முதலமைச்சர் போல நடந்து கொள்ளும் மாவட்ட ஆட்சியர் ! பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் ஆவேசம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரரருக்கு நிவாரணம் கேட்க சென்ற போது மாவட்ட ஆட்சியர் ஒருமையில் பேசியதாகவும், மாடுபிடி வீரர்களையும், காளை உரிமையாளர்களை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் மதுரை மாவட்ட ஆட்சியர் மீது  தமிழக அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் திருமாறான் பேட்டி…

கடந்த 14 ஆம் தேதியன்று மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட மாடுபிடி வீரரான விளாங்குடியை சேர்ந்த நவீன்குமார் போட்டியின்போது மாடு முட்டி உயிரிழந்தார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

இந்நிலையில் அவருக்கு அரசு சார்பில் 25லட்சம் ரூபாய் உதவி தொகை வழங்க வேண்டும் எனவும் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்த 7 பேருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும்,

மாடுபிடி வீரர்களுக்கு இன்சூரன்ஸ் அளிக்க வேண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை பாரம்பரிய விளையாட்டு போட்டியாக அறிவிக்க வேண்டும்.  ஜல்லிக்கட்டு மாடு பிடி வீரர்களுக்கு பரிசுகளை வழங்கும்போது மரியாதையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை சந்தித்து மனு அளித்தனர்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

அப்போது ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களையும், காளை உரிமையாளர்களையும் இழிவுபடுத்தி பேசுவதாக மாவட்ட ஆட்சியர் பதிலளித்துள்ளார் இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் பேசியபோது …

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடு முட்டு உயிரிழந்த மதுரை மாவட்டம் விளாங்குடி பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் என்பவரின்  குடும்பத்திற்கு  25 லட்ச ரூபாய் அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை விடுத்த போது அவனா வந்தான் புடிச்சான் செத்தான்,  செத்தவன் செத்தவன் தான் ஒன்னும் செய்ய முடியாது என மாவட்ட ஆட்சியர் தங்களை ஒருமையில் பேசியதாகவும் மாவட்ட ஆட்சியர் முதலமைச்சர் போல நடந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் திமுக மாவட்ட செயலாளர் போல தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

தங்களுடைய கோரிக்கையை தமிழக அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தான் நாங்கள் பரிந்துரை  அளித்தோம் ஆனால்  மாவட்ட ஆட்சியர் இது போன்ற ஜல்லிக்கட்டு போட்டி வீரர்களுக்காக வந்த தங்களை இழிவு படுத்தி பேசி விட்டதாகவும் , மாடுபிடி வீரர்களையும் காளை உரிமையாளர்களை அவமானப்படுத்தும் வகையில் பேசிய மாவட்ட ஆட்சியர் மீது  தமிழக அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

என்னைபோன்று கட்சியின் தலைவருக்கே இந்த நிலை என்றால். மனு அளிக்கும்போது பொதுமக்களின் நிலை என்ன ஆகும் ஏன் இந்த மாவட்ட ஆட்சியரின் செயல் இப்படி உள்ளது என்றார்.

 

—      ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

Saravana Multispeciality Hospital Pvt. Ltd., Madurai,

Leave A Reply

Your email address will not be published.