கனிமவளத்துறையில் தி.மு.க – அ.தி.மு.க இடையே பார்சியாலிட்டி போர் பற்றி எரிகிறது..

0

கனிமவளத்துறையில் தி.மு.க – அ.தி.மு.க இடையான பார்சியாலிட்டி போர் பற்றிக்கொண்டு எரிகிறது. சேலம்  மாவட்டத்தின் கனிம வளத்துறை இணை இயக்குநராக இருந்து வருபவர் பன்னீர்செல்வம். இவர் பணி மாறுதல் அடைந்து சேலத்திற்கு வந்து இரண்டு மாதங்களே ஆகிய நிலையில், மாவட்டத்திற்குள் கல் குவாரி குத்தகை விடுவதில் பாரபட்சம் காட்டி வருகிறாராம்.

காரணம், அதிகாரியின் உடன் பிறந்த அண்ணன் (முனியாண்டி) ராமநாதபுரம் அ.ம.மு.க வில் முக்கிய புள்ளியாக (மாவட்டச் செயலாளர்) இருந்து வருவதால், அவரது பினாமி நிறுவனங்கள் சேலத்தில் ஏகப்பட்டது உள்ளதாம். இதனால் சேலத்தில் உள்ள கல்குவாரிகளை அ.தி.மு.க தரப்பினருக்கும், தனது அண்ணனின் பினாமி நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளார்.

தி.மு.க-வை சேர்ந்தவர்களுக்கு குவாரி அனுமதி கொடுக்கவில்லையாம். இதனால் உடன்பிறப்புகள் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஏகப்பட்ட புகார் வாசித்து வருகின்றனர்.

– ஸ்பைடர்மேன்

Leave A Reply

Your email address will not be published.