DIGITAL மோசடிகள்! வளர விடும் காவல்துறை !
இன்று மதியம் சுமார் 1.45 மணி…..
அப்போதுதான் கடைசி வாய் சாப்பிட்டு முடித்தேன்.
செல்போன் ஒலித்தது…..
அழைத்தது என்னுடைய உறவினர்!
பச்சையை அழுத்தினேன்….. எதிர்முனையில் இருந்து என் உறவினர் பதட்டத்தோடு, ” மாமா…… டெல்லியிலேருந்து க்ரைம் பிராஞ்சில் இருந்து வந்திருக்காங்கலாம்…. ”
” எதற்காம்….. என்னவாம்…… அவர்களிடம் போனைக் கொடு ”
போன் அந்த க்ரைம் பிராஞ்ச் அதிகாரியிடம் கொடுக்கப்படுகிறது நான் அவரிடம், ” சார்….. என்ன விசயம்…..? நீங்க எங்கேருந்து வந்திருக்கீங்க…..”
அவர்,” நான் டெல்லி க்ரைம் பிராஞ்சில் இருந்து வந்திருக்கிறேன். ஒரு விசாரணைக்காக வந்திருக்கிறேன்…… நீங்க யாரு…..? ”
நான், ” நான் அவங்களோட தாய் மாமா…..”
அவர், ” சாக்ரடீஸா…..? ”
நான், “ஆமாம்…… என்ன விசாரணை சொல்லுங்க…..”
அவர், ” போனில் சொல்ல முடியாது…. நேரில் வாங்க…..”
நான், “சரி….. வருகிறேன்….”

உடனே மாநகரக் காவல்துறை உளவுப் பிரிவு அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டு விவரத்தைச் சொன்னதும், அவர், ” சார்….. லோக்கல் ஸ்டேசனில் சொல்லாமல் விசாரணைக்கு வர மாட்டாங்க….. லோக்கல் ஸ்டேசனைத் தொடர்பு கொண்டு கேளுங்கள்….. பின்னர் என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்கேத் தெரியும் ” என்றார்.
அடுத்த சில நிமிடங்களில் ஆர்எஸ் புரம் காவல் நிலையத்தில் SSI சேகர் அவர்கள் முன்பு உட்கார்ந்து விபரம் சொன்னேன். அவர் ஒரு நொடியும் தாமதிக்காமல் PATROL ஐ அழைத்து SSI கருப்புசாமியிடம் விபரத்தைச் சுருக்கமா ச் சொல்லி சம்பவ இடத்துக்குப் போகச் சொன்னதோடு அவருடைய எண்ணை என்னிடம் கொடுத்து மேற்கொண்டு செய்யுங்கள் என்றார்.
அடுத்த சில நிமிடங்களில் நானும் SSI கருப்புசாமியும் என் உறவினரின் வீட்டு முன்பாகச் சந்தித்து வீட்ற்கு வந்து விட்டோம்…..
அதற்கு முன்பாக அந்த டெல்லி அதிகாரி என் உறவினரிடம், ” உங்க பெயரில் அணு குண்டுகள் தயாரிக்கும் வேதிப்பொருள் ஒன்றை வாங்கி இலங்கைக்கு இரண்டு முறை அனுப்பி இருக்கீங்க….. அடுத்ததாக வருகிற பத்தாம் தேதி உங்களுக்கு வர இருக்கிறது…… ” என்று சொல்லிவிட்டு சொந்த ஊரில் உள்ள அப்பா பெயர் ஊரின் பெயர் எல்லாவற்றையும் தெளிவாகச் சொல்லி உள்ளார். அந்த அதிகாரி என்னிடம் போனில் பேசியபோதுகூட நான் தாய் மாமா என்றதும் என் பெயரைச் சொன்னார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
எங்களைப் பார்த்ததும்….
அந்த டெல்லி க்ரைம் பிராஞ்ச் அதிகாரியின் முகத்தில் கலவரம்……
“உள்ளூர் காவல் நிலையத்தில் சொல்லாமல் இங்கே எப்படி விசாரணைக்கு வந்தீர்கள்…. ?” என்றேன்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
வர்கள் தவறு செய்யவில்லை…… இவர்கள் பெயரில் தவறு நடந்து கொண்டு இருக்கிறது என்பதைக் குறித்துச் சொல்லி எச்சரிக்கையாக இருக்கச் சொல்லத்தான் வந்தேன் ” என்றார்.
அந்த அதிகாரி பக்காவாக ஆவணப் படுத்திக் காட்டிய விதம் சாதாரண யாரையும் பயப்படுத்திவிடும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
நாங்கள் அடையாள அட்டையைக் கேட்டோம்….. காட்டினார்…… அதில் NATIONAL CRIME INTELLIGENCE AGENCY என்ற NON GOVERNMENTAL ORGANISATION தலைப்பில் இவரது பெயர் AUGUSTIAN BIJU. என்று இருந்தது. இது போலி அதிகாரி என்பதை உறுதி செய்தோம்.
உடனே…… அந்த டெல்லி அதிகாரி வந்த வாடகைக் காரில் அவரை ஏற்றி ஆர்எஸ்புரம் காவல் நிலையம் அழைத்து வந்தோம்.
அங்கு முத்து என்கிற இளம் ஆய்வாளர் அந்த நபரை விசாரித்தார். பின்னர் எங்களை அழைத்து, ” இவர் போலியான நபர்தான்….. உண்மையான க்ரைம் பிராஞ்ச் அதிகாரியாக இருந்தாலும் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு ஏன் உசார் படுத்த வர வேண்டும். இந்த NATIONAL CRIME INTELLIGENCE AGENCY என்பது காவல்துறை தொடர்புடையதோ அரசாங்கத் தொடர்புடையதோ அல்ல…..” என்றவர் அந்த நபரை எச்சரிக்கை செய்து எழுதிக் கொடுத்து விட்டுப் போங்க என்று அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு போகச் சொன்னார்.
இதில் ……
04.04.2025 / angusam / இணையதளத்தில் வெளியான முக்கிய கட்டுரைகள் 💐💐🔥🔥👌
காவல்துறை மீது சில குறைபாடுகள் இருப்பதாக உணர்ந்தேன். அவை :
1) இந்த நபர் போலியான நபர் என்பதை உண்மையான காவல் அதிகாரி தெரிந்து கொண்ட பின்னர். சாதாரணமாக விடுவித்தது சரிதானா…?
2) இதே வகையில் பல்வேறு மோசடிகள் DIGITAL ARREST என்று சொல்லி பெரிய பெரிய மோசடிகள் நடந்து வருவது இந்த இளம் ஆய்வாளருக்குத் தெரியும் அல்லவா…..? கொஞ்சம் துருவித் துருவி விசாரித்திருந்தால் இந்த நபரோ இவரைச் சார்ந்தவர்களோ அந்தக் குற்றங்களில் சம்மந்தப் பட்டிருந்தால் தெரிய வந்திருக்கும் அல்லவா?
3) இப்படிப்பட்ட குற்றத்தை இந்த ஒரு நபர் மட்டுமே அரங்கேற்ற முடியுமா? இவரின் பின்னணியில் உள்ளவர்கள் யாரென்று கண்டு பிடிக்க முயற்சித்து இருக்கலாம் அல்லவா?
4) இந்த நபரை விடுவிக்கும் முன்பு மேல் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டதா?
5) குற்றங்களை முளையிலேயே நசுக்குவது நல்லதா? வளர விட்டு அல்லல் படுவது நல்லதா?
6) இப்படி இவர்களை எளிதாக விட்டால் குற்றம் செய்ய ….. மிரட்டிப் பணம் பறிக்கக் கூடுதல் தைரியம் வராதா? —
— ஜே.டி.சாக்ரடீஸ்.