புரட்டாசி ஓவர் … ஓவர் … ! இறைச்சிக்கடையை மொய்த்த வாடிக்கையாளர்கள் !
பக்தி மாதங்கள் என போற்றப்படும் மாதங்களில் மிகவும் முக்கியமானது புரட்டாசிமாதம். பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், ஏராளமானோர் புரட்டாசி மாதத்தில் விரதம் இருப்பதோடு, குடும்பத்தில் உள்ளவர்களும் அசைவ உணவுகளை உண்பதை முழுவதுமாக தவிர்ப்பார்கள். இந்நிலையில் சனிக்கிழமையோடு புரட்டாசி மாதம் நிறைவடைந்த நிலையில் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோத துவங்கியது.
மதுரை மற்றும் சுற்றுப்புற மாநகர்பகுதிகளான இறைச்சி கடைகளில் கடந்த 3 வாரங்களாக பொதுமக்கள் இல்லாமல், வெறிச்சோடி காணப்பட்டதோடு, ஆங்காங்கே இறைச்சிகடைகள் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில், இறைச்சி பிரியர்கள் இறைச்சிகள், மீன்கள் போன்றவற்றை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி காலை முதலே கறிக்கடைமீன் கடைகளில் குவியத் துவங்கினர்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.