அங்குசம் பார்வையில் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’  

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு : ’நிஹரிகா எண்டெர்டெய்ன்மெண்ட்’ & ‘தி ஷோ பீப்பிள்’ ஆர்யா. எழுத்து—இயக்கம் : எஸ். பிரேம் ஆனந்த். நடிகர்-நடிகைகள் : சந்தானம், கீத்திகா திவாரி, செல்வராகவன், கெளதம் வாசுதேவ் மேனன், கஸ்தூரி, நிழல்கள் ரவி, யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா மாறன், ரெடின் கிங்ஸ்லி.  ஒளிப்பதிவு : தீபக் குமார் பதி, இசை : ஆஃப்ரோ, எடிட்டிங் : பரத் விக்ரமன், ஆர்ட் டைரக்டர் : ஏ.ஆர்.மோகன், வி.எஃப்.எக்ஸ் : ஹரிகரசுதன், ஸ்டண்ட் : சில்வா & ஹரி தினேஷ், காஸ்ட்யூம் டிசைனர் : ஜாஸ்மின் ஜோசப், சவுண்ட் டிசைன் : சிங்க் மீடியா, எக்ஸ்கியூடிவ் தயாரிப்பாளர் : மதன் ராஜ். பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்.

இந்தப் படத்தின் விமர்சனமும் இதான், கதையும் இதான். அச்சு ஊடகங்கள் வலுவாக இருந்த வரை சினிமா விமர்சனங்கள், விமர்சனங்களாக மட்டுமே இருந்தன. அப்போதும் ஒரு சில வன்மம் பிடித்த ஜென்மங்களை தலைமையாக கொண்டிருந்த சில பத்திரிகைகளில் விமர்சனம் என்ற பேரில் விஷம் கக்கியதையும் மறுப்பதற்கில்லை தான்.

Kauvery Cancer Institute App

டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்ஆனால் இந்த யூடியூப்னு ஒண்ணு வந்த பிறகு, கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக கூலிப்படை யூடியூபர்கள் விமர்சனம் என்ற பெயரில் நடிகர்-நடிகைகளையும் தயாரிப்பாளர்களையும் குதறியெடுக்கும் வெறிநாய்களாக மாறிவிட்டனர். ஒட்டு மொத்த சினிமாவும் தடுப்பூசி போட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கு.  புரோக்கர்கள் மூலம் தாங்கள் பேசிய அமெளண்ட் ஜிபேயிலோ, பேங்க் அக்கவுண்டிலோ கிரெடிட் ஆகிவிட்டால் போதும் கேவலாமன சினிமாவைக் கூட கோபுரம் அளவுக்கு உயர்த்திப் பிடிப்பார்கள். அவர்களின் அரிப்புக்கு  எவனும் சிக்கலைன்னா நல்ல சினிமாவை கிழித்து தொங்கவிட்டு உப்பு தடவிவிடுவார்கள்.

ஆனால் சமீபமாக நல்ல, தரமான ‘கண்டெண்ட்’ உள்ள சினிமாக்களை, இந்த கூலிப்படைகளின் கூச்சலையும் மீறி வெகுஜனங்கள் தாமாக முன்வந்து கொண்டாடித் தீர்க்கிறார்கள். இதனால் கூலிப்படைகளின் விமர்சனக் கொலைவெறி இன்னும் அதிகமாகிவிட்ட  அபாய கட்டத்தில் தான் இந்த ‘டிடி லெவல் நெக்ஸ்ட்’ டை ‘கண்டெண்ட்’ கம்மியாக இருந்தாலும் மேக்கிங்கில் குவாலிட்டியாக களம் இறக்கியிருக்கிறார்கள் தயாரிப்பாளர் ஆர்யா- ஹீரோ சந்தானம்—டைரக்டர் பிரேம் ஆனந்த் கூட்டணி.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘கிஸ்ஸா 47’ யூடியூப் சேனல் மூலம் சினிமாவை விமர்சிக்கிறார் சந்தானம். இதே போல பல யூடியூபர்களின் விமர்சனத்தால் நொந்து செத்துப் போன டைரக்டர் இருதயராஜ் [ செல்வராகவன் ] பாழடைந்த சினிமா பாரடைஸ் தியேட்டருக்கு சந்தானம், அவரது அப்பா நிழல்கள் ரவி, அம்மா கஸ்தூரி [!?], தங்கை யாஷிகா ஆனந்த், லவ்வர் கீத்திகா திவாரி  ஆகியோரைத் தூக்கி வந்து அலறவிட்டு பேயாக்கிவிடுகிறார். இந்த அஞ்சு பேருக்கும் மீண்டும் உயிர் வந்துச்சா? என்பதை இரண்டு மணி நேரம் 12 நிமிடம் கலர்ஃபுல் காமெடி எண்டெர்டெய்ன்மெண்டாக சொல்லியிருக்கிறார் டைரக்டர் பிரேம் ஆனந்த்.

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

மிலிட்டரி ஸ்டைல் ஹேர்கட்டிங் [ கோவிந்தா பாட்டுக்கு கூப்பாடு போட்டு கட் பண்ண வச்ச சங்கிக் கும்பல் இப்படி எழுதுனப் பார்த்து வயிறு எரிஞ்சு சாகட்டும் ], லூஸ் பேண்ட், கலர் டீஷர்ட், “ப்ரோ…ப்ரோ…”ன்னு ஸ்டைல் டயலாக் டெலிவரின்னு சந்தானம் ப்ரோ ஸ்மார்ட் ப்ரோவா இருக்கார். ஆனால் படம் முழுக்க ப்ரோ..ப்ரோன்னு சொல்றது கொஞ்சம் ஓவராகிப் போச்சு ப்ரோ.

டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்இளம் வயது ஹீரோயின் கீத்திகா திவாரிக்கு அவ்வளவாக வேலை இல்லை. ஏன்னா முக்கால்வாசி சீன்களில் ‘கோஸ்ட் மேக்கப்’பில் தான் வர்றார். ஆனால் நடுத்தர வயது யாஷிகா ஆனந்தும் ஐம்பது வயதைக் கடந்த கஸ்தூரியும் கவர்ச்சியை வாரி வழங்கி திக்குமுக்காட வைக்கிறார்கள். அதிலும் கஸ்தூரி.. தொடைக்கு மேலும் துணியைத் துணிவுடன் ‘துறந்து’ முனிவர்களையே மூச்சுவட்ட வைத்துவிட்டார். இதே ரூட்டில் தொடர்ந்தால்.. இனி கஸ்தூரி காட்டில் கரன்சி மழை தான்.

ஒரு சோபாவில் அமர்ந்து கொண்டே அதகளம் பண்ணுகிறார் செல்வராகவன். போலீஸ் அதிகாரியாக கெளதம் மேனனும் சில சீன்களில் டைமிங் காமெடியில் அசத்துகிறார். லொள்ளு சபா மாறன், ரெடின் கிங்ஸ்லி,  நிழல்கள் ரவி இவர்களையெல்லாம் ஓவர்டேக் பண்ணிவிட்டார் மொட்டை ராஜேந்திரன். “ஏம்பா… ஏதோ மேஸ்திரிப்பா..”, எண்ட் கார்ட் போடப்போறாம்பா”, “ஸ்க்ரோலிங் டைட்டில் போட்டுட்டாம்பா” என சந்தானத்துக்கே டஃப் கொடுக்கிறார் மொட்டை ராஜேந்திரன்.

சினிமா பாரடைஸ் தியேட்டர் செட், கப்பல் செட், பூத் பங்களா செட், ஜெஸிகா புக், இவற்றில் ஆர்ட்டைரக்டர் மோகனின் கடும் உழைப்பு, இந்த செட்டுக்குள் விஷுவல் ட்ரீட்டை மிகஸ் பண்ணி, ஸ்கிரீனில் கொண்டு வந்த வி.எஃப்.எக்ஸ். ஹரிகரசுதனின் உழைப்பு இதெல்லாம் அபாரம்.

டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்தியேட்டர் ஸ்கிரீனில் சந்தானம், அந்த ஸ்கிரீனில் சந்தானத்தின் ஸ்கிரீன்ப்ளே ட்விஸ்ட், ”மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டுங்கள், புகை பிடியுங்கள். முதல் பரிசு மரணம், இரண்டாம் பரிசு புற்று நேய், ஆறுதல் பரிசு மஞ்சக்காமாலை”, பி.ஜி.எம்.மாறுது, கில்லர் வர்றான், சப்டைட்டிலை கீழேதாம்பா போடுறான்” இதெல்லாமே டைரக்டர் பிரேம் ஆனந்தின் சூப்பர் ஸ்பெஷல் டச்.

அதுல பாருங்க டைரக்டரே… இன்பத்தீவுக்குள் கதை எண்ட்ரியான பிறகு, இழுஇழுன்னு இழுத்து  எப்படா ‘எண்ட் கார்ட்’ போடுவாய்ங்கன்னு கதறும் அளவுக்கு   இம்சை பண்ணிட்டீகளே? இதை எடிட்டர் ப்ரோகிட்ட சொன்னீகளா டைரக்டர் ப்ரோ..?இருந்தாலும் ‘டிடி,நெக்ஸ்ட் லெவல்’  ரொம்ப பெஸ்டுன்னு சொல்ல முடியாவிட்டாலும் ‘ஒர்ஸ்ட்’ இல்ல.

 

—   மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.