வளர்ச்சி வேண்டுமா ? ஜாதி வேண்டுமா ? மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. கதிரவன் நறுக் !
ஜாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் மட்டுமே வாக்குகளை பெற உங்களைத் தேடி வரும், இதுவரைக்கும் தொகுதியின் வளர்ச்சிக்காக கடுகளவு கூட எதுவுமே செய்திராத எதிர்கட்சியினருக்கு நீங்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
வளர்ச்சி வேண்டுமா? ஜாதி வேண்டுமா? மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. கதிரவன் நறுக்!
மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.கதிரவன் மண்ணச்சநல்லூர் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடர்ந்து வருகிறார். ஏப்ரல்13 அன்று, புலிவலம், திண்ணனூர், சாத்தனூர், மற்றும் காட்டுக்குளம் ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் தெருத்தெருவாக சென்று பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மண்ணச்சநல்லூர் தொகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன. புலிவலத்தில் மட்டும், எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சிமெண்ட் சாலைகள், ஸ்மார்ட் வகுப்பறைகள், பல்நோக்கு மையம், தார் சாலைகள், குடிநீர் வசதி, வடிகால் வசதிகள், பேவர் பிளாக் சாலைகள் என பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் ரூபாய் 14 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இதேபோன்று திண்ணனூர் ஸ்ரீரங்கனூரில் ரூபாய் 54 லட்சம், மதிப்பிலும், சாத்தனூர் மேட்டூரில் 34 லட்சம் மதிப்பிலும், சாத்தனூரில் ரூபாய் 2 கோடியிலும், சுப்ரமணியபுரத்தில் 44 லட்சத்திலும், இலுப்பையூரில் 20 லட்சத்திலும், திண்ணனூரில் 3.4 கோடியிலும், பி. மணியம்பட்டியில் 82 லட்சத்திலும், பெரமங்கலத்தில் 4.4 கோடியிலும், காட்டுக்குளம் உடையாம்பட்டியில் 1.9 கோடியிலும், சின்ன காட்டு குளத்தில் 1.05 கோடியிலும், காட்டுக்குளத்தில் 2.22 கோடியிலும், மூவானூரில் 5.25 கோடியிலும், வேங்கைமண்டலத்தில் 7.84 கோடியிலும் என மண்ணச்சநல்லூர் தொகுதியின் ஒவ்வொரு கிராமங்களிலும் தேவையான அடிப்படை வசதிகள் பார்த்து பார்த்து செய்யப்பட்டுள்ளன.
அதோடு தமிழகத்தில் எந்த தொகுதி மக்களுக்கும் கிடைக்காத வகையில் மண்ணச்சநல்லூர் தொகுதி மக்களுக்கு மருத்துவ வசதி, தொடர்ச்சியாக இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் மண்ணச்சநல்லூர் பகுதியில் மருத்துவ சேவை, ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனையை பொறுக்க முடியாமல் தான் எதிர்க்கட்சியினர் என் மீது, அபாண்டமான அவதூறுகளை பரப்பி வருகின்றனர். இவற்றிற்கெல்லாம், என் தொகுதி மக்களாகிய நீங்கள் எனக்கு மீண்டும் அளிக்கும் வெற்றி மூலம் பதிலடி கொடுக்க வேண்டும்.
ஜாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் மட்டுமே வாக்குகளை பெற உங்களைத் தேடி வரும், இதுவரைக்கும் தொகுதியின் வளர்ச்சிக்காக கடுகளவு கூட எதுவுமே செய்திராத எதிர்கட்சியினருக்கு நீங்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
நான் மீண்டும் வெற்றி பெற்றவுடன், விவசாயிகள் வடிகால் பிரச்சனை, வாய்க்கால் தூர்வாருதல் போன்ற பணிகளுக்காக மண்ணச்சநல்லூர் பகுதியில் ஒரு யூனியனுக்கு ஒரு ஜேசிபி மற்றும் ஹிட்டாச்சி இயந்திரம் வாங்கி தருவேன்.
மண்ணச்சநல்லூர் தொகுதி முழுவதும் மக்களுக்கு சுகாதாரமான தூய்மையான குடிநீர் 24 மணி நேரமும் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சி மாவட்டத்தில் முக்கிய வணிக நகரமாக வளர்ந்து வரும் மண்ணச்சநல்லூரில் புதிய பிரம்மாண்டமான பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ள அனைத்து திட்டங்களும் மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு முதன்மையாக கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பேன்.
கடந்த ஐந்து ஆண்டுகள் மண்ணச்சநல்லூர் மக்கள் எப்படி அமைதியாக, சுதந்திரமாக, பாதுகாப்பாக, வாழ்ந்தீர்களோ அதே நிலை தொடர, மண்ணச்சநல்லூர் தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரான எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.” இவ்வாறு கதிரவன் பேசினார்.
அங்குசம் தேர்தல் செய்திக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.