திவ்யா துரைசாமியின் ‘திவ்ய தரிசனம்’
திவ்யா துரைசாமியின் ‘திவ்ய தரிசனம்’
பெரம்பலூரைச் சேர்ந்த தமிழ்ப் பொண்ணு திவ்யா துரைசாமி. தனியார் நியூஸ் சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்து, அதன் பின் கோலிவுட்டில் என்ட்ரியானவர். ‘சஞ்சீவன்’ என்ற படத்தில் தான் அறிமுக மானார். அதன் பின் ‘குற்றம் குற்றமே’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ போன்ற படங்களில் இதுவரை நடித்து முடித்திருந்தாலும் வலுவான கேரக்டர்கள் அமையாததால், திவ்யாவினால் தனி ஹீரோயினாக ஜொலிக்க முடியவில்லை.
ஆனால் இப்போது மாரிசெல்வராஜின் ‘வாழை’ படத்தில் நடித்திருப்பதன் மூலம் கோலிவுட்டில் ஜொலிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்காம் திவ்யா துரைசாமிக்கு. இந்த ‘வாழை’யில் வலுவான கேரக்டர் என்றாலும் கிளாமரும் எனக்கு ‘செட்’டாகும் என்பதை புரூஃப் பண்ணுவதற்காக அடிக்கடி கிளாமர் தூக்கலான ஸ்டில்களை ’செட் செட்’ டாக ரிலீஸ் பண்ணி திவ்ய தரிசனம் தந்து கொண்டிருக்கிறார் திவ்யா துரைசாமி.
-மதுரை மாறன்