உங்களுக்கும் வந்ததா.. PMYP பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் பயனடைய விரும்புகிறவர்களுக்கான முக்கிய செய்தி

0

கடந்த சில தினங்களாக வாட்ஸ் ஆப்பில் வைரலாகி வருகிறது கீழ் கண்ட செய்தி. பிரேக்கிங் நியூஸ்!  PMYP பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் 2024 விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியது என்றும், எங்கள் திட்டம் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் தனிநபர்களுக்குத் திறந்திருக்கும், சொந்த மடிக்கணினிகளை வாங்க இயலவில்லை, ஆனால் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு ஒன்று தேவை எனவும்,

விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளன, இடங்கள் குறைவாகவே உள்ளன!  விண்ணப்பித்தவர்களுக்கு ஏற்கனவே மடிக்கணினிகள் வரத் தொடங்கியுள்ளன. காலக்கெடுவை:04/30/2024 என முடியும் அந்த வாட்ஸ் ஆப் பார்வர்ட் மெசேஜில் இங்கே பதிவு செய்து விண்ணப்பிக்கவும் https://gifts2.ulm8bf.top?lma=n87 என அந்த இணையதள முகவரியும் உள்ளது..

https://businesstrichy.com/the-royal-mahal/

உண்மை இதுதான்..

ஒவ்வொரு தேர்தல் சமயத்தின் போதும் இப்படியான பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் போன்று இலவச ரீச்சார்ச் திட்டம் உள்ளிட்ட பெயர்களில் பார்வர்ட் மெசேஜ்கள் வலம்வருவது வாடிக்கையாகிவிட்டது. இப்போது வைரலாகி வரும் பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் மத்திய அரசின் திட்டமல்ல. தனியார் இணையளம் பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் 2024 எனும் பெயரில் இப்படியான நூதன அறிவிப்பை வெளியிட்டுள்ளது..

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் ஒரு மோசடியா

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் கடந்த 19.04.2024 அன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் என்பது மத்திய அரசின் திட்டமல்ல. அப்படி ஒரு அறிவிப்பை தங்கள் நிறுவனமோ, அரசோ மெற்கொள்ளவில்லை. அது மோசடியான அறிவிப்பு எனவே மாணவர்கள் அந்த பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் 2024 விண்ணப்பங்களை புறக்கணியுங்கள் என விழிப்புணர்வு பதிவு வெளியிட்டுள்ளது.

அந்த லிங்க் இதோ:

இந்த அறிவிப்பின் மூலம் பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் என்பது போலியான அறிவிப்பு என்பது தெளிவாகிறது.

எச்சரிக்கை

உங்கள் whatsapp நம்பருக்கு, பிரேக்கிங் நியூஸ்!  PMYP பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் 2024 விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியது என ஃபார்வேர்ட் மெசேஜ் வந்தால் அதனை எடுத்து எடுப்பிலேயே நிராகரித்து விடுங்கள். தகவலை உறுதி செய்யாமல் எந்த தகவலையும் யாருக்கும் பார்வேர்ட் செய்யாதீர்கள். இது போன்ற தகவல் வந்தால் கூடுதல் கவனமாக இருங்கள். உங்கள் செல்போன் தகவல்கள், போலி இணையதளங்கள் மூலம் திருடப்படலாம் எச்சரிக்கை.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.