நிதியமைச்சர் மீது அவதூறு – மாரிதாஸ் மீது டென்ஷனான திருச்சி திமுக!
தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து சமூக ஊடகங்களில் தவரான செய்தியை பலரும் பரப்பிவிட்டனர்.
ஆனால் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி கூட்டத்திற்கு அழைப்பு மிக காலதாமதமாக வந்ததால் கூட்டத்திற்கு செல்ல முடியவில்லை என்று குறிப்பிட்டார். ஆனால் இது தொடர்பாக தொடர்ந்த அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. இதையடுத்து திருச்சி மத்திய மாவட்ட திமுக வின் தொழில் நுட்ப அணி சார்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது அவதூறான கருத்துக்களை பரப்பி வரும் சுதா மணி, மாரிதாஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் கொடுத்திருக்கின்றனர்.
.