“டிரைலரோட போச்சே” தவிக்கும் தங்கர்பச்சான்!

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

“டிரைலரோட போச்சே” தவிக்கும் தங்கர்பச்சான்!

தனது மகன் விஜித் பச்சானை ஹீரோவாக்கி ‘டக்குமுக்கு டிக்கு தாளம்’ என அழகான தமிழில் தலைப்பு வைத்து நான்கு வருடங்களுக்கு முன்பு படத்தை ஆரம்பித்தார் ஒளி ஓவியரும் தமிழ்ப் பற்றாளருமான தங்கர்பச்சான். கன்னட சினிமாவிலிருந்து மிலனா நாகராஜ் என்பவரைக் கூட்டி வந்து தனது மகனுக்கு ஜோடியாக்கினார். ‘ட.மு.டி.தா.’ தங்கரின் சொந்தத் தயாரிப்பு என்றாலும் ஃபைனான்ஸ் பின்னணி முழுவதும் அதிமுக புள்ளியான சைதை துரைசாமி தான்.

செம்ம சூப்பரான திரைப்படம்..

தங்கர்பச்சான்
தங்கர்பச்சான்

மேற்படி படத்தின் ஷூட்டிங்கை செம விறுவிறுப்பாக முடித்து, முக்கால்வாசி முடிந்த நிலையில் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டரில் ‘டக்கு முக்கு டிக்கு தாள’த்தின் டிரைலர் ரிலீசையும் பிரம்மாண்டமாக நடத்தினார் தங்கர். ஆனால் அதற்குப் பிறகும் படத்தை வாங்குவாரில்லை, சீண்டுவாரில்லை.

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

5


தன்னோட மகன் தமிழ் சினிமாவில் ஹீரோவா ஜெயிக்கலேன்னா, தமிழ் சினிமாவே அழிஞ்சிருமே என ரொம்பவே கவலைப்பட்டார் தங்கர். என்ன பண்ணலாம் என்ற யோசனையில் இருக்கும் போது தான் சிக்கினார் திருச்சியைச் சேர்ந்த வீரசக்தி என்பவர். ரொம்ப தெளிவா சொல்லணும்னா ‘நியோ மேக்ஸ்’ சீட்டிங் கும்பலின் சூத்திரதாரிகளில் இந்த வீர சக்தியும் ஒருவர்.இந்த வீரசக்தி ஏற்கனவே புளூபிலிம் ஃபேமஸ் சன்னிலியோனை வைத்து ‘ஓ மை கோஸ்ட்’ என்ற படம் எடுத்து ஃபேமஸானவர். இப்படிப்பட்ட பராக்கிரம சாலியின் பாக்கியம் தங்கருக்கு கிடைத்தது.


உடனே பாரதிராஜா, கௌதம் வாசுதேவ்மேனன், அதிதிபாலன், யோகிபாபு ஆகியோரை வைத்து ‘கருமேகங்கள் கலைகின்றன’ என்ற படத்தையும் சூப்பர் ஸ்பீடில் டைரக்ட் பண்ணினார். “என் மகன் ஹீரோவா நடிச்ச ‘ட.மு.டி.தா.’வை யாருமே சீண்ட மாட்டேங்குறாய்ங்க. அதனால இந்த ‘க.மே.க.’ படத்துடன் இலவச இணைப்பா என்னோட மகன் படத்தையும் வாங்கிக்கணும்” என கண்டிஷன் போட்டார் தங்கர். சன்னிலியோனையே பார்த்த வீரசக்திக்கு இதெல்லாம் சப்பை மேட்டர் என்பதால் ஓகே சொல்லிட்டார்.


இதனால் வெரி ஹேப்பியான தங்கர், ‘கருமேகங்கள் கலை கின்றன’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவையும் ஆறேழு மாதங்களுக்கு முன்பு, சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிரம்மாண்ட(??)மாக நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் தான் கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு தங்கப் பேனா வெல்லாம் பரிசளித்தார் வீரசக்தி. இவ்வளவு நேரம் படிச்சீகளே அந்த வீரசக்தி தான்…இதோ இப்ப நியோமேக்ஸ் சீட்டிங் கேஸ்ல சிக்கியிருக்காரு. இதனால ரொம்பவே தவியாய் தவிக்கிறாரு தங்கர்பச்சான்.

7

-மதுரை மாறன்

6
Leave A Reply

Your email address will not be published.