அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மாற்றுத்திறனாளி மாணவி மர்ம மரணம் ! உயர்நீதிமன்ற அதிரடி உத்தரவு !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

திருச்சியில் பார்வையற்றோர் பள்ளியில் பயின்ற 12 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட கோரி தாய் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடர்ந்த வழக்கு.

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) தலைமையில் குழு அமைத்து நான்கு வாரத்தில் விசாரணை செய்து முடிக்க வேண்டும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கமலா உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு.

எனது மகள் ராஜேஸ்வரி பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி இதனால் திருச்சியில் உள்ள பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிக்கான அரசு பள்ளியில்  அங்கே தங்கி படித்து வந்தாள்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

இந்நிலையில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் விடுதி காப்பாளர்களால் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக தன்னிடம் கூறினால்.

தற்போது பன்னிரண்டாம் வகுப்பு என்பதால் இன்னும் சில மாதங்களில் பள்ளி படிப்பு முடிந்து விடும் என கூறி அவளை அங்கு தங்கி படிக்க அறிவுறுத்தினேன்.

இந்நிலையில் கடந்த 2025 மார்ச் மாதம் 9ஆம் தேதி காலையில் அவளது பள்ளியில் இருந்து எனக்கு போன் வந்தது அதில் எனது மகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

சற்று நேரத்தில் காவல்துறையிடம் இருந்து எனது மகள் பள்ளி வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்தது அதிர்ச்சி அடைந்து உடனடியாக விரைந்து சென்றோம். அவளது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தது.  இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

2026 June 11 - 17 Angusam Book

திருச்சியில் பார்வையற்ற பள்ளி மாணவி மர்ம மரணம். காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைத்து 4 வாரத்தில் விசாரணையை முடிக்க ...வழக்கு பதிவு செய்து ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் காவல்துறை எவ்வித விசாரணை இன்றி குற்றவாளிகளுக்கு சாதகமாக விசாரணையை முடிக்கும் நோக்கிலேயே செயல்படுகின்றனர்.

எனது மகள் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளது .

நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் விடுதி காப்பாளர் அனிதா ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் மட்டும் செய்யப்பட்டனர்.

எனது மகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு பள்ளி தலைமை ஆசிரியரால்  திட்டமிட்ட படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

எனவே இந்த வழக்கை திருச்சி அரசு மருத்துவமனை காவல்துறை வசம் இடமிருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கௌரி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கோகுல் ஆஜராகி.

இந்த வழக்கில் மாணவியின் தாய் கணவனை இழந்து நான்கு குழந்தைகளுடன் மிகவும் வறுமையில் வாழ்கிறார் இதை அறிந்து குற்றவாளிகள் மாணவியை பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை செய்துள்ளனர். எனவே வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வாதிட்டார்.

இதனை பதிவு செய்த நீதிபதி இந்த வழக்கை திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) தலைமையில் குழு அமைத்து நான்கு வாரத்தில் விசாரணை செய்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.