2 வது பட்டியலை வெளியிட்டு கெத்து காட்டிய தினகரன் !
லோக்சபா தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு தமிழகம் தயாராகிவிட்டது என்றுதான் கூற வேண்டும். லோக்சபா தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது.
இந்த லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்த லோக்சபா தேர்தல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டியிட உள்ளது. பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் தேர்தலை தனியாக சந்திக்க இந்த கட்சி முடிவெடுத்து இருக்கிறது. இதனால் அந்த கட்சி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
முதற்கட்ட பட்டியல்
அமமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பட்டியலை வெளியிட்டார்.
தென் சென்னை- இசக்கி சுப்பையா.
ஸ்ரீபெரும்புதூர்- தாம்பரம் நாராயணன்
காஞ்சிபுரம் (தனி)- முனுசாமி
விழுப்புரம் (தனி)- கணபதி
சேலம் – எஸ் கே செல்வம்
நாமக்கல் – சாமிநாதன்
ஈரோடு- செந்தில் குமார்
திருப்பூர் – எஸ்.ஆர் செல்வம்,
நீலகிரி (தனி)- எம்.ராமசாமி,
கோவை – அப்பாதுரை
பொள்ளாச்சி – எஸ். முத்துக்குமார்
கரூர் – தங்கவேல்
திருச்சி- சாருபாலா தொண்டைமான்
பெரம்பலூர் – ராஜசேகரன்
சிதம்பரம் (தனி) – இளவரசன்
மயிலாடுதுறை – செந்தமிழன்,
நாகை (தனி)- செங்கொடி,
தஞ்சை – முருகேசன்
சிவகங்கை – வி. பாண்டி
மதுரை – டேவிட் அண்ணாதுரை
ராமநாதபுரம் – ஆனந்த்
தென்காசி (தனி) – எஸ்.பொன்னுத்தாய்
நெல்லை – ஞான அருள் மணி
அதன்பின் இரண்டாம் கட்ட பட்டியலுக்காக நிறைய ஆலோன்சனைகள் செய்யப்பட்டது. கடந்த 4 நாட்களாக இதில் ஆலோசனைகள் நடத்தப்பட்டது. முக்கிய வேட்பாளர்களை களமிறக்க டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்த நிலையில் தற்போது லோக்சபா தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியல்.
தேனி -தங்க தமிழ்ச்செல்வன்
தருமபுரி – பி.பழனியப்பன்
ஆரணி – செந்தமிழன்
கள்ளக்குறிச்சி – கோமுகி மணியன்
தூத்துக்குடி – டாக்டர். புவனேஸ்வரன்
வடசென்னை – பி சந்தான கிருஷ்ணன்
அரக்கோணம்- பார்த்திபன்
வேலூர் – பாண்டுரங்கன்
கிருஷ்ணகிரி – எஸ். கணேசகுமாரன்
திருவண்ணாமலை ஞானசேகர்
திண்டுக்கல் – ஜோதி முருகன்
கடலூர் – கே.கார்த்திக்
விருதுநகர் – பரமசிவன் அய்யப்பன்
கன்னியாகுமரி – லட்சுமணன்