தந்தையின் வழியில் தப்பாமல் செல்லும் தனயன் மு.க. ஸ்டாலின் ; காதர்மொய்தீன் வாழ்த்து !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தனது தந்தையின் வழிநின்று இரண்டு முஸ்லிம்களுக்குத் தனது அமைச்சரவையில் இடம் தமிழக முஸ்லிம் சமுதாய மக்களின் ஒட்டுமொத்த வரவேற்புகளைக் பெற்றுள்ளது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கே.எம். காதர்மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : 2021 மே 7 தேதி வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணி அளவில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவி ஏற்பு என்னும் புரட்சி நடத்திருக்கிறது. தமிழகத்தின் பதினாறாவது சட்டப்பேரவைத் தேர்தலில் 133 தொகுதிகளில் உதய சூரியன் சின்னம் வெற்றி கொடி நாட்டியது.

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

தமிழக வரலாற்றில் ‘ உதயசூரியன் ‘ என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் சின்னம் என்பது பொதுவான நம்பிக்கையாகும். ஆனால் உண்மையில் திராவிட இனத்தின் அடையாளத்தை இந்திய நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி, உலக நாடுகளுக்கும் உணர்த்துவதற்காகவே உருவாக்கப்பட்டதே ‘ உதயசூரியன் ‘ என்பது வரலாற்றுப் பார்வையாகும்.

பேராறிஞர் அண்ணாா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழகத்தில் ஆறு முறை அரசோக்கிய ‘உதயசூரியன்’ இன்று முதல் தனது ஏழாவது முறை ஆட்சியைத் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தொடங்கியுள்ளது.

தங்க மயில் - Akshaya Tritiya Specials at Thangamayil | Golden Offers | Thangamayil Jewellery Limited

‘ காருள்ளளவும் கடல் நீருள்ளளரவும் ‘ இந்த நல்லாட்சி தொடர்ந்து இதுவரை வரலாறு காணாத அற்புதங்களை படைத்திட வாழ்த்துவோம். முதலமைச்சர், தன்னுடன் சேர்த்து முப்பது நான்கு பொறுக்குமணிகளை தமிழக அமைச்சரவையில் இடம் பெறச் செய்து புதிய சமூக நீதி வரலாறு தொடங்கி வைத்திருக்கிறார். தமிழகத்தில் உள்ள எல்லாம் சமூகத்தின் பிரதிநிதிகளும் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பது முதலமைச்சர் அவர்களின் சமூகப் பார்வை மிகவும் தெளிவானது என்பதை நிரூபித்திருக்கிறது.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

தமிழக அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதியே இல்லாமல் இருந்த காலமும் இருந்தது. கர்மவீரர் காமராஜர் காலத்தின் தான் முஸ்லிம் அமைச்சர் வரலாறு துவங்கியது. அதற்குப் பின்னர் பேரறிஞர் அண்ணா காலத்தில் இந்த வரலாறு சிறப்பாக தொடர்ந்தது.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் காலத்தில் முஸ்லிம் இருவருக்கு அமைச்சர் பதவி தந்து புதிய வரலாற்றை உருவாக்கினார். தந்தையின் வழியில் தப்பாமல் செல்லும் தனயன் என்னும் பேர் பெற்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும், தனது தந்தையின் வழிநின்று இரண்டு முஸ்லிம்களுக்குத் தனது அமைச்சரவையில் இடமளித்துள்ளது, தமிழக முஸ்லிம் சமுதாய மக்களின் ஒட்டுமொத்த வரவேற்புகளைக் பெற்றுள்ளது.

ஜெர்மனியை உருவாக்கியவர் ஆட்டோவான் பிஸ்மார்க். ஒரு நாட்டை உருவாக்குதல்
‘ என்றால் ‘ என்ன என்ற வினாவுக்கு பிஸ்மார்க் கூறினார்”

( தகுதியானவர்களைக் கண்டறிந்து தேர்வு செய்தல் ). முதலமைச்சர் அவர்கள் தமது அமைச்சரவையில் தமிழகத்தின் தகுதியானவர்களை மட்டுமன்றி, தமிழக மக்களால் அறிய பெற்று, போற்றப்படும், பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு அறிமுகமாகியுள்ள நன்மக்கள் இடம் பெறச் செய்துள்ளார்கள்.

தமிழக மக்களின் இதயசானத்தில் வீற்றிருக்கும் முதலமைச்சர் அவர்களும் அவரது அமைச்சரவையினரும் வரலாற்றுச் சாதனை படைத்து தமிழகத்தை இந்திய மாநிலங்களுக்கு எல்லாம் வழிகாட்டு வகையில் நல்லாட்சி தருவார்களாக இவ்வாறு கே.எம். காதர்மொகிதீன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.