அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பணிமாறுதல் வழங்குவதில் பாரபட்சம் .. வசூல் வேட்டையில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர்

0

திருச்சியில் அடகு நகையை விற்க

பணிமாறுதல் வழங்குவதில் பாரபட்சம் .. வசூல் வேட்டையில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர்

வருவாய் துறையில் உள்ள அலுவலர்களுக்கு அடிக்கடி பணி மாறுதல் வழங்கப்படுகிறது. அப்படி வழங்கப்படும் போது பணிமாறுதல் பெற்றவர்கள் ஒரு பெரும் தொகையை மாவட்ட வருவாய் அலுவலருக்கு கொடுத்து மீண்டும் அதே இடத்தில் வந்து விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

தேனி மாவட்ட வருவாய் அலுவலர் சுப்ரமணியன், செராஸ்தார் ஜஸ்டின் சாந்தப்பா இருவர் கூட்டணிகளும் பணி மாறுதலில் பாரபட்சம் காட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக தேனி மாவட்டம், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக நேர்முக உதவியாளர் ரமேஷ், இவர் தொடர்ந்து எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

செராஸ்தாரரின் பினாமியாக செயல்படும் ஒருவருக்கு தேனி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள புளியமரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்கி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக, வருவாய் துறையில் போடி தாலுகா அலுவலகத்தில் நீண்ட காலமாக பணியாற்றிய வேல்முருகன் என்பவருக்கு வேறு இடத்திற்கு பணிமாறுதல் வழங்கப்பட்டது, அவரோ மீண்டும் அதே இடத்திற்கு பணிமாறுதல் பெற்று வந்து விட்டார்.

https://www.livyashree.com/

தேனி மாவட்டத்தில் திமுகவை சேர்ந்த ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன், கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் ஆகியோர் பரிந்துரை செய்யும் நபர்களுக்கு உடனடியாக பணிமாறுதல் வழங்கியுள்ளார்.

தேனி மாவட்டத்தில் வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்களுக்கு மட்டுமே பணி மாறுதல் வழங்கப்படுவதாகவும் அரசு ஊழியர் சங்கம் உள்பட வேறு சங்க ஊழியர்களுக்கு பணி மாறுதல் வழங்க பாரபட்சம் காட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.