மேற்படி பேருக்குப் பின்னால் இருக்கும் ‘குப்தா’வை கணக்குப்போட்டால், தர்ஷாவின் பூர்வீகம் வடநாடோ, வங்காள நாடாகவோ தான் இருக்க வேண்டும். ஆனால் பார்ட்டி பிறந்து, வளர்ந்து, படித்ததெல்லாமே நம்ம கோயம்புத்தூர் தான். 2018-ல் ‘அவளும் நானும்’ என்ற டி.வி.சீரியல் மூலம் லைட்வெளிச்சம்பட்டு, அதன் பின் சாதி சர்ச்சையை சகட்டுமேனிக்கு கிளப்பும் மோகன்.ஜி.டைரக்ஷனில் ‘ருத்ரதாண்டவம்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரியானார் தர்ஷா.
இப்போது ஃபோர்னோ பிலிம் ஃபேமஸ் சன்னிலியோன் ஹீரோயினாக நடிக்கும் ‘ஓ மை கோஸ்ட்’ என்ற படத்தில் வெயிட்டான கேரக்டரில் நடித்திருக்காராம் தர்ஷாகுப்தா. முதல்படம்
‘ருத்ரதாண்டவம்’என்பதாலோ என்னவோ ’கிளாமர்’ தாண்டவம் ஆடிய போட்டோஷூட் ஸ்டில்களை வாரத்திற்கு இரண்டு வீதம் ரிலீஸ் பண்ணி, குளுகுளு தரிசனம் தருகிறார் தர்ஷாகுப்தா.