பள்ளிக்கல்வித்துறைக்கு அழுத்தம் தரவேண்டும் !
30.03.2026 இந்துவில் “The rise of temporary teachers in West Bengal” என்றொரு கட்டுரை. அர்னாப் சக்ரபர்த்தி மற்றும் அன்வேஷா பாசு ஆகியோர் எழுதியது. மேற்கு வங்கத்தில் மாணவர்களின் தேவைக்கு ஏற்ப கல்லூரிகள் உருவாக்கப்படவில்லை என்கிறது அந்தக் கட்டுரை.
நிரந்தரமாக பேராசிரியர்களை உருவாக்காததன் விளைவாக மேற்கு வங்கத்தில் தற்காலிக பேராசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் அந்தக் கட்டுரை கவலைப்படுகிறது. அது தரும் ஒரு புள்ளிவிவரம் கூர்மையானது.
தமிழ் நாட்டில் 14 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர். குஜராத்தில் 26 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர். மேற்கு வங்கத்தில் 29 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர். பீகாரில் 60 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர். பீகாரிலிருந்து வந்த ரவிதான் பீகாரளவிற்கு தமிழ்நாட்டில் தரமான கல்வியில்லை என்றார். கல்வியின் தரத்தில் பீகாருக்கு 60 புள்ளிகளென்றும், தமிழ்நாட்டிற்கு 14 புள்ளிகள்தானென்றும் அவர் புரிந்துகொண்டிருக்கக் கூடும்.

தேர்தல் பரப்புரைகளில் விவாதங்களில் கல்விகுறித்து பேசவேண்டும். தமிழ் நாட்டிலுள்ள பகுதிநேர ஆசிரியர்கள் குறித்து இடதுசாரிகள் அழுத்தம் தரவேண்டும். கல்லூரியில் 14 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் என்றிருக்கும் தமிழ்நாட்டில் பள்ளிகளில் உள்ள இந்த விகிதாச்சாரத்தை இன்னும் மேம்படுத்த அழுத்தம் தரவேண்டும்.
— இரா.எட்வின்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.