‘ரேணிகுண்டா’, ’கருப்பன்’ படங்களின் டைரக்டர் பன்னீர்செல்வம் டைரக்ட் பண்ணி முடித்துள்ள ஒரு படத்தில் ஹீரோயினாக தீப்ஷிகா அறிமுகமாகிறார். சென்னையைச் சேர்ந்த இவர், தமிழ் பேசத்தெரிந்த தமிழ் நடிகை என்பது கூடுதல் சிறப்பு.
பன்னீர்செல்வத்தின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு தெலுங்குப்படத்தில் கமிட்டாகி, ஷூட்டிங்கிற்காக ஃபாரீனுக்கும் போய்ட்டு வந்துட்டாராம். இதுவும் போக, தெலுங்கு ஹீரோ நவீன்சந்திராவுடன் ஒருபடம், இதுவும் போக இன்னொரு தெலுங்குப்படம் மளமளவென ஆந்திராவில் கமிட்டாகி வருவதைப் பார்த்து தெலுங்கின் இளம் நடிகைகள் பலர் திகைத்துப் போயுள்ளனராம்.
இங்கே கோலிவுட்டில் ‘மாயா’, ’மாநகரம்’, சமீபத்தில் ரிலீசான ‘செல்ஃபி’ படங்களைத் தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோ தயாரிக்கும் படத்தில் விக்ரம்பிரபுவுடன் ஜோடியாக கமிட்டாகி, இங்கே உள்ள இளம் நடிகைகளையும் திகைக்க வைக்கும் அளவுக்கு அடுத்தடுத்த சான்ஸ்களைக் கைப்பற்ற கோதாவில் குதித்திருக்காராம் தீப்ஷிகா.