நெருக்கடியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதவி விலகுவாரா? விலக்கப்படுவாரா?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நெருக்கடியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

பதவி விலகுவாரா? விலக்கப்படுவாரா? சென்னை திரும்பியவுடன் முதல்வர் முடிவு – பரபரப்பு தகவல்கள்

 

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கட்சியில் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர். சட்டமன்றத்தில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர். ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ரசிகர் மன்ற பெருந்தலைவர் என்பது அமைச்சர் மகேஸ்க்கு அறிவிக்கப்படாத ஒரு பதவி. திமுகவில் எந்த அமைச்சருக்கும் ஏற்படாத ஒரு பெரும் நெருக்கடியை அமைச்சர் மகேஸ் சந்தித்து வருகிறார்.

அதிலிருந்து மீளும் வாய்ப்பு மிகவும் குறைவு என்றே அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். முதல்வரின் தில்லி பயணம் முடிந்து சென்னை திரும்பியவுடன் அமைச்சர் பொறுப்பிலிருந்து மகேஸ் விலகுவரா? விலக்கப்படுவாரா? என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிடும். அல்லது மகேஸ் வேறு அமைச்சகத்திற்கு மாற்றப்படலாம் என்று கோட்டை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. அன்பில் மகேஸ்க்கு ஏன் இந்த நெருக்கடி என்பது குறித்து இந்தக் கட்டுரை விவரிக்கின்றது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்குசம் இதழில் வெளிவந்த ‘திறந்த மடல்’ என்ற ஒரு பகுதியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு எழுதப்பட்ட மடலின் இறுதியில்,“பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தன் துறை சார்ந்த பணிகளைச் செய்து கல்வி மேம்பாட்டிற்குச் சிந்திக்கவேண்டும். அதைவிடுத்து, உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்று பேசிக் கொண்டிருக்கவேண்டியதில்லை” என்று கடுமையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அமைச்சர் மகேஸ் பள்ளிக் கல்வித்துறையில் சிந்தனை முதிர்ச்சியோடு எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை. எடுத்த முடிவுகளை மாற்றுவது? அல்லது குழப்புவது என்பதையே செய்துகொண்டிருந்தார்.

அமைச்சரின் வீழ்ச்சி – 1

உச்சக்கட்டமாக கடந்த மாதம் ஜூலை 13ஆம் நாள் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே குனியமூரில் உள்ள சக்திப் பள்ளியில் மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் செயல்பாடுகள் மிகவும் மோசமாகவும் கவலையளிக்கும் விதத்திலும் நடந்துகொண்டார் என்று ஊடகங்கள் விமர்சனம் செய்தன. ஜூலை 13ஆம் நாள் மாணவியின் மரணத்தைத் தொடர்ந்து 17ஆம் நாள் பள்ளி சமூகவிரோதிகளால் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டது. 18ஆம் நாள் தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று நேரில் சென்றனர். அதுவரையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் எங்கே இருந்தார் என்பதும், மாணவியின் மரணம் குறித்து, பள்ளியின் சேதம் குறித்து வாய்திறக்கவில்லை. 19ஆம் நாள் அமைச்சர் மகேஸ் பள்ளியைப் பார்வையிட்டார். “தற்கொலை செய்துகொண்ட ஒரு மாணவிக்காக 3ஆயிரம் மாணவர்களின் சான்றிதழ்களைத் தீக்கிரையாக்கிவிட்டார்கள். கலவரம் செய்தவர்கள் சாதித்தது என்ன?” என்று புலம்பினார். மேலும்,“கலவரம் செய்தவர்களைச் சட்டத்தின் முன்நிறுத்தி, இழப்பீடுகளைப் பெற்றுத்தருவோம். பள்ளியைச் சீரமைத்து விரைவில் பள்ளியில் மாணவர்கள் கல்வி கற்கும் சூழ்நிலையை ஏற்படுத்துவோம்” என்று வீரமுழக்கம் செய்தார்.

எரிந்த சான்றிதழ்கள்

அமைச்சரின் இந்த அறிவிப்பைக் கேட்டு, கல்வியாளர் மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் ஆதரவாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு,“தனியார் பள்ளியைச் சீரமைக்கவேண்டிய பணி அரசின் பணி அல்ல. 3ஆயிரம் மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்குவது ஒன்றும் பெரிய காரியமில்லை. பாதிக்கப்பட்ட பள்ளியில் கல்வி கற்கும் சூழ்நிலையை உருவாக்கவேண்டும் என்றால், பள்ளியில் அரசின் சார்பில் சிறப்பு அதிகாரியை நியமிக்கவேண்டும். அவர் பொறுப்பில் வழக்கு முடிந்து தீர்ப்பு வரும்வரை பள்ளியின் செயல்பாடுகளைக் கண்காணித்து வரவேண்டும் என்ற அளவில் அரசின் முயற்சிகள் இருக்கவேண்டும்” என்று குறிப்பிட்டார். இந்த அறிவுரையை அமைச்சர் மகேஸ் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. தனியார் பள்ளிக்கு ஆதரவு நிலை எடுத்தே அமைச்சர் கருத்துத் தெரிவித்து வந்தார் என்பது எல்லோருக்கும் புரிந்த புதிராகவே இருந்தது.

அமைச்சரின் வீழ்ச்சி – 2

தமிழக அரசு நடத்தும் கல்வித் தொலைக்காட்சிக்கு மணிகண்ட பூபதியை மாதம் ஒன்னரை லட்சரூபாய் சம்பளத்தில் CEOவாக நியமித்திருப்பதாக செய்திகள் வெளியானது.சரி… யார் இந்த மணிகண்ட பூபதி..!?

 

மணிகண்ட பூபதி

தந்தி டிவியிலிருந்து வெளியேற்றப்பட்ட பாண்டேவின் நண்பரும், பாண்டே நடத்தும் சாணக்கியா டிவியின் பங்குதாரருமான, இந்துத்துவ அடிப்படைவாத சங்பரிவாரைச் சேர்ந்தவர். இவரைத்தான் கல்வித் தொலைக்காட்சிக்கு CEOவாக நியமித்திருப்பதாக தெரியவருகிறது. தி.மு.கவையும் ஆதரித்த ஒரே காரணத்தால் வேலையிழந்த எத்தனையோ ஊடகவியலாளர்கள் இருக்கும்போது, மணிகண்ட பூபதியை ஏன் நியமிக்க வேண்டும்? இதுத் தொடர்பாக நம்ம கல்வி அமைச்சரைக் கேட்டால், பாண்டே என் வாட்சப் குரூப்பில் இருக்கிறார், தினம் நல்ல கருத்துகளையெல்லாம் பதிவிடுகிறார் என்று பதில் சொல்கிறார். முதல்வரின் உழைப்பையும், திராவிட மாடலின் மாண்பையும் கெடுப்பதற்கென்றே இவர் தொடர்ந்து வேலை செய்து வருகிறார்.

மகேஸ்பொய்யாமொழியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, தகுதியான வேறு ஒரு நபரை கல்வி மந்திரியாக்கு..!!!” என்ற வகையில் சமூக வலைதளங்களில் 16.08.2022ஆம் நாள் காலையிலிருந்து பதிவுகள் அனைத்தும் சூடாக வெளிவரத் தொடங்கின.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும்கூட கல்வித் தொலைக்காட்சியின் CEO நியமனம் குறித்தும் RSS ஊடுருவல் குறித்தும் குறிப்பிடும் அளவிற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் செயல்பாடு அமைந்திருந்தது என்பதற்குச் சான்றாக அமைந்திருந்தது.

மாவட்டச் செயலாளரின் வீழ்ச்சி – 3

அன்பில் மகேஸ், கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதே திருச்சி மாவட்டத்தின் தெற்கு பகுதி மாவட்டச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். கட்சி பொறுப்புகளில் விரும்பியவர்களைத் திணித்தார். பிடிக்காதவர்களை வெளியேற்றினார். தான்தான் எல்லாம் என்ற மமதையோடு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் வலம் வந்தார்.

சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று அமைச்சர் ஆனார். யாரையும் மதிப்பதில்லை. உதயநிதியின் அருள்பார்வை எனக்கிருக்கிறது என்று தனிசம்ராஜ்யமே நடத்தி வந்தார். மிக அண்மையில் திமுகவின் உட்கட்சித் தேர்தல் நடைபெற்றது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

திருச்சி திமுக தெற்கு மாவட்டத்தின் திருவெறும்பூர் தெற்கு ஒன்றியத்திற்குத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டு, தேர்தல் நடத்தாமலே, தேர்தல் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவர்கள் என்று மகேஸ் ஆதரவாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள்.

குண்டூர் மாரியப்பன்
குண்டூர் மாரியப்பன்

 

திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளருக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்த மாரியப்பன் 160 வாக்குகளில் 130 வாக்குகளை வைத்திருந்தார். ஆனால் ஒன்றிய செயலாளராக அறிவிக்கப்பட்டது கும்பக்குடி கங்காதாரன் என்பவர்.

ஒன்றியத் தேர்தலை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் உள்ள அமைச்சர் நடத்தவில்லை என்று தலைமைக்கு மாரியப்பன் கடிதம் எழுதியிருப்பதாகவும் கூறப்படுகின்றது. “கடந்த ஒன்றிய அமைப்பில் கட்சி வழங்கும் தாழ்த்தப்பட்டோருக்கான ஒரு பதவியோடு மேலும் 2 பதவிகள் வழங்கப்பட்டது. தற்போது கட்சி கொடுத்துள்ள ஒரு பதவி மட்டுமே தாழ்த்தப்பட்ட தேவேந்திரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

திருவெறும்பூர் பகுதிகளில் தேவேந்திரர்கள் எண்ணிக்கை அதிகம். அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப இப்போது பதவி வழங்கப்படவில்லை. அமைச்சர் சாதி சார்ந்தே வழங்கப்பட்டுள்ளது” என்று தேவேந்திரர் சமூகம் சார்ந்த திமுக உ.பி. ஒருவர் கொந்தளிப்புடன் கூறினார்.

மேலும் சில திமுக உ.பி.கள்,“அமைச்சருக்கு டாஸ்மாக் பாரிலிருந்து பணம் வாங்கி தருபவர்களுக்கே ஒன்றிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று குற்றம் சுமத்தினார்.

திருவெறும்பூர் தொகுதியில் உள்ள டாஸ்மாக் பார் ஒன்றில் அமைச்சருக்கு மாதம் ரூ.80ஆயிரம் கப்பம் கட்டப்படுகின்றது என்றால் மாதத்திற்கு எத்தனை கோடி கப்பம் மந்திரிக்குக் கிடைக்கிறது என்று கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள்.

திருச்சி குண்டூர் டாஸ்மாக் கடையில் பார் வைத்திருக்கும் திமுக உறுப்பினரின் மனைவிக்கு ஒன்றிய பொறுப்பு கிடைத்துள்ளது என்றால் அமைச்சர் எப்படி கல்லா கட்டுகிறார் என்பது புரிந்துவிடும்” என்று நம்மை அதிர்ச்சிக்கு ஆளாக்கினார்கள்.

சட்டமன்ற உறுப்பினர் வீழ்ச்சி – 4

கடந்த அதிமுக ஆட்சியில் தற்போதைய அமைச்சர் மகேஸ் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றினார்.

2021ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று பள்ளிக் கல்வி அமைச்சர் ஆனார். “இதுவரை அமைச்சர் மகேஸ் தொகுதியில் ஒரு பகுதியில்கூட நன்றி சொல்ல வரவில்லை. அமைச்சரின் தலைவர் என்ற நிலையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஒரு மாதத்தில் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று நன்றி தெரிவித்துள்ளார் என்பதைக்கூட அறிந்துகொள்ளாமல் அமைச்சர் இருப்பது வியப்பாக உள்ளது” என்று நவல்பட்டு பகுதி திமுக உ.பி. ஒருவர் கூறினார்.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து ஏதாவது செய்துகொடுங்கள் என்று திருவெறும்பூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சென்றால், அமைச்சரின் உதவியாளர் அருண் கையில்தான் எல்லாம் உள்ளது. எங்கள் கையில் எதுவும் இல்லை என்று கையை விரிக்கிறார்கள்.

அமைச்சர் திருச்சி வரும்போதும், மாவட்ட அலுவலகம் வரும்போதும் அவரைச் சுற்றி அவருடைய சொந்த சாதிக்காரர்கள் சூழ்ந்துகொண்டு யாரையும் பார்க்கவிடுவதில்லை. அவரிடம் பேசமுடியாது. கடிதம் கொடுக்கலாம். அதற்கு எந்த பதிலும் வராது. அமைச்சர் இப்படியே போனால் அடுத்தமுறை தேர்வது கடினம் என்ற நிலை ஏற்படும் என்று திமுக உ.பி.கள் கவலை தெரிவித்தனர்.

இறுதியாக, கட்சி, ஆட்சி, சட்டமன்ற உறுப்பினர் என்ற மூன்று நிலைகளிலும் அமைச்சர் பொறுப்பிலிருக்கும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீழ்ச்சி அடைந்துள்ளார் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

பள்ளிக் கல்வித்துறையில் அமைச்சர் பொறுப்பிலிருந்து ஆசிரியர்களின் வெறுப்பைத்தான் சம்பாதித்துள்ளார்.

தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் வேலைக்குக் காத்திருக்கும் இளைஞர்களின் வெறுப்பை அமைச்சர் சம்பாதித்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் என்ற நிலையில் பொதுமக்களின் ஆதரவையும் கட்சியினர் ஆதரவையும் இழந்துள்ளார்.

இதுபோதாது என்று RSS ஆதரவு சிந்தனைக்குப் பச்சைக்கொடி காட்டுகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

திராவிட மாடல் ஆட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் செயல்பாடுகளைச் செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டும் அமைச்சரை சூழ்ந்துள்ளது.

அமைச்சர் மகேஸ் வீழ்ச்சிகளைச் சரிசெய்துகொண்டு எழுவாரா? என்ற கேள்விக்குக் காலம் பதில் சொல்லும்.

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.