பழங்குடி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
பழங்குடி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு பழங்குடி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் உள்ளிட்ட தேனி மாவட்டம் முழுவதும் ஏராளமான மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் மலைகளில் இயற்கையாக கிடைக்க கூடிய பொருட்களை சேகரித்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது வனத்துறையினரின் நெருக்கடியால் மலைவாழ் மக்கள் மலைகளுக்குள் சென்று வர முடியாத சூழ்நிலையில் வாழ்கின்றனர்.
இவர்கள் மலைகளில் பல வகையான மரங்களை வளர்த்து விவசாயம் செய்து வந்த மலைவாழ் மக்களை வனத்துறையினர் வெளியேற்றி விட்டனர். காடுகளில் மீண்டும் தங்களது நிலங்களுக்கு சென்று விவசாயம் செய்து வாழ்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க மலைவாழ் மக்கள் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.