாளர் !
செந்தில் பாலாஜி மீதான
குற்றச்சாட்டு உண்மைதான்:
சிபிஎம் மாநிலச் செயலாளர் !
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் குற்றச்சாட்டு உண்மைதான் என இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தஞ்சையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.பாலகிருஷ்ணன், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதுள்ள குற்றச்சாட்டு உண்மைதான். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். அந்த ஊழல் குற்றச்சாட்டு மீது வழக்கு நடத்தி நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டும் என்றார்.
எங்களைப் பொறுத்தவரை, செந்தில் பாலாஜியை பாதுகாப்பதற்காக நாங்கள் கண்டிக்கவில்லை. அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பது உண்மைதான். அவர் மீது உள்ள குற்றச்சாட்டை விசாரணை செய்யவோ, நீதிமன்றம் தண்டனை வழங்குவதற்கோ நாங்கள் குறுக்கே நிற்கவில்லை என்றார் பாலகிருஷ்ணன்.
எங்களுடைய ஒரே வற்புறுத்தல் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை விசாரிக்க ஒரு முறை உள்ளது. அந்த முறையை மனித உரிமையை மீறி செயல்படுகிறார்கள் என்பதுதான் எங்களுடைய விமரிசனம் என்றார் பாலகிருஷ்ணன்.