இன்று [மே.29] ஷூட்டிங் ஆரம்பம்! நாளை மறுநாள்[மே.31] ரிலீஸ்! -’டெவிலன்’ பட உலக சாதனை!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சீகர்ஸ் பிக்சர்ஸ் பேனரில் பி.கமலகுமாரி தயாரித்த ‘தூவல்’, ’எக்ஸ்ட்ரீம்’ படங்களையடுத்து இப்போது தயாராகியுள்ள படம் ‘டெவிலன்’. மேற்கண்ட இருபடங்களில் ஹீரோவாக நடித்த ராஜ்குமார் தான் இப்படத்தின் ஹீரோ. ஹீரோயின்களாக கார்த்திகா, இந்திரா ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ‘பிக்கைய்’ அருண்.

கார்த்திகா, இந்திரா
கார்த்திகா, இந்திரா

Sri Kumaran Mini HAll Trichy

இதில் என்ன சாதனைன்னா… ‘நோபிள் உலக ரெக்கார்ட் பதிவிற்காக படத்தின் ஷூட்டிங் மே.29—ஆம் தேதி மாலை 3 மணிக்கு தொடங்கி, 30-ஆம் தேதி மாலை 3 மணிக்கு முடிகிறது. உடனேயே எடிட்டிங், சவுண்ட் மிக்ஸிங், உட்பட அனைத்து வேலைகளும் தொடங்கி, 31—ஆம் தேதி மாலை 3 மணிக்கு படம்  ரிலீஸாகிறது.  அதாவது ஷூட்டிங் தொடங்கி 48—ஆவது மணி நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய பக்காவாக திட்டமிட்டுள்ளனர் படத்தைத் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் ராஜ்குமாரும் இயக்குனர் அருணும்.

Flats in Trichy for Sale

இதுகுறித்து விரிவாக விளக்குவதற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பு மே.28—ஆம் மாலை 3 மணிக்கு நடந்தது. படத்தில் பணியாற்றும் ஒளிப்பதிவாளர், எடிட்டர், மியூசிக் டைரக்டர், டைரக்டர் அருண் குழுவினர், ஹீரோ ராஜ்குமார், இரு ஹீரோயின்கள் இந்த பிரஸ் மீட்டில் கலந்து கொண்டனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ராஜ்குமார்
ராஜ்குமார்

“எல்லாமே பக்காவாக திட்டமிட்டு, அனைத்து வேலைகளும் முடிந்த பின்பு நோபிள் உலக சாதனை ரெக்கார்ட் நிறுவனத்திற்குச் சொன்னோம். நாளை [ மே.29] நாங்கள் ஷூட்டிங்கை ஸ்டார்ட் பண்ணுவதிலிருந்து போஸ்ட்  புரொடக்‌ஷன் வேலைகள் முடியும் வரை கண்காணிப்பதற்காக இரண்டு மானிட்டர்கள் வருகிறார்கள். அனைவரும் நம்பிக்கையுடன் களம் இறங்கியுள்ளோம். நிச்சயம் சாதனை படைப்போம். அந்த சாதனையுடன் சனிக்கிழமை மாலை 3 மணிக்கு உங்களை சந்திப்போம்” என டீடெய்லாகவும் நம்பிக்கையாகவும் பேசினார் டைரக்டர் அருண்.

 

—   மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.