அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

wait and see ! திமுக கூட்டணி நிச்சயமா உடையும் ! ஜோசியம் சொன்ன திண்டுக்கல் சீனிவாசன் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

சும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2014ல் அளித்த ரூ.4.5 கோடி மதிப்பிலான 13 கிலோ எடையுள்ள தங்க கவசம் மதுரை அண்ணாநகரில் பாங்க் ஆப் இந்தியா வாங்கி பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அக்.30 அன்று தேவர் ஜெயந்தியன்று சிலைக்கு அணிவிப்பதற்காக, அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள் ஆகியோர் வங்கிக்கு நேரில் வந்து கையெழுத்திட்டு தங்க கவசத்தை பெற்றனர். முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, மணிகண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். காவல்துறை பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படும் தங்கக்கவசம் நவம்பர் 1 அன்று மீண்டும் வங்கி பெட்டகத்தில் வைக்கப்படும்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

திண்டுக்கல் சீனிவாசன்இந்நிகழ்வில் பங்கேற்ற திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, “2026 தேர்தலில் எல்லா கட்சியும் தனித்து நிற்க தயார் என்றால் அதிமுக முதலில் ரெடியாக இருக்கும். தேர்தல் நேர சூழலை பொறுத்தே இதை முடிவு செய்ய முடியும்.

எடப்பாடி பழனிச்சாமி குறித்து தொண்டன் கூட விமர்சிக்கலாம், ஆனால் டிடிவி தினகரன் விமர்சிப்பதற்கு தகுதி இல்லை. அவர் தனியாக ஒரு கட்சி நடத்திக் கொண்டிருப்பவர்.

முதல்வர் பிறந்தநாள்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன்

விஜய் மாநாட்டில் அண்ணா படம் தவிர்க்கப்பட்டது குறித்து தெரியவில்லை. No comments before Manadu. After Manadu we will tell something” என்றார்.

திமுக கூட்டணி எப்போது உடையும் என ஜோசியக்காரர் போல எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டிருக்கிறார் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு, “பெரிய ஜோசியக்காரர் ஸ்டாலின் ஐயா தான். நிச்சயமாக திமுக கூட்டணி உடையும். தேர்தல் நேரத்தில் தெரியும். Wait and see. திமுக கூட்டணிக்குள் விவாதங்கள் நடப்பதாக ஸ்டாலின் சொன்னாலும், விரிசல் நடப்பது உறுதி” என பதிலளித்தார்.

 

— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.