மறைந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் பெயரில் ‘தமிழர் இறையியல்’ துறை தொடங்கப்படும் – இறுதி அஞ்சலி நிகழ்வில் ஆ.இராசா உரை

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மறைந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் பெயரில் ‘தமிழர் இறையியல்’ துறை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்படும் – இறுதி அஞ்சலி நிகழ்வில் ஆ.இராசா உரை

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

மறைந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் இறுதி அஞ்சலி
மறைந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் இறுதி அஞ்சலி

திருச்சியைச் சார்ந்த தமிழறிஞர், செம்மொழி – கலைஞர் விருதாளர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன்(79) உடல் குறைவால் சென்னை இராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி கடந்த 04.11.2022ஆம் நாள் அதிகாலை 3.00 மணியளவில் அவரின் உயிர் பிரிந்தது.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

செய்தியறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி, தமிழ்நாடு அரசின் சார்பில் பேராசிரியர் உடலுக்கு மலர்வளையம் வைக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

மறைந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் இறுதி அஞ்சலி
மறைந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் இறுதி அஞ்சலி

பேராசிரியர் உடல் திருச்சி கலைஞர் கருணாநிதி நகர் இராசாராம் சாலையில் உள்ள அவருக்குச் சொந்தமான ’மனிதம்’ இல்லத்திற்கு மாலை 6.00மணிக்குக் கொண்டுவரப்பட்டது.

திருச்சியின் அனைத்துக்கட்சி பிரமுகர்கள், கல்லூரிகளின் முன்னாள், இந்நாள் பேராசிரியர்கள், தமிழ் இயக்கங்கள் சார்ந்த தமிழன்பர்கள் எனப் பலரும் மறைந்த பேராசிரியருக்கு மலர்மாலைகள் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். இரவு 7.00 மணிக்கு தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் பழ.நெடுமாறன் பேராசிரியருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் பேராசிரியரின் துணைவியார் சக்குபாய் அவர்களுக்கும் பேராசிரியரின் மகள் குறிஞ்சி அவர்களுக்கும் ஆறுதல் கூறினார். அற்புதம் அம்மாள், அவரின் மகன் பேரறிவாளன் ஆகியோரும் மறந்த பேராசிரியருக்கு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, வளனார் கல்லூரி பேராசிரியர்கள் இ.சூசை, திருமலை நெடுஞ்செழியன், செல்வக்குமார், அந்தோணி குருசு, அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் திருமாறன், கண்ணன், சக்திவேல், சு.மாதவன் காவிரி நுண்கலைக் கல்லூரி தமிழ்ப்பேராசிரியர் சதீஷ், பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் தமிழ்மாறன், அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியர் மு.பாண்டி எனப் பல பேராசிரியர்கள் மறைந்த பேராசிரியருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மகேந்திரன், மக்கள் அதிகாரம் காளிப்பன், தமிழ் பேரியக்கம் சார்ந்த மணியரசன், கவித்துவன், கவிஞர் இராசாரகுநாதன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் இறுதி அஞ்சலி
மறைந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் இறுதி அஞ்சலி

அரசியல் இயக்கங்களின் சார்பில் மதிமுகவைச் சார்ந்த புலவர் க.முருகசேன், மிசா சாக்ரடீஸ், பெல் இராசமாணிக்கம், அடைக்கலம், மணவை தமிழ்மாணிக்கம் மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள், மார்க்சீய லெனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்களும் பேராசிரியரின் உடலுக்கு மலர்மாலைகள் வைத்து மரியாதை செய்தனர்.

பின்னர் காலை 10.00 மணியளவில் மதுரை உயர்நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞர் சு.க.மணி அவர்களின் தலைமையில் மறைந்த பேராசிரியருக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

அதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தமிழ்ச் சார்ந்த இயக்கங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் பேராசிரியரின் தமிழ்ப் பணியைப் புகழ்ந்துரைத்தனர்.

மறைந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் இறுதி அஞ்சலி
மறைந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் இறுதி அஞ்சலி

பின்னர் பகல் 11.00 மணியளவில் மறைந்த பேராசிரியரின் உடல் திருச்சி கருணாநிதி நகரிலிருந்து அவரின் சொந்த ஊரான இலால்குடியை அடுத்துள்ள அன்பில் படுகைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு பகல் 1.00 மணியளவில் படுகை கிராம மக்கள் பேராசிரியரின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் மற்றும் முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.இராசா, திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் ஆகியோர் பேராசிரியரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பிற்பகல் 1.30 மணியளவில் மறைந்த பேராசிரியரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தமிழ் இயக்கம் சார்ந்தவர்கள், அரசியல் இயக்கம் சார்ந்தவர்கள், பேராசிரியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பிற்பகல் 2.00 மணியளவில் படுகை கிராமத்தின் கொள்ளிடக்கரை அருகில் இருந்த பேராசிரியரின் தோட்டத்தில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அங்கே இரங்கல் கூட்டம் நடைபெற்றது. பெல் இராசமாணிக்கம், நாட்டார் கல்லூரித் தலைவர் பேராசிரியர் இளமுருகன், திமுக மாவட்டச் செயலாளர் வைரமணி ஆகியோர் அஞ்சலி உரை நிகழ்த்தினர்.

மறைந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் இறுதி அஞ்சலி
மறைந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் இறுதி அஞ்சலி

இறுதியில் திமுக துணைப்பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அஞ்சலி உரையாற்றினார்.

அப்போது,“கல்லூரி காலத்தில் எங்களைப் போன்றவர்கள் திராவிட இயக்கத்தைப் புரிந்துகொள்கிற வகையிலும், திராவிட இயக்கத்தின் கொள்கை வழி இன்றும் வழி பிறழாது நிற்பதற்கும் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள் பாசறைக் கூட்டங்களில் ஆற்றிய உரைதான் அடிப்படைக் காரணம்.

பொய் வழக்கில் அவர் பெங்களூரூ சிறையில் இருந்தபோது ‘மண்டியிட மாட்டேன், மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என்று கவிதை எழுதி தன் தமிழ் உணர்வை வெளிப்படுத்தியவர்.

தமிழர்களின் சமயம் எது? தமிழர்களின் இறை எது? என்ற குழப்பங்கள் மேலாங்கி இருக்கும் இந்த காலத்தில் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் எழுதிய ஆசீவகம் குறித்த நூல்கள் நம் அனைத்து குழப்பங்களையும் தீர்க்க வல்லவையாக உள்ளன. தமிழர் மெய்யியலை இனங்கண்டு, தமிழர்களுக்கு அடையாளப்படுத்தியவர். இன்று மறைந்துவிட்டார் என்று எண்ணும்போது வேதனை மேலிடுகின்றது. தமிழர்களின் மெய்யியலையும் இறை நம்பிக்களையும் அடையாளப்படுத்திய பேராசிரியர் க.நெடுஞ்செழியன் பெயரில் அவர் பிறந்த திருச்சி மாவட்டத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் “தமிழர் இறையியல்” துறை உருவாக்க, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் எடுத்துரைப்பேன்.

பேராசிரியரின் கருத்தியல்களை நெஞ்சில் ஏந்துவதே, நாம் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்” என்று உரையை நிறைவு செய்தார்.

மறைந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் இறுதி அஞ்சலி
மறைந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் இறுதி அஞ்சலி

மறைந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்கள் பெரியாரிய உணர்வாளர் என்ற அடிப்படையில், வழிகூட்டி விடுதல், சுற்றி உடைத்தல், உடலை நீராட்டுதல், கொள்ளி வைத்தல் போன்ற எந்த இந்து மத சடங்குகளும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த பேராசிரியரின் துணைவியார் பேராசிரியர் சக்குபாய் அவர்கள், பேராசிரியரின் உடலைப் பார்த்து அழுதவர்களைப் பார்த்து,“யாரும் அழக்கூடாது. நிறைய நூல்களை எழுதி இந்தத் தமிழ்ச் சமுதாயத்தின் எழுச்சிக்கான விதைகளை விதைத்துவிட்டுதான் சென்றிருக்கிறார். அழாதீர்கள். அமைதிய இருங்கள்” என்ற அவரின் வேண்டுகோள் அர்த்தம் நிறைந்ததாக அமைந்திருந்தது.

மறைந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் இறுதி அஞ்சலி
மறைந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் இறுதி அஞ்சலி

பெட்டிச் செய்தி
பேராசிரியரின் உடல் அடக்கத்தின்போது நாம் தமிழர் கட்சியின் முழக்கம்
மறைந்த பேராசிரியரின் உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் மருத்துவ அணி பொறுப்பாளர் சென்னையைச் சார்ந்த மருத்துவர் இளவஞ்சி தலைமையில் 10க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியின் திருச்சியில் அஞ்சலி செலுத்தினர். பேராசிரியரின் உடல் படுகை கிராமத்தில் அடக்கம் செய்யப்படும் வேளையில் நாம் தமிழர் கட்சியில் சார்பில்,“வீரவணக்கம்…… வீரவணக்கம்….. பேராசிரியர் நெடுஞ்செழியனாருக்கு வீரவணக்கம்…… வணக்கம்….. செய்கின்றோம்……… நாம் தமிழர்” என்று முழக்கமிட்டுக் கொண்டிருந்தார்கள். அதை கைகளைக் கட்டிக்கொண்டு அமைதியாக ஆ.இராசா வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார். திமுகவினர் முழக்கம் எழுப்பியதைக் கண்டிக்க முனைந்தபோது, ஆ.இராசா கண்களால் ‘வேண்டாம்‘ என்று கட்சியினருக்குக் கட்டளையிட்டார்.

இம் முழக்கம் குறித்து நம்மிடம் பேசிய மிசா சாக்ரடீஸ்,“மறைந்த பேராசிரியர் பெரியாரியப் பற்றாளர். திராவிட கருத்தியல் சிந்தனை சார்ந்து அறிவுப்பூர்வமாக 22 நூல்களை எழுதியுள்ளார். சீமான் கட்சியான நாம் தமிழருக்கும் பேராசிரியருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சீமான் பெரியாரைத் திராவிடத்தைத் தொடர்ந்து எதிர்த்து வருபவர். அவர் கட்சியினர் ஏன் வீரவணக்கம் செலுத்தினார்கள் என்பது புரியவில்லை. முழக்கமிட்டு குழப்பத்தை விளைவிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட நாம் தமிழரை வேடிக்கை பார்த்து ஆ.இராசா பிரச்சனைகள் எழாவண்ணம் பார்த்துக்கொண்டார். இப்படி அவை நாகரிகம் இல்லாமல் நாம் தமிழர் கட்சியினர் நடந்துகொண்டதை எந்த அரசியல் இயக்கங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை” என்று கூறினார்.

அமைச்சர்களில் அன்பில் மகேஸ் , அரியலூர் சிவசங்கர் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர்.

உள்ளூரில் முக்கிய அமைச்சர்  கே.என். நேரு  கடைசி வரை வரவே இல்லை என்கிற முணுமுணுப்பு கேட்டது.

மேலும் மறைந்த பேராசிரியருக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவது, இறுதி ஊர்வலம் போன்ற அனைத்து நிகழ்வுகளையும் ஒழுங்கு செய்தவர் தேமுதிகவின் அமைப்புச் செயலாளர் கொ.தங்கமணி ஆவார்.

ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.