அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திமுக அரசு இந்த விசயத்தில் சாதித்துள்ளது!

திருச்சியில் அடகு நகையை விற்க

திமுக என்ற கட்சி நடத்தும் அரசு நிர்வாகத்திற்கு (முதல்வரின் தனிப் பிரிவுக்கு) நான் 100 க்கு 100 மதிப்பெண்கள் கொடுப்பேன்.  சென்ற வருடம் வரைக்கும் முதல்வரின் தனிப்பிரிவு அருமையாக செயல்பட்டு வந்தது. இப்போது அந்த பிரிவு 35 மதிப்பெண்களுக்கு கீழே வந்து விட்டது.  அந்த ஐஏஎஸ் பெண்மணி என்ன செய்து கொண்டு இருக்கின்றார்?

ஆனால் நான் முதல்வன் என்ற திட்டம் கல்லூரிகளில் முன்னெடுக்கப்படுகின்றது. மிக சிறப்பான் திட்டம் ஆகும். கண்கூடாக பார்த்து வருகிறேன்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இந்திய ஆட்சிப் பணி இந்திய காவல் பணி போன்ற குடிமையியல் துறைகளில் வெற்றிகரமாக செயல்பட்டுகின்றது.  திமுக இதற்குள் தலையைக் கொடுப்பதில்லை. அதிகாரிகளை நம்பி ஒப்படைத்துள்ளார்கள்.

மரியாதைக்குரிய சுதாகர் அவர்களை அவரின் தலைமையில் இந்த அணி மிக மிக அருமையாக செயல்பட்டு வருகின்றது. நான் வழங்கும் மதிப்பெண்கள் 85.  காரணம் எனக்கு நேரிடையான தொடர்பு இருக்கின்ற காரணத்தில் பல விசயங்களை அடுத்த வருடம் எழுதுகிறேன்.  ஆட்சி மாறினாலும் திமுக அரசு இந்த விசயத்தில் சாதித்துள்ளது என்பேன்.

முதல்வர் பிறந்தநாள்

DMK government achievement2025-ஆம் ஆண்டுக்கான குடிமைப்பணி முதன்மைத் தேர்விற்கு 297 ஆர்வலர்கள் முழு நேரமாகவும், 79 ஆர்வலர்கள் பகுதி நேரமாகவும் இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார்கள். இந்த ஆர்வலர்களுக்கு படிப்பு ஊக்கத் தொகையாக மாதம் ரூ. 3000/- வீதம் மூன்று மாதங்களுக்கு மொத்தம் ரூ. 9000/- வழங்கப்பட்டது. இவர்களுள் முதன்மைத்தேர்வில் 87 ஆர்வலர்கள் வெற்றி பெற்றார்கள். முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற ஆர்வலர்களுக்கு ஆளுமைத் தேர்வுப் பயிற்சி முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் 28 நாட்களுக்கு அளிக்கப்பட்டது. மேலும், பயிற்சியின் இறுதியில் மாதிரி ஆளுமைத் தேர்வு இப்பயிற்சி மையத்தால் 19.12.2025 மற்றும் 20.12.2025 ஆகிய இரண்டு நாட்கள் நடத்தப்பட்டது. இம்மாதிரி ஆளுமைத் தேர்வில் 111 ஆர்வலர்கள் பங்கேற்றனர். தற்போது புதுதில்லியில் நடைபெற்ற ஆளுமைத் தேர்வில் (interview) கலந்து கொள்ள ஆர்வலர்களுக்கு தலா ரூ.5,000/- வழங்கப்பட்டது. மேற்கண்ட ஆர்வலர்களுள், 14 மகளிர், 2 மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ் வழியில் எழுதியவர்களுள் ஒருவர் உட்பட மொத்தம் 39 ஆர்வலர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணித் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் தொடங்கப்பட்ட ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், முதல்நிலைத் தேர்வு 2025-க்கு தயாரான 1000 தமிழ்நாட்டு இளைஞர்கள் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2024-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் முதல் ரூ.7,500/- பத்து மாதங்களுக்கு வழங்கப்பட்டது. அவர்களில், 315 பேர் 2025-ஆம் ஆண்டு முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களையும் சேர்த்து முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிபெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 659 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. முதன்மைத் தேர்வில் (Mains Exam) தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கான  நேர்முகத் தேர்வு (Personality Test)  புதுடெல்லியில் நடத்தப்படுவதைக் கருத்தில் கொண்டு பயணச் செலவு மற்றும் சிறப்புப் பயிற்சிகளுக்காக 161 நபருக்கு 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளின் விளைவாக 06.03.2026 அன்று வெளியிடப்பட்டுள்ள 2025-2026-ஆம் ஆண்டுக்கான அகில இந்திய குடிமைப் பணி தேர்வு முடிவில் “நான் முதல்வன்” ஊக்கத்தொகையுடன் கூடிய உறைவிடப் பயிற்சித் திட்டத்தில் பயனடைந்த  எம். ராஜேஷ்வரி சுவி அகில இந்திய அளவில் 2-ஆம் இடமும், ஆர். ஸ்ருதி அகில இந்திய அளவில் 18-வது இடத்தையும், “நான் முதல்வன்” ஊக்கத்தொகைத் திட்டத்தில் பயனடைந்த ராஜமொய்தின் 7-ஆம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மேலும், “நான் முதல்வன்” ஊக்கத்தொகையுடன் கூடிய உறைவிடப் பயிற்சித் திட்டத்தில் பயனடைந்த அருண்குமார் முதன்மைத் தேர்வினை முழுதும் தமிழில் எழுதி 585-ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அகில இந்திய குடிமைப் பணி தேர்வு முடிவில் நான் முதல்வன் ஊக்கத்தொகைத் திட்டப் பயனாளிகள் 50 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில்,  2025 ஆம் ஆண்டு 56 நபர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த 56 நபர்களுள்,  39 பேர் நான் முதல்வன் மற்றும் அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையம் இணைந்து நடத்திய உறைவிடப் பயிற்சித் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அகில இந்திய குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து ஆர்வலர்களுக்கும் முதலமைச்சர் தலைமையில் விக்டோரியா பொது அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.

—   ஜோதிஜி, திருப்பூர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.