அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ தேங்ஸ் கிவிங் மீட்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

சிதாரா என்டர்டெயின்மென்ட் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தி ஒன் ‘சூர்யா’ நடிப்பில் தயாராகி ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பிரம்மாண்டமான வெற்றியை பெற்று ரசிகர்களின் பேராதரவுடன் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த படக்குழுவினர், படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதனை முன்னிட்டு, படக்குழுவினர் பங்கேற்ற நிகழ்ச்சி நேற்று (ஆக.18) நடைபெற்றது. இதில் விநியோகஸ்தர் ஹரிதா லிங்கசாமி, நடிகர் சுனில் ரெட்டி, பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், நடிகைகள் ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ, மமீதா பைஜூ, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குநர் வெங்கி அட்லூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

நிகழ்ச்சியில் பேசியவர்கள்….

 பவானி ஸ்ரீ

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

” இந்தப் படத்தில் எனக்கு சிறிய கதாபாத்திரம் தான். ஆனால் அதையும் இயக்குநர் நன்றாக எழுதியிருந்தார். மேக்னா என்ற அந்த கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கு நன்றி.

சிறிய வயதிலிருந்து திரையில் பார்த்து வியந்த நட்சத்திர நடிகரான ‘தி ஒன்’ சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறோம் என்றவுடன் எனக்குள் பயம் இருந்தது. ஆனால் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் இயல்பாக பேசி, ‘மேக்னா கதாபாத்திரம் நல்ல கதாபாத்திரம், அதில் சிறப்பாக நடிக்க வேண்டும்’ என ஊக்கம் கொடுத்தார். அவர் அப்படி சொன்ன பிறகு, எனக்குள் இருந்த பயம் நீங்கி இயல்பாகி விட்டேன். அவருடன் இணைந்து பணியாற்றிய நாட்கள் மறக்க முடியாதது”.

ஹரிதா லிங்கசாமி
ஹரிதா லிங்கசாமி

ராதிகா சரத்குமார்

” இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி.

இந்தக் காலத்தில் மற்றவர்களின் கவனத்தை கவர்ந்து அதை தக்க வைத்துக் கொள்வது என்பது குறைந்துவிட்டது. ஒரு நிமிடத்திற்கு மேல் யாரிடமும் பேச முடிவதில்லை. ஆனால்  ரசிகர்களை அன்பாலும் … பாசத்தாலும்… ஒரே சிந்தனையுடன் இந்தப் படத்தின் கதையை நிதானமாகச் சொல்லி.. அதில் ஒரு வெற்றியை பெற்று, அந்த மேடையில் நான் நின்று கொண்டிருக்கிறேன். இதை கேட்கும் போதும்… பேசும் போதும்… பெருமிதமாக இருக்கிறது.

சினிமாவில் ஒவ்வொரு கதைக்கு பின்னாலும் ஒரு குடும்பம் இருக்கும். அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் கஷ்டப்பட்டு வேலை செய்து வெற்றியடைய செய்ய வேண்டும் என்ற கனவு எல்லோருக்கும் இருக்கும். அந்த குடும்பத்திற்குள் ஒரு பந்தம் இருக்கும். அது சில படங்களில் முழுவதுமாக அமையும். அப்படி ஒரு திரைப்படம் தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த படத்தில் அனைவரும் ஒரு குடும்பமாகத்தான் இணைந்து பணியாற்றினார்கள்.

‘சூரியவம்சம்’ படத்திற்குப் பிறகு நான் ரொம்ப ரசித்த படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் புத்திசாலித்தனமாக பேசும். ஒவ்வொரு கதாபாத்திரமும் தனக்கான நியாயத்துடன் நேர்மையாக பேசும். இதற்காக மீண்டும் ஒருமுறை வெங்கிக்கு நன்றி சொல்கிறேன். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அவர் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் ”

 மமீதா பைஜூ

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

“இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி.

இதுவரை இந்தப் படத்தை பார்க்காதவர்கள் திரையரங்கத்திற்கு சென்று பாருங்கள் பார்க்க வேண்டும். இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது மனதிற்குள் ஒரு மன நிறைவு ஏற்படும்”.

மமீதா பைஜூ
மமீதா பைஜூ

ஜி. வி. பிரகாஷ் குமார்

“சூர்யாவிற்கு இது முக்கியமான வருடம். அடுத்தடுத்து இரண்டு பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். மூன்றாவது படத்தையும் விரைவில் வழங்குவார். தீபாவளி அல்லது இந்த ஆண்டின் இறுதிக்குள் ரிலீஸ் ஆகும்.

இந்தப் படத்திற்காக இறுதிக்கட்டத்தில் மூன்றே நாட்களில் இரண்டு பாடல்களை உருவாக்கினோம். அந்த இரண்டு பாடல்கள் தான் தற்போது மிகப்பெரிய வெற்றியை பெற்று, அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

மேஜிக் மொமென்ட்ஸ் எப்போது வரும் என்று தெரியாது. இசையில் எப்போது வேண்டுமென்றாலும் அந்த மேஜிக் நிகழும். இதற்காக மீண்டும் ஒருமுறை வெங்கிக்கு நன்றி சொல்கிறேன்.

இந்தப் படத்திற்கு இதுவரை ஒரு எதிர்மறையான விமர்சனங்களும் வரவில்லை. அது இதன் மிகப்பெரிய சிறப்பம்சம். இது மிக அரிதாக நிகழக்கூடியவை”.

இயக்குநர் வெங்கி அட்லூரி

“சூர்யா இப்போது இங்கே இல்லை. இருந்தாலும் அவருடைய அன்பும், ஆதரவும் அனைவருக்கும் இருக்கிறது. நான் அவரிடம் கதையை சொன்ன போது அவருடைய எதிர்பார்ப்பு குறித்து எதுவும் சொல்லாமல் இந்த குடும்பக் கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார். இயல்பிலேயே அவருக்குள் இருந்த ஒரு துணிச்சல்தான் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் என நான் நினைக்கிறேன். ரசிகர்கள் மீதும் அவர் வைத்திருக்கும் அன்பு எதனுடனும் ஒப்பிட முடியாதது.

இயக்குநர் வெங்கி அட்லூரி
இயக்குநர் வெங்கி அட்லூரி

இப்போதுதான் திரையுலக வணிகர் ஒருவர்  ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ 150 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது என்றார். அதைக் கேட்கும் போது எனக்கு சிலிர்த்தது.

சூர்யா ரசிகர்களுக்கு எப்போதும் புதுவிதமான விருந்தை வழங்குவதை தான் முக்கியமானதாக பார்க்கிறார். இதுவும் ரசிகர்கள் மீதான ஒரு வகையான அன்புதான்.

திரையரங்குகளில் விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டிற்கும்… படத்தை பார்க்கும் ரசிகர்களின் ஒவ்வொரு கரவொலிக்கும்…. நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ அல்ல.. விஸ்வநாதன் குடும்பத்தினருக்கு அனைவரும் தொடர்ந்து ஆதரவு வழங்குங்கள்”.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.