தனியார் மருத்துவமனைகளின் பிரசவ பிசினஸ் !
இரண்டாம் முறையாக பிரசவித்துள்ளேன். மகன் பிறந்துள்ளார். ஆனால், இந்த பதிவை நான் மிகவும் வேதனையுடனும், மன அழுத்தத்துடனும் எழுதுகிறேன்.
எனது முதல் கர்ப்பத்தின் சுமார் 3-வது மாதத்திலேயே ஒரு மருத்துவர் சில காரணங்களைக் கூறி எனக்கு C-section தேவைப்படும் என்று கூறினார். அதன்பிறகு நான் பல மருத்துவர்களை மாற்றி மாற்றி சந்தித்தேன். இறுதியாக நான் சந்தித்த 5-வது மருத்துவர், எந்தப் பிரச்சினையும் இல்லை, normal delivery முயற்சி செய்யலாம் என்று கூறினார். அவருடைய கண்காணிப்பில் எனக்கு normal delivery நடந்தது.
தற்போது இரண்டாவது குழந்தைக்கான கர்ப்பத்தில், ஏற்கனவே ஒரு normal delivery நடந்துள்ளதால், மீண்டும் normal delivery-க்கு மட்டும் தான் முயற்சி செய்வார்கள் என்று நம்பி, முதல் பிரசவத்தில் முதலில் பார்த்த அதே மருத்துவமனையிலேயே வேறொரு doctor-ஐ அணுகினேன். ஆனால், இந்த முறையும் C-section தேவைப்படும் என்று மீண்டும் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நான், “Induction செய்து normal delivery முயற்சி செய்யும் வசதி இருந்தால் சொல்லுங்கள். இல்லையென்றால் வேறு மருத்துவமனையில் second opinion கேட்டுவிட்டு முடிவு செய்கிறேன்” என்று கூறினேன். அதற்கு உடனே என்னுடைய doctor, “இங்கே எங்கள் hospital-லேயே அந்த facility இருக்கிறது” , மேலும், முதல் குழந்தை பிறந்து ஒன்றரை ஆண்டு தான் என்பதால் normal delivery தான் 100% என்று ஒரு கட்டத்தில் தெரிவித்தார்.
அதன் பின்னர் labour induction செய்ய முடிவு செய்யப்பட்டது. 15.09.2026 அன்று induction தொடங்கப்பட்டது. Induction மருந்து கொடுக்கப்பட்ட பிறகு எனக்கு labour pain ஏற்பட்டது. ஆனால் முழுமையாக labour progress ஆகவில்லை.
அன்றைய தினம் ஆரம்பத்திலிருந்தே மீண்டும் C-section செய்ய வேண்டும் என்ற அழுத்தம் என்னிடம் தொடர்ந்து கொடுக்கப்பட்டது. எனக்கு இது பயத்தையும் mental pressureயும் கொடுக்கத் தொடங்கியது. Normal delivery-க்கு முயற்சி செய்ய வேண்டும் என்ற எனது விருப்பத்தை நான் மீண்டும் மீண்டும் தெளிவாக தெரிவித்தும், C-section பற்றிய பேச்சும் அழுத்தமும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

எதோ சரியில்லை போன்ற உணர்வு ஏற்பட, “அப்படியானால் என்னை Government Hospital-க்கு உடனடியாக transfer செய்யுங்கள்”என்று கேட்டேன்.
ஆனால், மீண்டும் check செய்த உடனே, திடீரென்று “குழந்தையின் தலை திரும்பிவிட்டது; இப்போது normal delivery-ஐ தொடர்ந்து முயற்சி செய்யலாம்” என்று தெரிவித்தார்.
குழந்தை பிறக்கப் போகும் சில நிமிடங்களுக்கு முன்பு என்னுடைய பனிக்குடம் உடைந்தது, ஆனால் திடீரென்று குழந்தை மலம்(stool) போய் விட்டதாகவும், குழந்தையின் heartbeat குறித்து பிரச்சினை இருப்பதாகவும், குழந்தைக்கு distress இருப்பதாகவும், கூறப்பட்டது. என் குழந்தையின் பாதுகாப்பை நினைத்து, அந்த நேரத்தில் நான் C-section-க்கு சம்மதித்தேன்.
சம்மதம் கொடுத்த தருணத்தில் இருந்து அவர் என்னை அன்பாக நடத்தத் தொடங்கினார். பாசமாக பேசினார். இறுதியில் எனக்கு C-section செய்யப்பட்டது. என் குழந்தை பாதுகாப்பாக பிறந்தது. தலையில் மட்டும் குழந்தை தள்ளப்பட்டதற்கான ஒரு விரல் அளவு தழும்பு தென்பட்டது. ஆனால் நான் அனுபவித்த இந்த வேதனையையும், பதட்டத்தையும், மன அழுத்தத்தையும் என்னால் சிறிதளவு கூட மறக்க முடியவில்லை. எனக்கு இன்றும் பல கேள்விகள் உள்ளன.
ஆரம்பத்திலிருந்தே என்னை C-section-க்கு கொண்டு செல்லும் வகையில் செயல்பட்டார்களா? நான் வேறு மருத்துவமனைக்கு transfer ஆகிவிடக் கூடாது என்பதற்காக “normal delivery செய்யலாம்” என்று கூறி என்னை அங்கேயே இருக்க வைத்தார்களா? மருத்துவத் தேவையை விட வேறு காரணம் (பணத் தேவை) இருந்ததா என்ற கேள்வியும் எனக்கு தொடர்ந்து எழுகிறது.
இவை அனைத்துக்கும் ஒரே தீர்வாக normal or c-section இரண்டு deliveryக்கும் ஒரே பணம் தான் வசூலிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கொண்டுவரப் பட்டால் நன்றாக இருக்கும்.
— தோழர் ஜெனிட்டா






Comments are closed, but trackbacks and pingbacks are open.