தமிழ்நாட்டு அரசியலில் திமுகவில் நிறுத்தப்பட்ட இஸ்லாமிய வேட்பாளா்கள் பட்டியல்
தமிழ்நாட்டு அரசியலில் திமுகவில் இஸ்லாமியரின் அரசியல் பிரதிநிதித்துவ சமூக நீதி பார்வை.
தமிழ்நாட்டின் இஸ்லாமியரின் மக்கள் தொகை 50 லட்சம் (6%) இருக்கின்றனர்.
இதுவரை திமுக சார்பில் வேட்பாளராக 41 இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு 25 பேர் வெற்றி பெற்றிருக்கின்றன .
16 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.
2021- சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் 3 இஸ்லாமியர் வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு 3 பேருமே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
( இது 2016 தேர்தலை விட 2 இடம் குறைவாக கொடுத்திருக்கிறார்கள் )
இஸ்லாமியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வரக்கூடிய
2026- சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக 8 முதல்10 வேட்பாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்.
2 அமைச்சரவை கொடுக்கப்பட வேண்டும்.
2 மக்களவை, 2 ராஜ்யசபா கொடுக்கப்பட வேண்டும்.
ஆனால் தற்பொழுது கவிஞர் ஏ சல்மா மட்டும் இஸ்லாமிய பிரதிநிதித்துவ அடிப்படையில் ராஜ்ய சபா எம் பி ஆக இருந்து வருகிறார்.
திமுகவின் மிகப் பெரும் வாக்கு வங்கியான இஸ்லாமியர்கள் தங்களது அரசியல் பிரதிநிதித்துவ சமூக நீதியை கொடுக்க வேண்டும்…
இதை செய்வார்களா.. என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…..!
திமுக சார்பில் அதிகபட்சமாக இஸ்லாமியர் வேட்பாளர்கள் 1984,1989,1991,1996,2001- ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் 8 வேட்பாளர்களை திமுக நிறுத்தியிருந்தது.
திமுக சார்பில் அதிகபட்சமாக 1996- சட்டமன்றத் தேர்தலில் 8 பேரும், 1989- சட்டமன்றத் தேர்தலில் 7 பேரும், வெற்றி பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 2021 இல் மிகவும் குறைவான 3 இடங்களில் மட்டுமே திமுக வாய்ப்பு கொடுத்திருக்கிறது.
1962-ல் 2 சீட் வழங்கப்பட்டு 1- சீட் வெற்றி
1) ராணிப்பேட்டை – அப்துல் கலீல்
2) உடுமலைப்பேட்டை – எஸ் ஜே சாதிக் பாஷா ( தோல்வி)
1967-ல் 3 பேர் போட்டியிட்டு 2 பேர் வெற்றி
1) பெரியகுளம் – கே எம் எம் மேத்தா
2) உடுமலைப்பேட்டை – எஸ் ஜே சாதிக் பாஷா
3) தென்காசி – சம்சுதீன் என்கிற கதிரவன் ( தோல்வி)
1971-ல் 2 பேர் போட்டியிட்டு 2 பேர் வெற்றி
1) உடுமலை – எஸ் ஜே சாதிக் பாஷா
2) தென்காசி – சம்சுதீன் என்கிற கதிரவன்
1977-ல் 6 இடத்தில் போட்டுவிட்டு 2 பேர் வெற்றி
1)ஆயிரம் விளக்கு – எஸ் ஜே சாதிக் பாட்சா
2) சேப்பாக்கம்- ஏ ரகுமான் கான்
3) கிருஷ்ணகிரி – எம் எம் கருமத்தல்லா (4-வது இடம் தோல்வி)
4) ஓசூர் – ஏ முகமது சலசா (4-வது இடம் தோல்வி)
5) கோவை மேற்கு – பி எஸ் முகமது அலி ( தோல்வி)
6) பெரியகுளம் – கே எம் எம் மேத்தா தோல்வி
1980-ல் 2 இடத்தில் போட்டியிட்டு ஒருவர் மட்டுமே வெற்றி.
1) சேப்பாக்கம் – ஏ ரகுமான் கான்
2) உடுமலை – எஸ் ஜே சாதிக்பாட்சா (தோல்வி )
1984-ல் 8 இடத்தில் போட்டியிட்டு 2 பேர் வெற்றி
1) சேப்பாக்கம் – ஏ ரகுமான் கான்
2) பாளையங்கோட்டை – சாம் குலாம்
3) முதுகுளத்தூர் – காதர் பாட்ஷா ( தோல்வி )
4) ராமநாதபுரம் – எம்.எஸ். அப்துல் ரஹீம் (தோல்வி )
5) பூம்புகார் – ஜமாயதீன் பாப்பா ( தோல்வி)
6) வாணியம்பாடி – ஏபி அப்துல் மஜீத் ( தோல்வி )
7) ராணிப்பேட்டை – வி எம் அப்துல் ஜாபர் (தோல்வி)
8) கடையநல்லூர் – சம்சுதீன் என்கிற கதிரவன் (தோல்வி )
1989-ல் 8 பேர் போட்டியிட்டு 7 பேர் வெற்றி
1) முதுகுளத்தூர் – காதர் பாட்ஷா
2) கடலாடி – ஏ எம் அமித் இப்ராகிம்
3) தஞ்சை – எஸ் என் எம் உபயதுல்லா
4) பூம்புகார் – எம் முகமது சித்திக்
5) வாணியம்பாடி – பி அப்துல் சமத்
6) உடுமலைப்பேட்டை – எஸ் ஜே சாதிக்பாட்சா
7) சேப்பாக்கம் – ஏ ரகுமான் கான்
8) கடையநல்லூர் சம்சுதீன் என்கிற கதிரவன் ( தோல்வி)
1991-ல் 8 போட்டியிட்டு அனைவரையுமே தோல்வி
1) தஞ்சை – எஸ் என் எம் உபயதுல்லா
2) கிருஷ்ணகிரி – டி எச் முஸ்தா அகமது
3) ராமநாதபுரம் – எம்ஏ காதர்
4) பூம்புகார் – எம் முகமது சித்திக்
5) வாணியம்பாடி – ஏ அப்துல் ஹமீது
6) ராணிப்பேட்டை – எம் அப்துல் லதீப்
7) பூங்கா நகர் – ஏ ஆர் ரகுமான் கான்
8) கடையநல்லூர் – சம்சுதீன் என்கிற கதிரவன்
1996-ல் 8 பேர் போட்டியிட்டு 8 பேர் வெற்றி
1) தஞ்சை – எஸ் என் எம் உபயதுல்லா
2) நாகை – ஜி நிசாமுதீன்
3) கூடலூர் – பிஎம் முபாரக்
4) அரவக்குறிச்சி – எஸ் எஸ் முகமது இஸ்மாயில்
5) வாணியம்பாடி – எம் அப்துல் லதீப்
6) ராமநாதபுரம் – ஏ ரகுமான் கான்
7) பாளையங்கோட்டை முகமது காதர் மைதீன்
8) கடையநல்லூர் – கே நைனா முகமது
2001-ல் 8 பேர் போட்டியிட்டு 2 பேர் வெற்றி
1) தஞ்சை – எஸ் என் எம் உபயதுல்லா
2) பாளையங்கோட்டை – டிபிஎம் மைதீன் கான்
3) பூம்புகார் – எம். முகமது சித்திக் (தோல்வி )
4) வாணியம்பாடி – ஜேஎம் அருண் ரசீத் (தோல்வி )
5) பெரியகுளம் எம் அபுதாஹீர் (தோல்வி )
6) ராமநாதபுரம் – ஏ ரகுமான் கான் ( தோல்வி)
7) திண்டுக்கல் – எம் பஷீர் அகமது ( தோல்வி )
8) கடையநல்லூர் – பி எம் சாகுல் ( தோல்வி )
2006-ல் 7 பேர் போட்டியிட்டு 4 பேர் வெற்றி
1) தஞ்சை – எஸ் என் எம் உபயதுல்லா
2) அரவக்குறிச்சி – எம் எ கலிலூர் ரகுமான்
3) வாணியம்பாடி – ஹச் அப்துல் பாசித்
4) பாளையங்கோட்டை – டிபிஎம் மைதீன் கான்
5) பூங்கா நகர் – ஏ ரகுமான் கான் ( தோல்வி )
6) புதுக்கோட்டை – எம் ஜாபர் அலி ( தோல்வி )
7) மருங்காபுரி – ரெக்கையா மாலிக் என்கிற ஏ சல்மா ( தோல்வி)
2011-ல் 5 பேர் போட்டியிட்டு ஒருவர் மட்டுமே வெற்றி
1) பாளையங்கோட்டை – டிபிஎம் மைதீன் கான்
2) நாகை – முகமது ஷேக் தாவூத் (தோல்வி )
3) தஞ்சை – எஸ் என் எம் உபயதுல்லா (தோல்வி )
4) வாணியம்பாடி – ஹெச் அப்துல் பாசித் (தோல்வி )
5) ஆயிரம் விளக்கு – ஹசன் முகமது ஜின்னா (தோல்வி)
2016-ல் 5 பேர் போட்டியிட்டு 2 பேர் வெற்றி
1) செஞ்சி – கே எஸ் மஸ்தான்
2) பாளையங்கோட்டை – டிபிஎம் மைதீன் கான்
3) குன்னூர் – பி எம் முபாரக் (தோல்வி )
4) ஆவடி – சா.மு. நாசர் ( தோல்வி)
5) திண்டுக்கல் – எம் பஷீர் அகமது (தோல்வி )
2021-ல் 3 இடத்தில் போட்டியிட்டு 3 வெற்றி
1) செஞ்சி – கே எஸ் மஸ்தான்
2) ஆவடி – சா.மு.நாசர்
3) பாளையங்கோட்டை – எம் அப்துல் வஹாப்
திமுகவில் மிக முக்கிய ஆளுமை மிக்க இஸ்லாமிய அரசியல்வாதிகள்
1) அ. ரகுமான் கான்
9 முறை போட்டுவிட்டு 6 முறை வெற்றி பெற்றவர்.
( அவரது மகன் DR.அ. சுபேர் கான் தற்போது திமுகவில் மாநில சிறுபான்மையின் நலப் பிரிவு செயலாளர், தமிழ்நாடு வகப்பு வாரியம் நலவாரிய உறுப்பினர் பொறுப்பில் தற்போது இருந்து வருகிறார் )
2) SNM. உபயதுல்லா
6 முறை போட்டியிட்டு 4 முறை எம் எல் ஏ
2006- திமுக அமைச்சரவையில் வணிகவரித்துறை அமைச்சராக இருந்தார்.
3) TPM. மைதீன் கான்
( முன்னாள் நெல்லை மாவட்ட பொறுப்பாளர்)
2001,2006,2011,2016- பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் ஒரே தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்றவர் 2006- திமுக அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர்.
3) எஸ் ஜே சாதிக் பாஷா
திமுகவின் முன்னாள் மாநில பொருளாளராக இருந்தவர்.
1967- அண்ணா அமைச்சரவையிலும், அண்ணாவின் மறைவுக்குப் பிறகு அமைந்த 1969, 1971,1989- கலைஞர் அமைச்சரவையிலும் சிறப்பாக பணியாற்றியவர்.
எஸ் ஜே சாதிக்கின் தம்பி மகன் M. மத்தின்
உடுமலைப்பேட்டை முன்னாள் நகர செயலாளராகவும், நகர மன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
4) சம்சுதீன் என்கிற கதிரவன்
2 முறை போட்டுவிட்டு இரண்டு முறை வெற்றி பெற்றவர்.
கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் 1 முறையும், தென்காசி சட்டமன்றத் தொகுதியில் ஒரு முறையும் வெற்றி பெற்றவர்.
6 முறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 4 முறை எம் எல் ஏ -வாக சிறப்பாக செயல்பட்டவர்.
இதுவரை திமுக வரலாற்றில் ஒரே ஒரு இஸ்லாமியர் பெண்ணுக்கு மட்டும் வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது.
2006- மருங்காபுரி சட்டமன்ற தொகுதியின் கவிஞர் ஏ சல்மா போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக சார்பாக 3 எம்எல்ஏக்கள்
1) ஆவடி – சாமு நாசர்
2) செஞ்சி – கே எஸ் மஸ்தான்
3) பாளையங்கோட்டை – மு அப்துல் வகாப்
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 2 எம்எல்ஏக்கள்
1)மணப்பாறை – ப. அப்துல் சமத்
2) பாபநாசம் – பேராசிரியர் ஜவாஹிருல்லா








Comments are closed, but trackbacks and pingbacks are open.