அங்க பிரதட்சணம் செய்து மனமகிழ் மன்றம் என்ற பெயரில் இயங்கும் வரும் மது கூடத்தை அகற்றக் கோரிக்கை

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அங்க பிரதட்சணம் செய்து மனமகிழ் மன்றம் என்ற பெயரில் இயங்கும் வரும் மது கூடத்தை அகற்றக் கோரிக்கை!

தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சியில், மனமகிழ் மன்றம் என்ற பெயரில் இயங்கி வரும் TN 60 Highway மது கூடத்தை அகற்றக் கோரி அங்க பிரதட்சணம் செய்து மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.

Sri Kumaran Mini HAll Trichy

பழனி செட்டிப்பட்டி பேரூராட்சி, கம்பம் – தேனி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து எதிர்புரம் உள்ள தனியார் மன மகிழ் மன்றம் என்ற பெயரில் இயங்கி வரும் மது கடைகள் ஆரம்பிக்கபட்டு அரசு விதிமுறையை பின்பற்றாமல் அதிகாரிகளுக்கு கப்பம் கட்டி மது கடைகள் மற்றும் மதுபான பார்களை இயக்கி வருகின்றனர்.

தேசிய நெடுச்சாலையில் TN-60 என்ற பெயரில் மன மகிழ் மன்றம் சட்ட விரோதமாக தொடங்கபட்டு இணை ஆணையர் உதவியோடு சட்ட விரோத மது விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Flats in Trichy for Sale

மன மகிழ் மன்றம் ஆரம்பிக்கப்பட்டு பொழுதுபோக்கு அம்சமாக விளங்குவது மனமகிழ் மன்றம் ஆகும். ஆனால் விதி முறைக்கு புறப்பாக பதிவு செய்துவிட்டு, மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியிலும் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு, பெண்கள் விடுதி, கோவில் உள்ள பகுதியில் இயங்கிவருகிறது.

எனவே தேனி கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் மனமகிழ் (மது கடை) மன்றத்தை அப்புறப்படுத்த கோரி பல முறை கோரிக்கை வைத்தும் அகற்றப்படாத காரணத்தால் சிவசேனா கட்சியின் மாநிலச் செயலாளர் குரு அய்யப்பன், சட்டரீதியாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தகவல் கோரப்பட்டும் கலால் ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டு அகற்றப் படவில்லை.

எனவே மனமகிழ் மன்றம் என்ற பெயரில் இயங்கும் வரும் மது கூடத்தை உடனடியாக அகற்றக் கோரி இன்று அங்க பிரதட்சணம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.