அந்த விஷயம் நடிகர் விஜய்க்கு தெரியுமா?

0

நடந்து முடிந்த முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில்169 இடங்களில் போட்டியிட்டு 115 இடங்களில வெற்றி பெற்றுள்ளனர். இது விஜய்யின் அரசியல் எண்ட்ரிக்கு கொடுத்த டானிக்காக கருதப்பட்டது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அவரது ரசிகர்கள் களத்தில் இறங்கினர். ஊரக உள்ளாட்சியின் முதற்கட்ட தேர்தலில் கிடைத்த வெற்றி இயக்கத்தின் தலைமையை பெருமளவு சிந்திக்க வைத்தது. அதாவது யார் யாரை போட்டியிட அனுமதிப்பது என்கிற அளவிற்கு சிந்திக்க வைத்துள்ளது.

https://businesstrichy.com/the-royal-mahal/

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஒருபுறம் தேசிய கட்சியே தமிழகத்தில் போட்டி­யிட ஆட்கள் இல்லாமல் தேடும் சூழல் ஏற்பட்ட நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினரோ ஆர்வமாக களமிறங்கிய அவரது ரசிகர்களை வடிகட்டும் இடத்திற்கு வரத் தொடங்கினர். திருச்சி மாநகராட்சி 35வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் கார்த்திக் என்பவர் போட்டியிட விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் விருப்ப மனு தாக்கல் செய்தார். பிறகு கார்த்திக்கிற்கு சீட் உறுதி செய்யப்பட்டு அவரும் பிரச்சார களத்தில் இறங்கினார். இந்நிலையில் விஜய் ரசிகர் மன்றத்திலேயே இல்லாத நவாஸ் அலி என்பவருக்கு சீட்டு ஒதுக்கப்பட்டது. இதனால் வெறுப்பான கார்த்திக் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொறுப்பாளர் புஸ்ஸியிடம் நியாயம் கேட்க, ”தேர்தலில் செலவு செய்பவர்களுக்கு தான் சீட்டு” எனக் கூற அதற்கு கார்த்திக், ”நானும் செலவு செய்கிறேன்” எனக் கூற புஸ்ஸியோ, ”நீ செலவு செய்து கடனாளியாகாதே அவன்கிட்ட காசு இருக்கு அவனே நிற்கட்டும்” எனக் கூறி அனுப்பிவிட்டார்.

விஜய்க்காகவும் மன்றத்திற்காகவும் கொடி கட்டி, போஸ்டர் ஒட்டி இயக்கத்தை வளர்த்த நிர்வாகிகளுக்கு கடைசியில் இந்த நிலை தானா என புலம்பித் தள்ளிவிட்டார் கார்த்திக். நவாஸ்அலிக்கு சீட் வழங்கியது அந்த வார்டின் விஜய் ரசிகர்களே ஏற்கவில்லை என்பதால், விஜய் ரசிகர்களின் முழுமையான ஆதரவின்றி களமிறங்கிய நவாஸ்அலி வெறும் 387 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்துள்ளார்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இதே போல் திருச்சி மாவட்டத்தில் உள்ள மற்றொரு வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தேர்தலில் போட்டியிட ரசிகர் ஒருவருக்கு தலைமை அனுமதி தராததால், சுயேட்சையாக போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து தலைமை அவரை கூப்பிட்டு, “விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நின்று வெற்றி பெற்றதாக மீடியாவிற்கு சொல்“ என பிரஷர் தந்துள்ளார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.