‘தீயவர் குலை நடுங்க’ ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!
‘சன் மூன் யுனிவர்ஸல் பிக்சர்ஸ்’ பேனரில் டாக்டர் ரவிச்சந்திரன் வழங்க, ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டுள்ளார். க்ரைம் த்ரில்லராக தயாராகியுள்ள இப்படத்தை ஜி. எஸ். ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்திருக்கிறார்.
‘ஆக்சன் கிங்’ அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷுடன் ‘பிக் பாஸ்’ அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஓ.ஏ.கே. சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஒளிப்பதிவு: சரவணன் அபிமன்யு, இசை: பரத் ஆசிவகன், படத்தொகுப்பு: லாரன்ஸ் கிஷோர், கலை இயக்கம் : அருண்சங்கர் துரை.
இறுதிக் கட்டப் பணிகள் முடிந்த நிலையில், படத்தை வெளியிடும் பணிகளில் படக்குழு பரபரப்பாக இயங்கி வருகிறது.
— மதுரை மாறன்.