மார்க்கண்டேயனான முக ஸ்டாலின்- மூத்த உபி உடைத்த ரகசியம்!
நேற்று செப்டம்பர் 21 காலை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் உள்ள அடையாறு தியோசபிகல் சொசைட்டி வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டார். மேலும் அப்போது சின்ன பையன் போல் பிங்க் கலர் டீசர்ட், கருப்பு நிற லோயரும் அணிந்து இருந்தார். அவை முதல்வரை இளைஞர் போல் காட்டியது என்று நேற்று சமூக வலைத்தளங்களில் இணைய உபிகள் தெறிக்க விட்டனர்.
மேலும் அப்போது நடைப்பயிற்சி மேற்கொண்ட ஒரு பெண்ணுடன் முதல்வர் நடத்திய கலந்துரையாடல் வைரல் ஆனது. இப்படி முதல்வருடன் அந்தப் பெண் சகஜமாகப் பேசியதும், அதற்கு முதல்வர் பதில் அளித்ததும் சுற்றியிருந்த கட்சிக்காரர்கள் அனைவரையும் ரசிக்க வைத்தது, மேலும் அது செய்தியாக வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
மேலும் அந்தப் பெண் முதல்வரிடம் கடைசியாக ஒரு கேள்வி என்று கேட்ட அந்த கேள்வி, முதல்வர் உட்பட அங்கிருந்த அனைவரையும் சிரிக்க வைத்தது, அப்படி என்ன கேள்வி அவர் கேட்டார் என்றுதானே பார்க்கிறீர்கள்…. “சார் நீங்க இப்படி மார்க்கண்டேயனாகவே இருக்கீங்க”.. என்று அந்தப் பெண் முதல்வரிடம் கேள்வி எழுப்ப முதல்வர் சிரித்துக்கொண்டே “தினமும் உடற்பயிற்சி மேற்கொள்கிறேன்” என்று பதிலளித்தார். அதற்கு அந்த பெண் “நானும் அதை யூடியூபில் பார்த்து இருக்கிறேன் சார்” என்று கூறினார்.
இதுகுறித்து நேற்று அறிவாலய வட்டாரங்கள் பேசி தான் தற்போது வெளிப்பட்ட இரகசியமாக உள்ளது.
தலைவர் தளபதியின் உடல்நிலை குறித்தும், உதயநிதியை தற்போதே முதல்வராக்க ஸ்டாலின் விரும்புவது போன்ற செய்திகள் சமீபகாலமாக பேசப்பட்டது, ஆனால் இவை அனைத்தையும் பொய்யாக்கும் விதமாகவே நேற்று ஒரு பெண் முதல்வரிடம் கூறிய வார்த்தை உள்ளது.
எப்போதுமே ஸ்டாலின் மார்க்கண்டேயன் தான், அடுத்த ஆட்சியும் நம்ம ஆட்சி தான், அடுத்த ஆட்சியில் முதல்வரும் தலைவர் தளபதி தான் என்று பேசிக் கொண்டனர்.
மேலும் சமீபத்தில் புதுக்கோட்டை சுற்றுப்பயணம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலினை வரவேற்று வைக்கப்பட்ட பதாகைகளில் அடுத்த முதல்வர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இப்படி அடுத்த முதல்வர் உதயநிதி தான் என்று தீவிரமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், இவை அனைத்திற்கும் தான் தற்போது அறிவாலய வட்டாரம் பதில் சொல்லி இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது..?
இது குறித்து திமுக தலைமை வட்டாரத்தில் விசாரிக்கும்போது, தலைவரோ பிளக்ஸ் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று கூறிவிட்டார். சமீபத்தில் நடந்த எம்எல்ஏக்கள் இல்லத் திருமண நிகழ்ச்சி, மாவட்டச் செயலாளர்கள் குடும்ப நிகழ்ச்சிகளில் கூட பிளக்ஸ் போர்டுகள் தவிர்க்கப்படுகிறது. ஆனால் இளம் உடன்பிறப்புகள் ஆர்வக்கோளாறில் தொடர்ந்து தலைமைக்கு தர்ம சங்கடம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். இது மட்டுமல்லாது சமூக வலைதளங்களிலும் கட்சி கருத்து அல்லாமல் சொந்த கருத்துக்களை பெருமளவில் பதிவு செய்து வருகின்றனர். இப்படி ஆர்வக்கோளாறு காரணமாக எழும் கேள்விகளுக்கு முடிவு கட்ட தான் தற்போது இது போன்ற பேச்சு அண்ணா அறிவாலய வட்டாரத்தில் பேசப்படுகிறது என்று கூறினார். மேலும் சமீபத்தில் விஜய்யின் மக்கள் இயக்கம் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து இருப்பதற்கான சூசகமான பதிலாகவும் இதை எடுத்துக் கள்ளலாமா என்று கேட்டதற்கு, சிரித்துக் கொண்டே சென்றார்.