கொஞ்சம் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளுங்களேன் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

இன்று (19.8.26 )அதிகாலை 1.45 மணி அளவில் நடந்த உண்மை சம்பவம்.

குடும்பத்தினர் ரோடு சுற்றுலா செல்லும் வழியில் விராலிமலை டோல் தாண்டி ஒரு டீ கடையில் குடும்பத்தினரோடு டீ குடித்தோம். ஒரு 60 வயது உடைய சகோதரர் மிகவும் கவலையுடன் பயத்துடன் தடுமாற்றத்துடன் நின்றிருந்தார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

நான் உடனே சென்று என்ன பிரச்சனை? என்ன நடந்தது? என்று கேட்டேன் அதற்கு அவர் நான் சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்கிறேன் இந்த இடத்தில் பஸ்ஸில் இறங்கி டீ குடித்து விட்டு கழிவரைக்கு சென்று வந்தேன். அதற்குல் நான் வந்த பஸ் எடுத்துட்டு போயிட்டாங்க என்ன செய்வது என்று தெரியவில்லை.

பஸ்ஸில் பேக்கில் பணம் அதிகம் உள்ளது என்று மிகவும் பயத்துடன் மிகவும் பதற்றத்துடன் வருத்தப்பட்டார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

உடனே நான் அவரின் செல்போனை வாங்கி அவர் டிக்கெட்டை செக் பண்ணி டிரைவரை பிடிக்க முயற்சி செய்தேன்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஆனால் டிரைவரை பிடிக்க முடியவில்லை. அதன் பின்பு 100க்கு போன் செய்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்து விராலிமலை காவல் நிலையம் காவல் ஆய்வாளர் நம்பரை வாங்கி பேச முயற்சி செய்தேன்.

பிறகு பஸ்  கம்பெனி பெயரை வலைத்தளத்தில் ஆய்வு செய்து பல முயற்சிகள் செய்து டிரைவர் நம்பர் கிடைத்தது.

பிறகு டிரைவருக்கு தகவல் தெரிவித்து அவர் கிட்டத்தட்ட 25 கிலோமீட்டர் தாண்டி சென்று விட்டார். பஸ்சை அங்கே நிறுத்த சொல்லிவிட்டு நாங்கள் வந்த டூரிஸ்ட் வேன்ல  சகோதரரை ஏற்றி சென்றோம்.  25 கிலோ மீட்டர் தாண்டி பஸ் நின்று இருந்தது.

பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் எப்படி இவரை விட்டு செல்லலாம் என்று கடினமாக பேசி திட்டியவுடன் டிரைவர் மன்னிப்பு கேட்டார். அதன் பின்பு சகோதரரை பத்திரமாக பஸ்ஸில் ஏற்றிவிட்டோம். அவரின் பெயர் செல்வகுமார் என்று எங்களிடம் கூறினார். உடனே அவர் எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மாபெரும் நன்றியினை தெரிவித்தார்.

வயதானவர்கள் தனியாக பயணம் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

—  சையது முஸ்தபா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.