பதவி வழங்க வசூல் வேட்டை நடத்தும் திமுக மா.செ.
பதவி வழங்க வசூல் வேட்டை நடத்தும் திமுக மா.செ.
தமிழகம் முழுவதும் திமுக கழக தலைமை கழகத்தில் நிர்வாகிகளிடம் விருப்பம் மனு வாங்க உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், போடி நகராட்சியில், போடி நகர செயலாளர் பதவிக்கு திருப்பதி ஏழுமலையான் பெயரை ஒட்டிய பெயர் கொண்டவருக்கு பதவி வழங்க மாவட்ட செயலாளர் 50 லட்சம் ரூபாய் பேரம் பேசி முதல் தவணையாக 25 இலட்சம் ரூபாய் வாங்கியுள்ளதாக தகவல் கூறுகின்றனர்.
நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பின்னர் மீதித் தொகையை வாங்கிக் கொள்வதாகவும் உத்தரவாதம் அளித்துள்ளாராம். இதேபோல் மாவட்டம் முழுவதுமே கட்சி நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கு மாவட்ட செயலாளர் பெரும் தொகை பேரம் பேசி வசூல் வேட்டை நடத்தி வருவதாக திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.