உரிய காலத்தில் பேருந்து நிலையம் கட்டாத ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலுக்கும் எதிர்ப்பு!
தேவாரம் பேரூராட்சியில் உரிய காலத்தில் பேருந்து நிலையம் கட்டாத ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
ஒப்பந்த தொகையில் முறைகேடு செய்துள்ள தேவாரம் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி பொறியாளர் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தேனி மாவட்டம், தேவாரம் பேரூராட்சி நிர்வாகம், தேவாரம் பேருந்து நிலைய கட்டுமான ஒப்பந்த காலக்கெடு முடிந்த பின்பும் பணிகள் நிறைவடையாத நிலையில் செயல் அலுவலர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்பந்த விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகின்றனர்.
தேவாரம் பேரூராட்சி பேருந்து நிலைய கட்டுமான பணிகளுக்கு 2021 ஆண்டு 6 மாதங்களில் பணிகள் முடிக்க ரூபாய் 20, 86,5567.50 தொகைக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.
உரிய காலத்தில் ஒப்பந்தம் முடிக்காத காரணத்தால் 2022 ஆண்டு மீண்டும் ரூபாய் 200 லட்சம் ஒப்பந்தம் விட்டு,
தொகையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செயல் அலுவலர் மீதும், அவருக்கு துணைபோகும் பேரூராட்சி பொறியாளர் மீதும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தேனி மாவட்டம், தேவாரம் பேருந்து நிலையம் கட்ட விடப்பட்ட ஒப்பந்த விதிகளின்படி செயல்படாத ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்ததை ரத்து செய்யவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
– ஜெய் ஸ்ரீ ராம்