அங்குசம் பார்வையில் ‘கஸ்டடி’

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு: ’ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ்’ சீனிவாச சித்தூரி. டைரக்‌ஷன்: வெங்கட் பிரபு, இசை: மாஸ்ட்ரோ இளையராஜா& யுவன்சங்கர் ராஜா. நடிகர்—நடிகைகள்: நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த்சாமி, ப்ரியாமணி, சரத்குமார், சம்பத்ராஜ், ஒய்.ஜி.மகேந்திரா, பிரேம்ஜி. ஒளிப்பதிவு: எஸ்.ஆர்.கதிர், எடிட்டிங்: வெங்கட் ராஜென், ஸ்டண்ட்: ஸ்டண் சிவா. பி.ஆர்.ஓ.சுரேஷ்சந்திரா ‘டி ஒன்’.

அரசியல் கதைகள் என்றாலே வஞ்சம் தீர்ப்பது, காலை வாருவது, பழி வாங்குவது, பலி கொடுப்பது  என பார்த்துப் பழகிய நமக்கு, ‘மாநாடு’ படத்தில் வெங்கட் பிரபு அரசியலை அணுகியவிதம், புரிதல் இவையெல்லாம் பார்வையாளனுக்கு புதுவித அனுபவத்தைத் தந்தது. அதே போல் இந்த ‘கஸ்டடி’யிலும் புதுவித அனுபவத்தைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

”1996—99—ல் ஆந்திராவில் கதை நடப்பதால், தமிழ் ரசிகர்களுக்குப் புரியும் வகையில் தமிழிலேயே சொல்லியுள்ளோம்” என படத்தின் டைட்டில் போடுவதற்கு முன்பே தெளிவாக சொல்லிவிடுகிறார் டைரக்டர் வெங்கட் பிரபு. ஆந்திராவில் கதை நடந்து, பின்னணியில் தெலுங்கு எழுத்துக்களே தென்பட்டாலும், தமிழில் காலடி எடுத்து வைத்திருக்கும் நாக சைதன்யா தவிர, மற்ற அனைவருமே நமக்கு நன்கு பரிச்சயமானவர்கள் என்பதால், நேரடித் தமிழ்ப் படம் போலத்தான் இருக்கிறது.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

முதல்வர் செல்வி. தாட்சாயிணியின்( ப்ரியாமணி) கான்வாய் வரும் போது, ஆம்புலன்ஸுக்காக கான்வாயை நிறுத்துகிறார் கான்ஸ்டபிள் ஷிவா( நாகசைதன்யா) அதிகாரிகள் கடுப்பாகி கத்தினாலும், முதல்வரே இறங்கி வந்து நாகசைதன்யாவைப் பாராட்டுகிறார். முதல்வரின் பாராட்டால், ஊரே பாராட்டுகிறது சைதன்யாவை.

இதற்கடுத்த சீன், கழிவுநீர்க் கால்வாயில் இருக்கும் விசவாயுவால் வெடிவிபத்தாகி, பலர் பலியாகின்றனர்.  முதல்வர் கண்ணீர் அறிக்கைவிடுகிறார், விசாரணை நடக்கிறது.

டிரைவிங் ஸ்கூல் டீச்சராக இருக்கும் ரேவதியை( ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி) ஐந்து வருடமாக லவ் பண்ணுகிறார் சைதன்யா. ஆனால் கீர்த்தியை பிரேம்ஜிக்கு கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்கிறார்கள் அவரது பெற்றோர்கள். விடிந்தால் திருப்பதியில் கல்யாணம். ஸ்டேஷன் நைட் டூட்டியில் இருக்கும் சைதன்யாவும் ஹெட்கான்ஸ்டபிளும்  டூவீலரில் கீர்த்தியின் வீட்டுக்குப் போகிறார்கள். எதிரே வரும் டூவீலர் மீது ஆக்சிடெண்ட் ஆகிறது. காரிலிருந்து இறங்கும் இருவருக்கும் இடையே கடும் சண்டையாகி, துப்பாக்கியைத் தூக்குகிறார்கள்.

இதைப் பார்த்துப் பதறிய சைதன்யா, அந்த இருவரையும் ஸ்டேஷனுக்கு தூக்கி வந்து லாக்கப்பில் வைத்துவிட்டு, இன்ஸ்பெக்டருக்கு தகவல் சொல்கிறார். அந்த இருவரில் ஒருவர் ராஜு( அரவிந்த்சாமி) இன்னொருவர் சி.பி.ஐ.அதிகாரி ஜார்ஜ்( சம்பத்ராஜ்). திடீரென ஒரு கும்பல் ஸ்டேஷனை அட்டாக் பண்ணிவிட்டு, அரவிந்த்சாமியைப் போட்டுத்தள்ள வருகிறது. அந்த கும்பலிடமிருந்து அரவிந்த்சாமியை காப்பாற்றி தனது பெர்ஷனல் கஸ்டடியில் கொண்டு போகிறார் சைதன்யா. இந்த களேபரத்தைக் கேள்விப்பட்டு, ஸ்டேஷனுக்கு வந்து கோபத்தைக் கொப்பளிக்கிறார் ஐ.ஜி.நட்ராஜ்(சரத்குமார்) .

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

வில்லனை ஏன் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் காப்பாற்ற வேண்டும்? என்பதற்கான ரிசல்ட் தான் ‘கஸ்டடி’— வெங்கட் பிரபு ‘ஹண்ட்’.

முதல் பத்து பதினைந்து நிமிடங்களில் சைதன்யா-கீர்த்தி ஷெட்டி லவ் போர்ஷனை கச்சிதமாக முடித்துவிட்டு, சூப்பர் அரசியல் ஆக்‌ஷன் பரபரப்பு ஏரியாவுக்குள் திரைக்கதையை தொய்வில்லாமல் கொண்டு போய் சபாஷ் வாங்குகிறார் டைரக்டர் வெங்கட் பிரபு.

தமிழுக்கு வந்த சமீபகால தெலுங்கு ஹீரோக்களில் நமக்குள் ரசிகப்பசை போட்டு ஒட்டிக் கொண்டவர் நாகசைதன்யா. தமிழில் அவரது முயற்சி திருவினையாகட்டும். அதே போல் கீர்த்தி ஷெட்டியும் நல்ல ஸ்கோப் இருக்கு. நாகசைதன்யாவின் கஸ்டடிக்கு வந்த பிறகு, அரவிந்த்சாமி வரும் சீன்கள் எல்லாம் அப்ளாஸ் சாமி தான்.

முதல்வர் ப்ரியாமணியின் ஐடியாப்படி, ஐஜி சரத்குமாரும் ரவுடிகளும் அரவிந்த்சாமியைப் போட்டுத் தள்ளத் துரத்தும் ஆக்‌ஷன் ப்ளாக்குகளில் அனல் பறக்கிறது. இரண்டே சீன்களில் வந்தாலும் ராம்கிக்கு வெயிட்டான சீன் தான்.

இரண்டு பாடல்கள் ஓகே. பின்னணி இசையில் வழக்கம் போல் மாஸ் காட்டியிருக்கிறார்கள் மாஸ்ட்ரோவும் இளைய மாஸ்ட்ரோவும்.

க்ளைமாக்சில் பெங்களூர் கோர்ட்டில் முதல்வர் செல்வி.தாட்சாயிணி ஆஜராவது, நீதிபதி ( ஜெயசுதா) விசாரித்துக் கொண்டிருக்கும் போதே, செல்வி எழுந்திருக்க முயலும் போது, விரலை நீட்டி நீதிபதி உட்காரச் சொல்வது,  முதல்வரையும் ஐ.ஜி.யையும் சி.பி.ஐ.கஸ்டடிக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டதும், முதல்வரின் காரில் இருக்கும் தேசியக் கொடியை கழற்றுவது இதையெல்லாம் பார்த்தால், பறி கொடுத்த பையனூர் பங்களா, டைரக்டர் வெங்கட் பிரபுவின் கண்முன்னே வந்து போயிருக்கும் போல.

‘கஸ்டடி’ நல்லாவே ரசிக்கலாம்.

–மதுரைமாறன்  

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.