அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் படைப்பிலக்கியப் பயிலரங்கம் !

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி செயின்ட ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறை திருச்சி வாழ்வு வெளியீடு, அங்குசம் இதழ், காவிரிக் கவித்தமிழ் முற்றம் மற்றும் வேர்கள் அறக்கட்டளை ஆகிய அமைப்புகளுடன் இணைந்து, கல்லூரி மாணவா்களுக்கான படைப்பிலக்கியப் பயிலரங்கை 2025 செப்டம்பர் 18 மற்றும் 19 ஆகிய நாள்களில் நடத்தியது. கல்லூரி அதிபர் அருள்முனைவா் பவுல்ராஜ் மைக்கேல் சே.ச. அவா்களின் தலைமையில் நடைபெற்ற இப்பயிலரங்கில் எம்.ஜே.எஃப் லயன் சௌமா இராஜரெத்தினம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்பித்தார்.

தொடக்கவிழாவில் தமிழாய்வுத்துறைத் தலைவா் முனைவா் ஆ.ஜோசப் சகாயராஜ் வரவேற்புரையாற்றினார். தமிழாய்வுத்துறைத் மேனாள் துறைத்தலைவா் முனைவா் ஞா.பெஸ்கி அறிமுகவுரையாற்றினார். கடந்த ஆண்டுப் பயிலரங்கில் மாணவா்கள் எழுதிய படைப்புகள் அடங்கிய விதைநெல் 2025 என்னும் இதழை கல்லூரிச் செயலர் அருள்முனைவர் மே.ஆரோக்கியசாமி சேவியர்இ சே.ச. வெளியிடஇ கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ்இ சே.ச. பெற்றுக்கொண்டு பாராட்டுரை வழங்கினர். திருச்சி வாழ்வு வெளியீடு இயக்குநர் அருள்தந்தை குடந்தை ஞானி வாழ்த்துரை வழங்கினார்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

படைப்பிலக்கியப் பயிலரங்கம்திருச்சிராப்பள்ளி எழுத்தாளர் முதுதமிழ் எழிலரசி கேத்தரீன் ஆரோக்கியசாமி, அங்குசம் செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிகையாளர் ஜெடிஆர், காவிரிக் கவித்தமிழ் முற்றத்தின் செயல் இயக்குநர் லி.மெர்சி டயானா, தமிழ்த்துறை பணிமுறை இரண்டின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சி.பாக்கிய செல்வ ரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினரைத் தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஆ.இராஜாத்தி அறிமுகம் செய்து உரையாற்றினார். திருச்சிராப்ள்ளி மாவட்ட எழுத்தாளர்சங்கத்தின் கௌரவத் தலைவரும், கல்வியாளருமாகிய எம்.ஜே.எஃப் லயன் சௌமா இராஜரெத்தினம் இளையோரை உற்சாகப்படுத்தி, எழத்தாளர்களின் தனித்துவத்தை மேற்கோளிட்டுப் பேசி, பயிலரங்கைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் லா.சார்லஸ் நன்றியுரையாற்றினார்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

‘படைப்பு மனமும் சொற்சிக்கனமும்’ என்கிற மையப்பொருளில் முனைவர் ஞா.பெஸ்கி அவர்களின் அமர்வு மாணவர்களின் மனநிலையை படைப்பாளர்களின் மனநிலையாக தடம் மாற்றியது.

படைப்பிலக்கியப் பயிலரங்கம்எழுத்தாளர், கதை சொல்லி, அருள்முனைவர் சேவியர் அந்தோணி சே.ச. அவர்களின் பேச்சாற்றல்  மாணவர்களிடையே படைப்பாற்றலை முடுக்கிவிட்டது. அவருடைய இனிய சந்திப்பு மாணவப் படைப்பாளர்களின் தேனூற்றாய் எனது மனதில் ஊறியது என்பது மறுக்க இயலாத உண்மை.

எழுத்தாளர் முனைவர் ஜா.சலேத் அனுபவங்களைப் படைப்பாக எழுதும் கலையை மிகச்சிறப்பாக எடுத்துரைத்தார். ஆதன் என்னும் கதாப்பாத்திரத்தை உருவாக்கிஇ அதன்மூலம் சமூகத்தின் எதார்த்தத்தை வாசகர்களுக்கு உணரவைக்கும் சூட்சமத்தை சான்றுகளோடு எடுத்துரைத்தார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தமிழ் முடியரசன் என்ற புனைபெயரில் இயங்கிவரும் முனைவர் ம. ஸ்டீபன் மிக்கேல் ராஜ் ஊடகப் பேச்சாளர்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு தலை சிறந்த தமிழ் பணி செய்து வருபவர். அவரின் இனிமையானஇ எளிமையான பயிற்சி மாணவர்கள் மனதில் படைப்பாற்றல் திறன் மேலோங்க திறவுகோலாக அமைந்தது.

படைப்பிலக்கியப் பயிலரங்கம்ஐந்து சி என்ற பொருளில் சிந்தனை சிறகை விரிஇ சிலம்பமாய் சொல்லாடுஇ சிற்பமாய் செதுக்குஇ சித்திரமாய் கொடுஇ சிகரத்தைத் தொடு எனத் தம் பயிற்சி யைத் தொடங்கியவர் மாணவர்களின் தனித்திறனை 17 தலைப்புகளில் எழுத வைத்தார்.

மின்னாற்றல் + அணுவாற்றல் = கவிதை என்கிற கவிஞர் திருவைக்குமரன் அவர்கள் முன்னணிக் கவிஞர்களுடைய கவிதைகளை வாசித்து கவிதை குறித்த புரிதலை ஏற்படுத்தினார். தொடர்ந்து தேர்தல், பெண், தாய் என மூன்று தலைப்புகளில் ஓர் தலைப்பில் கவிதை எழுத வைத்தார்.

படைப்பாற்றல் பயிற்சியில் அனுபவங்களும், புதுக்கவிதைகளும், சிறுகதையாகவும் எழுதி  அவரிடம் வந்து  ஆர்வமாக சமர்ப்பித்தனர். தேர்வுத்தாளைத் திருத்துவதுபோல திருத்தித் திருத்தி பயிற்சியாளர்கள் தந்தனர். கதையை எப்படித் தொடங்க வேண்டும்? எப்படி முடிக்க வேண்டும்? கவிதையை எப்படி எழுத வேண்டும்? என்பதனை அவர் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறுவதாக அமைந்தது. கவிஞா் வாழையூர் குணா உள்ளிட்ட எழுத்தாளர்களும் மாணவா்களுக்குப் படைப்பாற்றல் பயிற்சியை வழங்கினர்.

படைப்பிலக்கியப் பயிலரங்கம்இரண்டாம்நாள் நடைபெற்ற நிறைவு விழாவில் படைப்பிலக்கிய மன்றத் துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜா.ஸ்டெல்லாமேரி வரவேற்புரை வழங்கினார். இணை முதல்வர் முனைவர் த.குமார் சிறப்பு விருந்தினாராக வருகை தந்து பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டுரையாற்றினார். இப்பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளர் தூய வளனார் கல்லூரி தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியருமான முனைவா் ஜா.சலேத் நன்றியுரையாற்றினார்.  திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த 36 கல்லூரி மாணவர்கள் இப்பயிலரங்கில் பங்கேற்றுப் பயனடைந்தனர்.

மாணவனாக அனுப்பப்பட்டேன். எழுத்தாளனாகச் செல்கிறேன். பயிற்சியாளனாக இதே பயிலரங்கிற்கு அழைக்கப்படும் அளவுக்கு எழுத்தால் என்னை அடையாளம் காட்டுவேன். எழுதுவது எப்படி எனச் சொல்லித் தருவார்கள் என எதிர்பார்த்து வந்தேன். ஆனால் என்னவெல்லாம் செய்தால் எழுத்தாளனாகலாம் என உணர வைத்துள்ளார்கள். காகிதமும் ஆயுத்தே! எழுதுகோலும் நெம்புகோலே! மை ஒரு துளி. படைப்போ பெருவெள்ளம் என முனைவர் சலேத் அவர்கள் அடிக்கடிச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அது என் மனத்தின் அடி ஆழம் வரை ஊடுருவியுள்ளது. இப்படியான கருத்துகளுடன் எழுத்தாளர்களாக மாணவர்கள் விடைபெற்றனர்.

 

—       பிரான்சிஸ் ஆன்டனி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.